“பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத்தேயு 6:20)
நாம் பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பணிக்கென்று, நாம் கொடுக்க வேண்டும். உற்சாகத்தோடு கொடுக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். கொடுப்பதினால் நமக்கு பரலோகத்தில் பலன் உண்டு என்பதை அறிந்து தேவப் பணிக்கென்று கொடுக்க வேண்டும். ஒருவேளை நம்மால், அறிவிக்கப்பட முடியாத இடங்களில் சென்று பணி செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், பணி செய்யும் தேவ பிள்ளைகளுக்கு கொடுப்பதன் மூலம் மறைவான இறைப் பணியை நிறைவேற்றலாம். ஆகவே இந்த கடைசிக் காலத்திலே, கர்த்தருடைய பணிக்கு தியாகமாய் கொடுத்து பரலோகத்திலே பொக்கிஷத்தை சேர்த்து வைப்போம்.
ராஜ்யத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் நமது பங்கை நிறைவேற்ற வேண்டும். இயேசு கிறிஸ்துவின் வருகையிலே, நாம் மன மகிழ்ச்சியோடு பங்கடைய, கர்த்தர் நமக்கு அருளின பணியை நிறைவேற்றுவோம். ராஜ்யத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்பட பாடுபடுவோம்.
இயேசு சீக்கிரமாய் வருகிறார். அவர் அளிக்கும் பலன் அவரோடு வருகிறது. நமது பணியை நிறைவேற்றி, இயேசுவை சந்திக்க ஆயத்தமடைவோம்.