நாம் ராஜரீ க பரிசுத்த ஆசாரியக் கூட்டம்

Written by Pr Thomas Walker

February 28, 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

திருச்சபையில் உள்ள விசுவாசிகள் தாங்கள் யார்? தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு என்ன? என்பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும். தேவன் இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளையிடம் என்ன எதிர்பார்க்கிறார்? என்று நாம் தெரிந்து கொண்டு, அந்த நோக்கத்தைநம் வாழ்வில் நிறைவேற்றவே நம்மை சபைகளில் வைத்துள்ளார். 1பேதுரு 2:5 வசனத்தில், “ஜீவனுள்ள கற்களைப் போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப்பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும் படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்” என்று பேதுரு அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார்.

கட்டப்பட்டு வருகிறீர்கள்? எப்படி? எதற்காக? பரிசுத்த ஆசாரியக் கூட்டமாக. தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளை செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மேலும் 1பேதுரு 2:9 வசனத்தில், “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத் தஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்கிறார். நாம்ராஜரீக ஆசாரியக் கூட்டமாகத் தெரிந்து கொள்ளப்பட்டோம். எபி.9:14 வசனத்தில், “நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்தார்…” ஆசாரியருக்கு பலியிட ஒரு பலி தேவை. இயேசு தன்னையே நமக்காக பலியாக ஒப்புக் கொடுத்தார்.

ஆதி.26:25 வசனத்தில், “அங்கேஅவன் (ஈசாக்கு) ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.” நாம் முதலாவது பலிபீடத்தைக்கட்ட வேண்டும். இரண்டாவது கூடாரத்தைப் போட வேண்டும். முதலாவது சபையைக்கட்ட வேண்டும், பின்பு வீடு கட்ட வேண்டும். மூன்றாவது துரவைத் தோண்ட வேண்டும்.

ஆதி.8:20 வசனத்தில், “அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமானசகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்து கொண்டு அவைகளைப் பலிபீடத்தின் மேல் தகன பலிகளாகப் பலியிட்டான்” என்றுபார்க்கிறோம். முதலாவது நாம் எதைச் செய்கிறோம்? ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்கும் போது மட்டுமே நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். மேலும் 1பேதுரு 2:5 வசனத்தில், “கட்டப்பட்டுவருகிறீர்கள்…” வளர்ச்சி பெற்றுவரும் அனுபவம் வேண்டுமானால் கட்டப்பட்டு வருவது அவசியம்.

நாம் ஆசாரியர்களானால் பலிகள் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். எப்படிப் பட்ட பலிகளை நாம் செலுத்த வேண்டும்? என்று பார்ப்போம். மேலும் முதலில் பலி செலுத்துகிறவனுடைய தகுதிகள் என்ன? என்பதை கவனிப்போம்.

1. ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்

ரோம.12:1 வசனத்தில், “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கவேண்டும்…” என்பதையே தேவன் விரும்புகிறார். ரோம.6:13 வசனத்தின் டி “நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்ககூடாது” நீதியின் அவயவங்களாக ஒப்புக் கொடுக்க வேண்டும். ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

2. நொறுங்குண்ட ஆவியுள்ளவர்களாக இருக்க வேண்டும்

சங்.51:17 வசனத்தில், “தேவனுக் கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர்புறக்கணியீர்” என்கிறார் தாவீது. நொறுங்கின ஆவியுண்டானால் தான் அதிக சந்தோஷம் உண்டாகும் உடைந்த உள்ளத்தில் உள்ள ஜெபமே தேவ சமூகத்தில் போய் எட்டுகிறது.

பலிசெலுத்தும் ஆசாரியர்கள் தங்களை ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கிறதும், நொறுங்குண்ட ஆவியுள்ளவர்களாகவும், உடைந்த உள்ளமுடனும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

மேலும் ஆமோஸ்5:22,23 வசனத்தில் “உங்கள் தகன பலிகளையும் போஜன பலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்க மாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திர பலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்” என்கிறார்.

ஆசாரியர்கள்செலுத்தவேண்டியபலிகள்

1. ஸ்தோத்திரபலி:

சங்.107:22, “ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்தசத்தத்தோடே விவரிப்பார்களாக” ஸ்தோத்திர பலிதான் செலவில்லாதபலி. மேலும், எரே.17:26, யோனா2:9 தேவனுக்கு மகிமை செலுத்தினார்கள். எபி.13:15 ஸ்தோத்திர பலி எப்போதும் செலுத்த வேண்டும்.

2. நன்மைசெய்வதும், தானதர்மம்பண்ணுவதுமானபலி:

எபி.13:16 வசனத்தில், “அன்றியும் நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப் பட்டபலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் நாம்மறக்ககூடாது. சங்.37:3 கர்த்தரை நம்பி நன்மை செய். யாக்.4:17 வசனத்தில், “ஆதலால், ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” மத்.25:35, 36 வசனங்களில், “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத்தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்குவஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்” என்றார்.

3. ஊழியங்களுக்குகொடுத்தகாணிக்கைஉகந்தபலி:

பிலி.4:18 “எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரி பூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்கு ப்பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக் கொண்டபடியால் நான்திருப்தியடைந்திருக்கிறேன்” பரிசுத்த வான்களின் தேவைகளில் உதவிசெய்கிறது தேவனுக்கு உகந்த பலி செலுத்துகிறார்கள். பரிசுத்தவான்களின் கால்களை கழுவினீர்கள் என்ற வாசிக்கிறோம்.

4. தேவனுக்கு கீழ்ப்படிவது பலி:

1சாமு.15:22 வசனத்தில், “கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்கதகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” தேவசத்தத்துக்கு கீழ்ப்படிவது, வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது மேலான பலியாகும் (யாத்.15:26).

5. விசுவாசமாகிய பலி:

அ) பிலி.2:17 வசனத்தில், “மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின் மேலும் ஊழியத்தின் மேலும் நான் வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங் கூடச் சந்தோஷப்படுவேன்” என்கிறார். நம்முடைய விசுவாசத்தை பலியாக பவுல் அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார்.

ஆ) ஊழியமாகியபலி: பவுல் ஊழியமாகிய பலி என்ற குறிப்பிடுகிறார். கர்த்தருக்கு ஊழியம் செய்வது மேன்மையானது.

இ) இரக்கமாகியபலி: ஒசி.6:6, “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்” இரக்கமாகிய பலியின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். இரக்கம் நியாயத் தீர்ப்புக்கு முன் மேன்மை பாராட்டும். இரக்கம் இரக்கத்தைப் பெற்றுத்தரும்.

6. நீதியின் பலி:

உபா.33:19 வசனத்தில், “ஜனங்களை அவர்கள் மலையின் மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடு வார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளேமறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்” நீதியின் பலிகளை செலுத்தினால் தேவன் கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள் மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிக்க ஆசீர்வதிப்பார்.இதைவாசிக்கும் அன்புநண்பரே! தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் பரிசுத்த ஆசாரியக் கூட்டம். நாம் எப்பொழுதும் தேவனுக்கு பலி செலுத்தி மகிமைப்படுத்த வேண்டும். முதலில் ஜீவ பலியாக ஒப்புக் கொடுத்து, உடைந்த நொறுங் குண்ட ஆவியுடன் பலி செலுத்த வேண்டும். மேலும் தேவனுடைய ராஜரீக ஆசாரியர்களாகிய நாம் ஸ்தோத்திர பலியை செலுத்த வேண்டும், நன்மைசெய்வது, தானதருமம் பண்ணுவது, ஊழியங்களுக்கு காணிக்கை கொடுக்கும்பலி, தேவனுக்கு கீழ்ப்படிவதுமாகிய பலி, விசுவாசமாகிய பலி, ஊழியமாகிய பலி, இரக்கமாகியபலி, நீதியின் பலி என்று வேதத்தில் சொல்ல ப்பட்ட பலிகளைச் செலுத்தி தேவனை மகிமைப்படுத்துவோமாக! ஆமென்.






Author

You May Also Like…

Share This