கிறிஸ்துவுக்காக படுகிற பிரயாசம் விருதாவாயிராது!

Written by Pr Thomas Walker

July 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

பவுல் அப்போஸ்தலன் தான் கட்டி உருவாக்கிய சபைகளுக்காகவும், இஸ்ரவேலரின் இரட்சிப்புக்காகவும், தேவ இராஜ்ஜியம் கட்டப்படவும் அதிகமாக பிரயாசப்பட்டார். 1கொரி.15:58 வசனத்தில் “…எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” என்று வலியுறுத்துகிறார். நமது பிரயாசங்கள் நற்கிரியைகளைக் கொண்டுவரும். நாம் எந்தெந்த காரியங்களில் பிரயாசப்பட வேண்டும் என்று ஆராய்ந்து பார்ப்போம்.

1. உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்:

பிலி.2:12ஆம் வசனத்தில், “…அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்” முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்கிறார் இயேசு. ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை நாம் முடிவுபரியந்தமும் காத்துக்கொள்ள வேண்டும். நாம் அஜாக்கிரதையாய் இருந்தால் இழக்கவும் நேரிடும். ஆகவே பயத்தோடும், பக்தியோடும் பரிசுத்தமாய் வாழவேண்டும். தாவீது இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்தார். எனவே தேவனிடம் கெஞ்சி மன்றாடினார். உரியாவின் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டதால் பாவ மன்னிப்புக்காக மன்றாடினார். சங்.51:12ல் “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” என்று கேட்கிறார்.

2. நாம் துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்க பிரயாசப்பட வேண்டும்:

பிலி.1:11ஆம் வசனத்தில் “நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.” மேலும், 3யோவான் 12ஆம் வசனத்தில் “தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்” சாட்சியுள்ள வாழ்க்கை மிகவும் அவசியம். பெருமை, பொருளாசையினால் இரட்சிப்பை இழந்துவிடாதே; நமது பார்வை, உடை, நடை, ஜீவியம் இடறலற்றதாக காணப்பட வேண்டும். தேவனின் நோக்கம் நம்மில் நிறைவேற வேண்டும். சத்திய வசனத்தின்படி நடந்தால் பேதையராயினும் திசைகெட்டுப் போவதில்லை.

3. தேறினவர்களாக நிறுத்தப் பிரயாசப்பட வேண்டும்:

கொலோ.1:28,29ஆம் வசனங்களில் “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.” கர்த்தரின் கை குறுகவில்லை, யாரையும் இரட்சிக்க தேவனால் கூடும். கர்த்தர் எல்லாரையும் இரட்சிக்கவே பாடுபட்டார். ஒருவரும் கெட்டுப்போவது அவர் சித்தமில்லை. தேறினவர்களாக ஒவ்வொருவரையும் மாற்ற அவருடைய பெலத்தினால் போராடிப் பிரயாசப்பட வேண்டும்.

4. பெலவீனரைத் தாங்க பிரயாசப்பட வேண்டும்:

அப்.20:35 “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்…” ஏழை, வியாதியஸ்தர், அங்கவீனர், குருடர், செவிடர், விசுவாசத்தில் பலவீனர்களைத் தாங்காவிட்டால் நாம் பெலவான்கள் என்று சொல்வது விருதா. நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். ஆயமந அந ய உhயnநேட டிக க்ஷடநளளiபே என்று ஜெபிக்க வேண்டும். நல்ல சமாரியன், ஆசாரியன், லேவியன் இந்த மூவரில் நல்ல சமாரியனே மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தான்.

5. திருடாமல் வேலைசெய்து பிரயாசப்பட வேண்டும்:

எபே.4:28 “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்”

6. பரிசுத்தவான்களுக்காக பிரயாசப்பட வேண்டும்:

ரோமர் 16:6 “எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள்” ரோம சபையார் பரிசுத்தவான்களுக்காக பணிவிடை செய்தார்கள். சூனேமியாள் எலிசா தீர்க்கதரிசிக்குப் பணிவிடை செய்தாள். கட்டில், விளக்கு, நாற்காலி போட்டு உபசரித்தாள். எலியாவுக்கு சாறிபாத் ஊர் விதவை உபசரித்தாள். “நீர் எனக்கு தயை செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்வார்கள்” பணிவிடை ஆவி உள்ளவர்களாக வாழ வேண்டும்.

7. அன்பின் பிரயாசம் தேவை:

எபி.6:10 “…உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” பவுல் கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்கிறார். தேவ அன்பினால் ஊழியம் செய்ய வேண்டும்.

அன்பு நண்பரே! நாம் இளைப்படையாமல் பிரயாசப்பட வேண்டும். அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் கூட வருகிறது என்கிறார். எனவே சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்ய வேண்டும். இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்பட வேண்டும். கிறிஸ்துவுக்கு முன்பாக துப்புரவானவர்களாயிருக்க பிரயாசப்பட வேண்டும். சபைக்கு ஆட்களை கொண்டுவர பிரயாசப்பட வேண்டும். சபையின் நோக்கம் நாம் பூரணப்பட வேண்டும். மக்களைத் தேடிச் சென்று சுவிசேஷம் அறிவிக்க வேண்டும். தேடிப் போய் அவர்களை சபைக்குள் கொண்டுவர வேண்டும். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This