ஊழியஞ் செய்ய கொஞ்சம் உலக அறிவும் வேணும்

December 1, 2018

சுவிசேஷப் பிரபல்யமே ஆண்டவரின் பிரதானக் கட்டளை என்பதையும் அதுவே திருச்சபையின் தலையாயப் பணி என்பதையும் அனைவரும் உறுதியாய் நம்பினாலும், அநேகர், இந்நாட்களில்…
“அறியாத மக்களிடம், ஆண்டவரை, அகத்தியமாய் அறிவிக்க, எங்களிடம் பணம் இல்லை” என அங்கலாய்க்கிறார்கள்.


கால் நூற்றாண்டாக, உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வரும் அனுபவத்தைக் கொண்டு, நமது ஊழிய அணுகுமுறைகளை, சற்று உற்று கவனித்துப் பார்த்தால், பல தேவையற்ற செலவீனங்களை குறைக்கக் கூடிய வாய்ப்புகளை கவனித்திருக்கிறேன். குறிப்பாக, பிரபல வர்ண உற்பத்தியாளர்கள், தாங்கள் தயாரிக்கும் வர்ணங்கள் (Paints) “7 ஆண்டுகள்” நிலைத்திருக்கும் என உத்திரவாதம் (guarantee) தருகிறார்கள்.
“இதை சரியாக கவனிக்காத நம்ம ஆளுங்க, வருடமொருமுறை பெயிண்ட் அடிச்சே, எல்லா பணத்தையும் காலியாக்குறாக, பின்னாடி காசு இல்லன்னு பொலம்புறாக” இத எங்கப் போயி சொல்லுறது.


சில தேவையற்ற “வர்ணம் பூசும் திட்டங்களை” கைவிட்டாலே, பல கிராமங்களில் ஆலயங்கள் வந்துவிடும், சிறு கிராமங்களில், ஆதரவின்றி ஊழியஞ் செய்யும் எண்ணற்ற கிராம ஊழியர்களுக்கு, தங்கள் குழந்தைகளை, குறைந்த பட்சம் பள்ளிக் கூடத்திற்காவது அனுப்பிட, “சிறிய உதவி” கிடைத்திடும்.
இதை விட்டுவிட்டு,
    பச்சை கலரு, ரோசா கலராகவும்
    மஞ்ச கலரு, செகப்பு கலராகவும் மாறிக்கொண்டே இருக்கும்வரை….
    பாழான கிராமங்கள் பாழாகவே கிடக்கும்.
நான் பணியாற்றும் நிறுவனத்தில், ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அவர்கள், இந்த பெயிண்ட் நிறுவனங்களின் வழிகாட்டுதலை, சரியாக கடைபிடித்து, செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, சிறந்த லாபத்தை ஈட்டுவதை கவனித்திருக்கிறேன். இதில் சிறப்பு என்னவெனில், நான் பணியாற்றும் இந்த நிறுவனமே, உலகில் முதன்முதலாக, பெயிண்டை 1902ஆம் ஆண்டில் கண்டுபிடித்தவர்கள். இன்றுவரை, உலகமெங்கும் வர்ணத் தொழிலுக்கான மூலப்பொருட்களைத் தயாரிப்பவர்கள். நல்ல வளர்ச்சி பெற்றவர்கள்.
இவர்களே கடைபிடிக்கும்போது, நாம் ஏன் கடைபிடிக்கக் கூடாது? நமது அணுகு முறைகளை மாற்றுவோம்! பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்ப்போம்!!


“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங் கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்.6:19,20)



Author

You May Also Like…

Share This