பிரியமான தேவனுடைய பிள்ளைகளே பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த பாதை வழியாய்க் கடந்து வரும் நீங்களே தேவனுடைய பார்வையில் விசேஷமா னவர்கள். இன்று அநேக போதகர்கள் பாடுகளே இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்துப் போதிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். உபத்திரவத்தின் குகை வழியாகவே நாம் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும். இயேசு மாமிசத்தில் பாடுபட்ட படியால் நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள் (1பேதுரு 4:1) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு நமக்கு ஆலோசனை கூறுகிறார்.
கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி பாடுபட்டார்.
1. சுதந்திரம் அடைந்திட (1பேதுரு 1:5,6)
பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை அடைவதற்காக நாம் பலவித சோதனைகளால் துன்பப்பட வேண்டியது அவசியமாயிருக்கிறது (1பேதுரு 1:5,6). கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினர்களாகிய நாம் அவரோடே கூட பாடுபட வேண்டியது அவசியம். சுருக்கமாகக் கூறினால் தேவனுடைய இராஜ்ஜியமே நீதியி னிமித்தம் துன்பப்படுகிறவர்களுடையதே (மத்.5:10). நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களின் பலன் பரலோகத் தில் மிகுதியாயிருக்கும். துன்பப்படாமல், பாடுபடாமல், கிரயம் செலுத்தாமல் உபத்திரவப்படாமல்….. பக்குவப் படவோ, ஆத்தும ஆதாயம் செய்யவோ தேவ ராஜ்ஜியம் சேரவோ முடியாது. எனவே பாடுகளைக் கண்டு துவண்டு பின்மாறிவிடக் கூடாது.
2. விசுவாசம் சோதிக்கப்பட (1பேதுரு 1:7)
விசுவாசப் பரீட்சையில் ஜெயிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும், கனமும், மகிமையும் உண்டாகிறது. விசுவாசத்தை விட்டு வழுவிப் போவது, மறுதலித்துப்போவது தேவனுக்குப் பிரியமா னதல்ல, மகா பரிசுத்தமான விசுவாசம் காக்கப்பட வேண்டும். மேலும் சோதிக்கப்பட வேண்டும். நாம் இன்னும் அதிகமாக விசுவாசத்தில் வளர வேண்டு மானால் அது பரீட்சிக்கப்பட வேண்டும். புடமிடப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உபத்திரவங்கள் துன்பங்கள் சோதனைகள் பெருகப் பெருக விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு பலப்படுகிறது, வளர்ச்சியடைகிறது. ஆபிரகாமின் விசுவாசமும் சோதிக்கப்பட்டது. அவன் அந்த சோதனையில் வெற்றிப் பெற்றதால் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான். நாமும் நம்மை விசுவாசப் பரீட்சைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
3. பொறுமையுடன் சகித்திட (1பேதுரு 2:19)
அநியாயமாய்ப் பாடுபடும்போது அதைப் பொறுமையுடன் சகித்தால் தேவன் அதில் பிரீதியாயிருக்கிறார். பாடுகளை பொறுமையாய் சகிப்பது விசுவாசத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. பாடுகள் வரும்போது கோபப்படுவது, திட்டுவது, சபிப்பது போன்ற சுபாவங்களை அகற்ற வேண்டும். இயேசு பாடுபடும் போது பயமுறுத்தாமலும் நியாயமாய் தீர்ப்பு செய்கிறவர்களுக்கு தம்மை ஒப்புவித்தார் (1பேதுரு 2:23). ஸ்தேவானும் பாடுபடும்போது பாவம் செய்யவில்லை. இவர்கள்மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்றே கூறினான் (அப்.7:60).
4. பின்பற்றிச் சென்றிட (1பேதுரு 2:20,21)
நன்மை செய்து பாடுபடுவதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவும் நமக்காக பாடுபட்டு, நாம் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியை பின்வைத்துப் போனார். நம்முடைய வாழ்க்கை யிலே உலக சிற்றின்பங்களா அல்லது பாடுகளா என்று தீர்மானிக்கும் தருணங்கள் வரும்போது தேவனுக்காக பாடுகளை அனுபவிப்ப தையே தெரிந்துகொள்ள வேண்டும். மோசேயின் வாழ்க்கையிலே அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் வந்தபோது அவன் பார்வோன் குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து ராஜ மேன்மையைத் துறந்து தேவ ஜனங்களோடு துன்பத்தை அனுபவிப் பதையே தெரிந்து கொண்டான் (எபி.11:24,25). அப்போஸ்தலனாகிய பவுலை தேவன் தெரிந்துகொண்டபோது “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்” (அப்.9:16). அவனும் அந்த பரம தரிசனத்திற்கு கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை, பவுல் பாடுகளைக் குறித்த தரிசனமுடையவனாயிருந்தான். பாடுகள் நம்மைப் பூரணப் படுத்துகிறது.
5. பரிசுத்தமாய் வாழ்ந்திட (1பேதுரு 4:2)
மாம்சத்தில் பாடுபடுகிறவன் தேவனுடைய சித்தத்தின் படி பிழைக்கத்தக்கதாக பாவங்களை விட்டோய்ந்தி ருப்பான் என்று பார்க்கிறோம். பாடுகள் நம்மைப் பரிசுத்த வாழ்க்கைக்கு நேராக நடத்துகிறது. நாம் பாடுபடும்போது நீதியினிமித்தம் பாடுபட வேண்டும் (1பேதுரு 3:14). மேலும் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்க வேண்டும் (1பேதுரு 4:19). நன்மை செய்து பாடநுபவிக்க வேண்டும் (1பேதுரு 3:17). யோசேப்பும் போத்திபாரின் வீட்டிலே உத்தமனாயிருந்தாலும் சிறைச்சாலை செல்ல நேரிட்டது. அங்கே அவன் தன் உத்தமத்தையும் பரிசுத்தத்தையும் காத்துக் கொண்டதால் தேவ நாமம் மகிமைப்பட்டது.
6. பரலோகில் மகிழ்ந்திட (1பேதுரு 4:13)
நாம் தேவனுக்காக பாடுபடும்போது அவருக்குப் பங்காளிகளாயிருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு ஜீவிக்க வேண்டும். நாம் பிள்ளைகளானால் சுதந்தர ருமாமே; தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூட பாடுபட்டால் அப்படியாகும். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்ற ரோமர் 8:17,18 வசனங்களில் காண்கிறோம். நாம் பாடுபடும்போது கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிக ளாயிருக்கிறோம் என்பது சந்தோஷமாயிருக்க வேண்டும். ஆதி அப்போஸ்தலர் நாட்களிலே தேவப் பிள்ளைகள் ஆண்டவருடைய நாமத்திற்காக தாங்கள் அவமான மடைவதற்குப் பாத்திரமாக எண்ணினார்கள் (அப்.5:41). இது நமது அனுதின வாழ்க்கையின் அனுபவமாக இருக்க வேண்டும்.
7. பாக்கியம் பெற்றிட (1பேதுரு 4:14)
நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதினி மித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நாம் துன்பப்பட்டு, பாடுபடும்போது பரலோகத்தில் நமக்கு பலன் மிகுதியாயிருக்க வேண்டுமானால் அழாமல் முறு முறுக்காமல் பொறுமையாக சகிக்க வேண்டும். இயேசு கூறுகிறார், என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்க ளானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். பரலோகத் தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் (மத்.5:11,12).
இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகளல்ல. எனவே கொஞ்ச காலம் பாடநு பவிக்கிற நம்மை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்தி மகிமையில் சேர்த்திட அவருடைய வல்லக் கரத்திலே ஒப்புக்கொடுப்போம்.