உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு

January 29, 2022

சில நாட்கள் முன்பாக என்னுடைய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் உயர்ந்த பண்புகள் உள்ளவர். பெரிய பகுத்தறிவாளர். மேலும் அவர் பல அருட்பணி இயக்கங்களுடன் தொடர்புகொண்டு, பலருக்கு உதவிகள் செய்பவர். அதோடு மட்டுமல்லாது என்மீதும் மிக்க அன்பு கொண்டவர்.
இவர் நமது மாதாந்திர பத்திரிக்கையை தவறாது வாசிப்பவர். ஒருமுறை நான் அவரைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் என்னிடம், நமது இயக்கத்தின் “படக்காட்சி ஊழியம்” பற்றி சில கேள்விகள் கேட்டார். மேலும் அவர் என்னிடம்
    “1 படக்காட்சியை 1 ஊரிலே
      1 நபர் மோட்டார் சைக்கிளில் சென்று படம் காட்டி,
      சுமார் 100 பேர் இயேசுவைப் பற்றி,
      புதிதாக அறிந்திட, ரூ.100/- செலவாகிறது” என வாசித்தேன்.
இதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. ஏனெனில் பிரபல நிறுவனங்கள் வேன் போன்ற பெரிய வாகனங்களில், 3-4 பேர் உதவியுடன் சென்று, ஒரு படக்காட்சி காட்டிட, ரூ.3000/- செலவாகிறது என்று கணக்கிடுகிறார்கள். இவைகள் நம்பும்படி உள்ளது என்றார்.
மேலும் அவர் என்னிடம், பெரிய ஸ்தாபனங்களே, மாதத்தில் சில “படக்காட்சிகள்” மட்டும் காட்டும் சந்தர்ப்பத்தில், எப்படி உங்கள் ஊழியர்களால், மோட்டார் சைக்கிளில் சென்று 10 முதல் 15 கிராமத்தை மாதந்தோறும் சந்திக்க இயலும். மேலும் எப்படி 50 படக்காட்சி குழுவினர் மூலம் 500க்கும் அதிகமான கிராமங்களையும், 50,000க்கும் அதிகமான மக்களையும், ரூ.50,000 வைத்து மாதந்தோறும் சந்திக்க இயலும். இது நம்பும்படி இல்லை எனக் கூறினார்.
இவர் இதை என்னிடம் கூறி, சில வருடங்கள் உருண்டோடி விட்டன. நமது கடந்த கால, படக்காட்சி ஊழியங்கள்,அநேகம் மக்களை  சந்தித்ததையும், பல திருச்சபை பூக்கள் மலர்ந்ததையும் அநேக ஜனங்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டதையும் பறைசாற்றுகின்றன”.
மேலும் மழையிலும், கடுங்குளிரிலும், நடந்து சென்றும், சைக்கிள், மோட்டர் சைக்கிள், பேருந்து மூலமும், படகு மூலம் ஆற்றைக் கடந்தும், காடுகளில், மலைப் பாதைகளில், ஒற்றையடிப் பாதைகளில், துஷ்ட மிருகங்கள் மத்தியில், பொல்லாத மனுஷர் எரிச்சல்கள் நடுவில், தேவன் தமது பிள்ளைகளைத் (படக்காட்சி ஊழியர்களை) தயவாய்க் காத்து, அவர்கள் தங்கள் ஜீவனைப் பணயம் வைத்து செய்யும் இந்த அற்புத ஊழியத்தை ஆசீர்வதித்து, அநேகம் ஆத்துமாக்களினால் கனப்படுத்தி வருகிறார்.

“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (நீதிமொழிகள் 11:30)


நம்ம ஆட்கள் சிலர், புல்லு வெட்ட கோடரியை வாங்கி அத எடுத்துக்கிட்டுப் போக தேர் கேட்குறாக, இத தான் சங்கீதம் 74:5ல்
“கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்ற வனானான்” எனக் காண்கிறோம். நாம் காடுகளில், மலைகளில் மரத்தை வெட்டி ஆலயத்தைக் கட்டுவோம். கர்த்தர் நம்மில் பிரியப்படுவார்!



Author

You May Also Like…

Share This