இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

Written by Dr Senthil kumar

December 5, 2022

இயேசு கிறிஸ்து வருகையைச் சந்திக்கும் சந்ததி

அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கொள்ளுங்கள்; கற்றுக் அதிலே இறங்கிளைத் தோன்றி, துளிர் விடும் போது, வசந்த கால சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளை யெல்லாம் நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சத்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 24:32-34

இயேசு கிறிஸ்து இன்ன நாழிகையிலே இன்ன நாளிலே. வருவார். என்று ஒருவரும் அறியமாட்டார்கள். ஆனால் குறிப்பாக சில காரியங்களை இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். உதாரனமாக இஸ்ரவேயின் எழுச்சியைப் பற்றி வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து  வருகையைக் குறித்து கிறிஸ்து பல அடையாளங்களைக் குறிப்பிடுகிறார். அதைக் கூறி முடித்த பின்பு இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது எனக் கூறுகிறார். இதைக் குறித்து விளக்கமாய் தியானித்துப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் தியானிக்கலாம்.

இயேசு கிறிஸ்து வாசலிலே வந்திருக்கிறார்.

அத்திமரம் துளிர் விடும் போது, அதில் இளங்கிளை தோன்றி துளிர் விடும் போது இயேசு கிறிஸ்து வாசவிலே வந்திருக்கிறார். இஸ்ரேல் தேசம் 1948-ம் ஆண்டு விடுதலையடைந்தது ஆண்டு எருசலேமின் பகுதியைக் 1967- ஒரு கைப்பற்றியது. அதற்குப் பின்பு இஸ்ரேல் வளர்ந்து பெருக ஆரம்பித்தது. அதாவது துளிர் விட ஆரம்பித்தது எனக் கூறலாம். இதைக் காணும் போது இயேசு கிறிஸ்து வாசலருகே வந்திருக்கிறார் என அறியலாம். அதற்குப் பின்பு எந்த நேரமும் இயேசு கிறிஸ்துவின் வருகை சம்பவிப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதுமட்டுமல்ல இயேசு கிறிஸ்து மற்றொரு காரியத்தையும் கூறியுள்ளார். இவையெல்லாவற்றையும் ஒரு சந்ததி காணும் கூறியுள்ளார்

இயேசு  கிறிஸ்து வருகையைக் காணும் சந்ததி

இயேசு  கிறிஸ்து வருகையைக் குறித்து பல அடையாளங்களை கூறியுன்னார். பூகம்பங்கள். யுத்தங்கள், அந்திக்கிறிஸ்து. பாழாக்கும் அருவருப்பு எனப் பல காரியங்கள் கூறியுள்ளார். அதோடு கூட இஸ்ரவேலின் வளர்ச்சி, அதாவது அத்திமரம் துளிர் விடல் இவைகள் யாவும் ஒரு தலைமுறையில் நடக்கும் என இயேசு குறிப்பாகக் கூறியுள்ளார். இவைகளை பார்க்கும் போது நாம் தெளிவாக உணரலாம். நாம் அந்தக் காலத்தில் தான் உன்னோம். இயேசு கிறிஸ்து சொன்ன அடையாளங்களில் சில நிறைவேறியுள்ளன. சில இனி நிறைவேறும் எனவே நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையின் காலத்திற்கு மிக நெருக்கமாக வந்து விட்டோம் எனத் தெளிவாக விளங்கும் ஒரு வேளை இயேசு கிறிஸ்துவின் வருகையைச் சந்திக்கும் அந்தத் தலைமுறை நாமாகக் இருக்கலாம். அப்படியானால் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்து நாம் ஆயத்தப்பட வேண்டும்.

இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருவார்

இயேசு கிறிஸ்து வருகையைக் குறித்துச் சொன்ன அடையாளங்கள் தவறாமல் நடைபெறுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ; அதன் பின்பு ஏற்பட்ட சுனாமி பீதி கடைசி நாட்கள் என நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம். தமிழகத்தையே உலுக்கி விட்டது. தேவ கிருபையாக உயிர்ச் சேதம் இல்லாமல் காத்தார். ஆனால் இது கடைசி ‘காலம். இயேசு கிறிஸ்துவின் வருகையின் காலம் என்பதற்கு ஒரு அடையாளமாகும்.

ஆகவே இயேசு கிறிஸ்துவின் வருகை அதிசீக்கிரமாய் உள்ளது என்று விசுவாசிகள் யாவருக்கும் தெளிவாக விளங்கும். எனவே இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுவோம் ! இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை எந்த நேரமும் சம்பவிக்கலாம்.

நாம் விழித்திருந்து ஜெபித்து இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுவோம். இயேசு சீக்கிரமாய் வருகிறார். சந்திக்க ஆயத்தப்படுவோம்.

Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This