கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ஒவ்வொரு தேவ பிள்ளையும் தன்னைத் துதித்துத் தொழுதுகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இதற்காகவே தேவன் மனித னைப் படைத்தார். நம் இந்திய நாட்டில் மனித ஆராத னைகள், விக்கிரக ஆராதனைகள் அதிகமாய் நடை பெற்று வருகிறது. ஒரு மனிதனை தேவ பிரதிநிதியாகக் கருதி, அவன் மகா பரிசுத்தவான் என்று முத்திரைக் குத்தி அவனை சாஷ்டாங்கமாய் விழுந்து பணியும் வழக்கம் நம் நாட்டில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. பேதுரு வின் காலில் கொர்நேலியு விழும்போது நான் மனிதன்தான் எழுந்திரு என்று பேதுரு கூறுவதை அப்.10:25ல் பார்க்கிறோம்.
தேவ தூதர்கள் பணிவிடை ஆவிகள் அவர்களை வணங்கலாகாது. இன்று நவீன உலகில் சாத்தானை வணங்கும் ஒரு கூட்டத்தாரைப் பார்க்கிறோம். இவர்கள் பேய்களுக்கு ஆராதனை செய்யும் கூட்டத்தார் (உபா.32:17). இவர்களுக்கு எச்சரிக் கையாயிருக்க வேண்டும். விக்கிரக ஆராதனை செய்யக்கூடாது (2இராஜா.21:3). இயேசுவைப்போல கூட விக்கிரகங்களைச் செய்து அவற்றை ஆராதிக்கக் கூடாது (யாத்.20:23). நம் தேவன் நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிற தேவன். அவர் பேசாத கல்லோ, மண்ணோ, மரமோ அல்ல. சிருஷ்டிகரை தொழுது சேவிக்காமல் சிருஷ்டியை தொழுது சேவிக்கிறார்கள் (ரோமர் 1:25). வான சேனைகளையும், சந்திர சூரியனையும் சேவிக்கக்கூடாது. மரியாளை சேவிப்பது தவறு. தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்ததன் நோக்கம் தம்மை ஆராதிக்க வேண்டும் என்பதே (யாத்.7:16). சாத்தானும் தன்னை ஆராதிக்க வேண்டுமென்று விரும்புகிறான் (மத்.4:9,10). இயேசு வனாந்தரத்தில் சோதிக்கப் படுகையில் பிசாசு தன்னை வணங்கும்படி கூறினான். இயேசுவோ “அப்பாலே போ சாத்தானே, கர்த்தரைப் பணிந்துகொண்டு தேவனை ஆராதி” என்றார். சிலருக்கு பணம் தெய்வமாக இருக்கிறது. சிலருக்கு வயிறு தெய்வமாக இருக்கிறது.
தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் (யோவான் 4:24). ஆவியினால் நிறைந்து அவரை ஆராதிக்க வேண்டும் (எபே.5:18). இது பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம். ஆராதிக்கும்போது உள்ளம் தூரமாக இருக்குமானால் அது வீண் ஆராதனை. முழு இருதயத் தோடும், முழு ஆத்துமாவோடும் உடல், பொருள், ஆவி மூன்றும் சேர்ந்து தேவனை ஆராதிக்க வேண்டும். மாயையான ஆராதனை செய்யக்கூடாது. நன்றியுடன் உண்மையாக தொழுதுகொள்ள வேண்டும். மாம்சத்தின் மேல் நம்பிக்கையாயிராமல் ஆவியினால் ஆராதிக்க வேண்டும். (பிலி.3:3)
நாம் எப்படி தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதையும் ஆராதனையினால் உண்டாகும் பயன்கள் எவை என்பதையும் இங்கு பார்க்கலாம்.
நாம் எப்படி தேவனை ஆராதிக்க வேண்டும்?
1) பரிசுத்த அலங்காரத்துடன் தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும் (1நாளா.16:29)
ஆரோனும் அவனது குமாரரும் பரிசுத்த வஸ்திரங் களைத் தரித்திருந்தபடியால் தேவ சமூகத்தில் ஆராதிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்காக பரிந்து பேசி ஜெபிப்பவர்கள். அவர்கள் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். பரிசுத்தமாயிராவிட்டால் தேவன் அவர்களை அடிப்பார். அவர்கள் தேவ சமூகத்தில் மரிப்பார்கள். தேவன் அங்கீகரிக்கும் பரிசுத்தம் தேவை. மாய்மாலமாக தேவனை ஆராதிக்க முடியாது.
2) தன்னையே ஜீவபலியாக ஒப்புவித்து ஆராதிக்க வேண்டும் (ரோமர் 12:12)
ஐம்புலன்களையும் தேவனுக்கு அர்ப்பணித்து நம்மை முழுவதும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஆராதிக்க வேண்டும். நமது அவயவங்களை நீதிக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆவியினால் நிறைந்து கர்த்தரைப் பாடி கீர்த்தனம் பண்ண வேண்டும் (எபே.5:18,19). துதியுடன் பாடி கெம்பீர சத்தத்துடன் ஆராதிக்க வேண்டும் (சங். 95:1,2). பணிந்து, குனிந்து முழங்கால் படியிட்டு ஆராதிக்க வேண்டும் (சங்.95:6).
பரலோகத்தில் துதி மட்டுமே காணப்படுகிறது (வெளி.4:8). நான்கு ஜீவன்களும் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில் லாமல் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். தூதர்கள் தங்கள் இரு செட்டைகளால் தலையை மூடி தம் மறு இரு செட்டைகளால் கால்களை மூடி தேவனைத் துதிக்கிறார்கள். மூப்பர்கள் சிங்காசனத்தை விட்டு இறங்கி தங்கள் கிரீடங்களை தேவனுக்கு முன்பாக வைத்து ஆராதித்தார்கள். இது தாழ்மையுடன் தேவனுக்கு ஆராதனை செய்வதைக் காட்டுகிறது.
ஆராதனையினால் உண்டாகும் பயன்கள் எவை?
1) நாம் ஆராதிக்கும்போது தேவன் நமக்கு சமீபமாக இருக்கிறார் (உபா.4:7)
தேவன் துதியின் மத்தியில் வாசம் பண்ணுகிறார், தனித்தோ, கூடியோ மனப்பூர்வ மாக பாடித் துதித்து பணிந்து குனிந்து ஆவியோடு ஆராதிக்கும்போது பரிசுத்த தேவன் நம் சமீபமாக வருகிறார். ஆராதிக்கும் மனிதனான தாவீது குற்றமில்லாமல் தன்னைக் கழுவி சுத்திகரித்துக் கொண்டு பாடித் துதித்து ஆராதித்தான்.
2) ஆராதிக்கும்போது தேவன் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்துகிறார்
ஏனோக்கு தேவனோடு தனித்து ஆராதித்தான், நோவா குடும்பத்தோடு ஆராதித்தான் (ஆதி.8:20). அந்நாட்களில் பலிபீடம் கட்டி பலி செலுத்தி ஆராதித்தார்கள். பலி அங்கீகரிக்கப் படுவதற்கு அடையாளமாக, வானத்திலிருந்து அக்கினி இறங்கி அந்தப் பலியை பட்சிக்கும், ஆபிரகாம் தேவனுடன் ஒரு சிநேகிதனைப் போல பேசி வந்தான். (ஆதி.12:8, ஆதி.13:18) ஆபிரகாம் போகுமிடமெல்லாம் பலிபீடம் கட்டி தேவனை ஆராதித்து வந்தான். அதனால் ஆபிரகாமுக்குத் தேவன் தமது திருவுள்ளத்தை வெளிப்படுத்தி வந்தார். (ஆதி.26:24) ஈசாக்கும் யாக்கோபும் தேவனுக்குப் பலிபீடம் கட்டி அவரை ஆராதித்தனர்.
3) ஆராதிக்கும்போது சிறையின் அஸ்திபாரங்கள் அசைந்தது, கதவுகள் திறந்தது
பவுலும், சீலாவும் நடுராத்திரியில் தேவனைத் துதித்துப் பாடி ஆராதித்தனர். (அப்.16:25,26) தேகமெல்லாம் காயம், கை கால்களில் விலங்குகள், தொழுமரத்தால் மாட்டப்பட்ட சூழ்நிலையில் தேவனைத் தொழுதுகொண்டார்கள். அப்பொழுது சிறைச்சாலையின் கதவுகள் திறந்தது. ஆராதிக்கும் போது பரலோகம் இறங்கி வருகிறது. கட்டுகள், பிரச்சனைகள், பாடுகள், வியாதிகள், கடன்கள் போன்றவை உடைக்கப்படுகிறது.
4) ஆராதிக்கும்போது தேவன் தப்புவிக்க வல்லவராக இருக்கிறார்
தானியேல் இடைவிடாமல் ஆராதிக்கிறவனாக இருந்தான். பல போராட்டங்கள், விரோதமான சூழ்நிலைகள், அரசாங்க எதிர்ப்புகள் நடுவிலும் தேவன் தானியேலை தப்புவித்தார். (தானி.6:20) சிங்கங்களின் வாயை தேவன் கட்டிப்போட்டார். சிங்கங்கள் சக்தி வாய்ந்தது. இது பிசாசு மற்றும் மனித வல்லமையைக் குறிக்கிறது. ஆராதிக்கும்போது மனுஷ ஆவிகளையும் பிசாசின் ஆவிகளையும் கட்ட முடிகிறது.
5) ஆராதிக்கும்போது ஜெயம் உண்டாகிறது
யோசபாத் தேவனைத் துதித்துத் துதித்துப் பாடி ஆராதித்தபோது யுத்தத்தில் வெற்றி கிடைத்தது (2நாளா.20:21,22) யோசுவா இஸ்ரவேலருடன் தேவனை ஆராதித்த போது எரிகோக் கோட்டை விழுந்தது. யோசபாத் தனக்கு எதிராக வந்த மாபெரும் சேனையை ஜெயிக்க தேவனை ஆராதித்தான். ஆராதிக்கும்போது ஆவியானவர் அமோகமாக இறங்கி வந்து வெற்றியைத் தருகிறார்.
6) ஆராதிக்கும்போது தேவன் வல்லமையாக இறங்குகிறார்
மேல்வீட்டறையில் நூற்றிருபது பேர் தேவனின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்து துதித்து ஆராதித்தனர். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக இறங்கினார் (அப்.2:1). பரிசுத்த ஆவியானவர் வரும்போது விடுதலை உண்டாகிறது. பாவத்தைக் குறித்துக் கண்டிப்பு உண்டாகிறது.
7) ஆராதிக்கும்போது வரங்கள் கிரியை செய்கிறது (1கொரி.14:26)
ஆராதிக்கும்போது வரங்கள் கிரியை செய்கிறது. ஆனால் அதற்கு ஒழுங்கும் கிரமமும் தேவை. ஆவியோடும் கருத்தோடும் விண்ணப்பம்பண்ணி பாடும்போது வரங்கள் சபை நடுவே கிரியை செய்கிறது.
8) ஆராதிக்கும்போது தேவ ஆவியானவர் மூலம் தேவனின் திருவுளம் வெளிப்படுகிறது (அப்.13:2)
சீஷர்கள் கூடி ஜெபித்துக்கொண்டிருந்த வேளையில் பவுலையும் பர்னபாவையும் தான் அழைத்த ஊழியத்திற்காக பிரித்துவிடும்படி பரிசுத்த ஆவியானவர் மூலம் தேவன் திருவுளம் பற்றினார். ஆராதிக்கும் போது தேவ சித்தம் வெளிப்படுகிறது.
9) ஆராதிக்கும்போது தேவ மகிமை வெளிப்படுகிறது (2நாளா.5:13,14)
ஆசாரியர்களும், பாடகரும், தேவ ஜனங்களும் தேவனை ஆராதித்து மகிழ்ந்தபோது தேவாலயம் தேவ மகிமையால் நிறைந்தது. தனித்தோ, குடும்பமாகவோ, சபையாகவோ, உண்மையாக ஆராதிக்கும்போது தேவ மகிமை வந்து இறங்குகிறது.
10) ஆராதிக்கிறவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார்
தேவனை ஆராதிக்கிறவர்கள் மேல் தேவன் மழையை வருஷிக்கப் பண்ணுகிறார் (சகரியா 14:17). மழை ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. தாவீது தேவனைத் துதித்துப் பாடி ஆராதிக்கிறவனாக இருந்தபடியால் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்றான். தாவீது அரசனானபோது தேவாலயத்தில் ஒழுங்கு முறைகளைக் கடைபிடித்து ஆராதிக்க பாடகர் குழுவை நியமித்தான். வாத்தியக் கருவிகளை உபயோகித்து பாடினான். தாவீது தேவனை ஆவியில் ஆராதித்தான். தேவனை ஆராதிக்கிறவர்களையே ஆசீர்வாதங்கள் தேடி வருகிறது.
பிரியமானவர்களே! ஆராதிக்கும்போது உண்டாகும் ஆசீர்வாதங்களை உணர்ந்து நம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் பணிந்து குனிந்து ஆராதித்து தேவ ஆசீர்வாதம் பெறுவோமாக!
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
இயேசு கிறிஸ்துவின் வருகையிவே நியாயத்தீர்ப்பு அன்றியும் மனுஷ குமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த...