ஜெபம் என்றால் என்ன?

Written by Pr Thomas Walker

October 21, 2009

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
ஜெபம் கிறிஸ்தவ வாழ்க்கையின் உயிர் நாடியாக உள்ளது. ஜெபிக்கிற தம்முடைய பிள்ளைகளை தேவன் ஒருபோதும் கைவிடுவது இல்லை. ஜெபத்துக்கு நிச்சயமாக பதில் உண்டு. நாம் சரியான முறைப்படி ஜெபித்தால், தேவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் அனுபவிக்க முடியும். ஆவிக்குரிய கனிகளும் நிரம்பி வழியும். சிலர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஜெபிக்கின்றனர். சிலர் மன அமைதிக்காகவும், ஐக்கியத்திற்காகவும் ஜெபிக்கின்றனர். சிலர் துதி செலுத்துதல் தான் ஜெபம் என்கின்றனர். துதி ஜெபமாகாது. துதி ஜெபத்துக்கு உதவும். மத்.7:7 வசனத்தில், “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” தேவனிடத்தில் குறிப்பிட்ட காரியத்துக்காக குறி வைத்து கவனமாக கேட்பது ஜெபம். தேவனைப் புகழ்வது ஜெபமல்ல. அது ஜெபத்தின் ஒரு பகுதி. தூதர்கள் ஓயாமல் தேவனை புகழ்கின்றனர்.


தியானம் செய்வது ஜெபமல்ல. வசனத்தை வாசித்து தியானித்துச் சிந்தனை செய்தல். ஈசாக்கு, தாவீது போன்ற தேவ மனிதர்கள் தியானித்தனர். தாவீது தியானிக்கையில் அனல் மூண்டது என்கிறார். 2நாளா.7:14 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிறநான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” என்கிறார்.

 முதலாவதாகதாழ்த்துவது ஜெபமல்ல. ஆனால் தாழ்த்தி ஜெபிப்பது முக்கியம்
லூக்.18:10-14 வசனத்தில், இரண்டு பேர் தேவாலயத்தில் செய்த ஜெபத்தை பார்க்கிறோம். பரிசேயன் ஜெபம் சுயநீதி உடையதாய், தாழ்மையில்லாமல் உள்ளது. ஆயக்காரன் தாழ்த்திவிட்டு, கேட்காமல் போகிறான். எனவே பெற்றுக்கொள்ள முடியாது. பாவ அறிக்கை மட்டும் ஜெபமாகாது. அதேபோன்று நன்றி சொல்லுதல் மட்டும் ஜெபமல்ல. பிலி.4:6 வசனத்தில், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்கிறார் பவுல்.

 இரண்டாவதாகஇயேசு நாமத்தின் மூலம் ஜெபிக்க வேண்டும்
நம்மை சுத்திகரிக்காமல் எதைச் செய்தாலும் ஜெபம் கேட்கப்படாது.
யோவா.16:24 வசனத்தில், “…நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்”. நாம் ஜெபிக்கும்போது தேவனுடைய நாமத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு கடிதத்திற்கு seal,stamp மிகவும் முக்கியம். அதினால் தான் அந்த கடிதம் மதிப்பு பெறும். தேவனுடைய நாமமே நமது ஜெபத்திற்கு முத்திரையாக உள்ளது.

 மூன்றாவதாகசந்தேகப்படாமல் ஜெபிக்க வேண்டும்
எபி.11:6 “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்”. மேலும் எபி.3:12 வசனத்தில் “…ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்”. யாக்.1:7 வசனத்தில், “அப்படிப்பட்ட மனுஷன் (சந்தேகப்படுகிறவன்) தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக”. ஒருமுறை Ann என்ற வேலைக்காரப் பெண் கிணற்றில் தண்ணீர் இல்லை, அதற்காக ஜெபித்தபோது தண்ணீர் கிடைத்தது. நம்முடைய உள்ளம் தேவனோடு உள்ள உறவில் சரியாக இருந்தால் அற்புதம் நடைபெறும். ஆப்பிரிக்காவில் ஒரு மிஷனெரி ஊழியத்துக்கு போகும் வழியில் உள்ள ஆற்றில் முதலைகள் அதிகம் காணப்பட்டது. அதைக் கடந்து மறுகரை செல்லும்படி ஜெபித்தபோது தேவ தூதன் ஒருவர் அவரை மறுகரையில் போய்விட்டார். இஸ்ரவேலர் ஆகார குறைவின்றி 40 வருடங்கள் போஷிக்கப்பட்டனர். எப்பொழுதும் விசுவாசிக்க வேண்டும். மரியாள் விசுவாசித்தபடியால் பாக்கியவதி என்று அழைக்கப்பட்டாள். தேவனால் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறியது.

 நான்காவதாகவிடாப்பிடியாய் ஜெபிக்க வேண்டும்
தானி.9:4 வசனத்தில், “என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து…” ஜெபித்தார். தேவனிடம் ஜெபித்துவிட்டு உலகப் பிரகாரமாக வேறு ஒரு நபரைச் சார்ந்துகொண்டால் தேவன் நம்பேரில் பிரியமாய் இருக்க மாட்டார். தன்னையே நாம் நம்புகிறோமா? என்று பார்க்கிறார். கற்புள்ளவர்களையே தேவன் தேடுகிறார்.

 ஐந்தாவதாகபாவ அறிக்கை
வேதத்தில் உள்ள பக்தர்களான தானியேல், எஸ்றா, நெகேமியா போன்ற மக்கள் பாவ அறிக்கை செய்து ஜெபித்தனர். தன்னுடைய முன்னோர்களின் பாவங்களுக்காகவும், தங்களுக்காகவும், ஜனங்களுக்காகவும் தேவ சமுகத்தில் பரிந்துபேசி ஜெபித்தனர். தன்னை சுத்தவானாக காத்துக்கொண்டால் ஜெபம் கேட்கப்படும் (தானி.9:3-19; எஸ்.9:13-15; நெகே.1:5-9).

 ஆறாவதாகதேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும்
யாக்.4:3 வசனத்தில் நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிற படியினால் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். நம் நோக்கம் எப்படியிருக்கிறது என்று கர்த்தர் பார்க்கிறார். மனைவி கணவனுக்காக ஜெபிக்கும்போது தேவனுடைய பிள்ளையாய் மாற ஜெபிக்க வேண்டும். நாம் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுகிறவர்களாக நிச்சயமில்லாத ஜெபங்களை ஏறெடுக்க கூடாது.


மத்.14:30 வசனத்தில், “காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்”. பசிக்கு ஆகாரமும், நம்முடைய அன்றாட தேவைகளும் சந்திக்கப்படவும், திருமணம், கல்வி, வேலை, சுகமாயிருப்பது – இவையெல்லாம் தேவ சித்தம் தான். மாற்.10:51,52 இயேசு பர்த்திமேயுவை நோக்கி, “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” என்றார். அதற்கு அந்தக் குருடன், ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும் என்றான். சரியான வேண்டுதல் – தேவன் சரியான பதிலை அவனுக்கு கொடுத்தார்.
லூக்.23:42 வசனத்தில், சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்” (ளுயீநஉகைiஉ சநளூரநளவ யனே iஅஅநனயைவந யளேறநச றயள பiஎநn) உடனே “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்”


இதை வாசிக்கும் அன்பு நேயரே! நாம் தாழ்மையுடன் ஜெபித்தால் கர்த்தர் ஜெபத்தைக் கேட்பார். மத்.15:25 வசனத்தில், கானானிய ஸ்திரீ வந்து, “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்” என்றாள். தேவன் நமது தாழ்மையை காண விரும்புகிறார். விசுவாசத்துக்கான பரீட்சையிலும் “…நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.” 1யோவா.3:22 வசனத்தில், “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” கற்பனைகளைக் கைக்கொள்ளாவிட்டால் எப்படி ஜெபத்திற்கு பதில் கிடைக்கும்? School-க்குப் போய் பாடங்களை படிக்காமல் இருந்தால்result எப்படி வரும்? மேலும், மத்.7:9-11 வசனங்களில் பொல்லாதவர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளை கொடுப்பது அதிக நிச்சயம். எனவே நாம் ஜெபத்தின் மேன்மையைக் கற்றுக்கொண்டு நம் தேசத்திற்காகவும், குடும்பங்களுக்காகவும் ஜெபித்து பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுவோமாக! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This