பெண்களா? கற்சிலைகளா?

Written by Reverent Selvakumar

April 23, 2021

முழு உலகத்தையும் தன் குடைக்குள் கொண்டுவந்த அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் பாரசீகப் படையெடுப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. மிகுந்த சிரமத்திற்குப்பின் அலெக்சாண்டரின் படைகள் பாரசீகத்தைப் பிடித்தது. பாரசீகத்தை வெற்றிக்கொண்ட பின்பு கையில் கிடைத்ததையெல்லாம் படை வீரர்கள் கொள்ளை யிட்டுக் கொண்டிருந்தார்கள்.


இது ஒருபுறமிருக்க, சாதாரணப் படை வீரன் முதல் படைத்தலைவர் வரை கண்ணில் கண்ட அழகிய பாரசீகப் பெண்களை எல்லாம் மானபங்கம் செய்ய இழுத்துச் சென்றுகொண்டிருந்தனர். இழுத்துச் செல்லப்பட்ட பெண்களின் கதறலின் கண்ணீர் சிதறல்கள் ஏனோ எரியும் அவர்களின் காமதீக்கு முன்பாக காணாமல் போய்விட்டது.


இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவி அரண்மனையில் ஓய்வில் இருந்த அலெக்சாண்டரின் காதுகளை வந்து எட்டியது. விரைந்து செயல்பட்ட அலெக்சாண்டர், எல்லாப் படை வீரர்களும் உடனடியாக அரண்மனைக்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கட்டளையிட்டார். அதிர்ந்துபோன படை வீரர்கள், பெண்களை அப்படியே விட்டுவிட்டு அதிவேகமாக அரண்மனையை நோக்கி விரைந்தனர்.


கூடியிருந்த படை வீரர்களின் மத்தியில் உரையாற்றிய அலெக்சாண்டர், “உங்களைப்போல நானும் இந்த பாரசீகப் பெண்களின் அழகால் ஈர்க்கப்பட்டு, நிலை தடுமாறினது உண்மைதான்! ஆனால், என் நெஞ்சம் இன்னும் கட்டுப்பாட்டை இழக்கவில்லை. அதனால்தான் அந்தப் பெண்கள் எனக்கு வெறும் கற்சிலையாகத் தான் தெரிகிறார்கள். பகைவரை வெல்வதைவிட உங்களுக்குள் இருக்கும் புலன்களை வெல்வதுதான் அழகு” என்று ஆலோசனை சொல்லி படை வீரர்களை அனுப்பி வைத்தான்.


அழிந்துபோகும் உலகில் வெற்றிபெற விரும்புகிறவர்கள் கூட மனதை அடக்கியாளும்போது உன்னதராம் இயேசுவோடு நித்திய நித்தியமாய் வாழவிரும்பும் நாம் எவ்வளவு மனக்கட்டுப்பாட்டுடன் (இச்சையடக்கம்) இருக்க வேண்டும்.


எனதருமை வாலிபத் தம்பி தங்கைகளே! உங்களுக்குள் பருவ மாற்றத்தால் உருவாகும் ஹார்மோன்களின் எழுச்சி என்பது இயல்பானது. ஆனால், எந்த சூழ் நிலையிலும் அந்த ஹார்மோன்கள் உங்கள் மனதை சிறைப்பிடிக்க விட்டுவிடாதீர்கள்! விட்டுவிட்டால், மரம்விட்டு மரம் தாவும் குரங்குபோல உங்கள் மனம் அலைபாயத் தொடங்கிவிடும். எப்போது உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை மீறுகிறதோ அப்போதே சாத்தான் வாசற்படியில் வந்துவிட்டான் என்பதற்கான அபாயச் சங்கு ஒலித்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்!


“தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்” (நீதி.25:28) என்று பரிசுத்த வேதமும் பறைசாற்றுகிறதே! (Like a city whose walls are broken through is a person who lacks self-control)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This