பூமியை ஆளும் பரிசுத்தவான்கள்
இயேசு கிறிஸ்து ஆயிரம் வருடம் பூமியை ஆளுகை செய்வார். அவரோடு கூட பரிசுத்தவான்கள் ஆளுகை செய்வார்கள்; என வேதம் கூறுகிறது.
எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். – வெளி. 5:10
ஒரு அரசு என்று இருந்தால் பல துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறைக்கும் பல அமைச்சர், அதிகாரிகள் இருப்பார்கள். உதாரணமாக நீதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை என பல துறைகள் உள்ளன, அது போல இந்தியாவிலே பல மாநிலங்கள் உள்ளன. அதற்கு ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உண்டு. இவர்கள் யாவரும் நாட்டை ஆளுகை செய்யும் மக்கள் தான். அது போலத்தான் இயேசு கிறிஸ்து பூமியை ஆளும் ராஜாவாக இருந்தாலும், தனது ஆளுகை செய்யும் அதிகாரத்தை தமது பரிசுத்தவான்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
அப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு பரிசுத்தவான்கள் ஆளுகை செய்வார்கள். எத்தனை ஆச்சரியம்! ஆம் இயேசு கிறிஸ்து பூமியை ஆளுகை செய்யும் நாளை எண்ணித் துதிப்போம் அன்றியும்; நான் சிங்காசனங்கனைக் கண்டேன்; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்பு கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப் பற்றியய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச் சேதம் பண்ணப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாசது அதின் சொரூபத்தையாவது வணங்காலும், தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்ந்து கிறிஸ்துவுடனே கூட ஆயிரம் வருடம் அரசாண்டார்கள். –வெளி 20:4
இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்த பின்பு, தமக்கு விரோதமாய் எழும்பின் அந்திக் கிறிஸ்துவை அழிப்பார். அதின் இராவணுவத்தை அளிப்பார். பூமியிலே உள்ள மற்றவர்களை நியாயம் தீர்ப்பார். அவருடைய ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பங்குள்ளவர்களைச் சேர்த்துக் கொள்வார். அந்த சமயத்தில் பரிசுத்தவான்களுக்கு இயேசு கிறிஸ்து நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தைக் கொடுப்பார். பரிசுத்தவான்கள் பூமியை நியாயம் தீர்ப்பார்கள் இயேசு கிறிஸ்து பூமியை நியாயம் தீர்க்கும் போது பரிசுத்தவான்களும் நியாயம் தீர்ப்பான்கள்.
ராஜரீகமும், ஆளுகையும்
வானத்தில் கீbழுங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும், மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரை சேவித்து, அவருக்குக் கீழ்பட்டிருக்கும் -தானி 7:27
வானத்தின் கீழ், பூமியில் பல ராஜ்யங்கள் உள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் இப்படி பல உள்ளன. அப்படிப்பட்ட ராஜ்;யங்களின் ஆளுகையும், பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்படும். இந்திய தேசதின் ஆளுகை பரிசுத்தவான்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படும் என்றால் சிந்தித்துப் பாருங்கள். இந்த ஆளுகைக்காகத்தான் கட்சிகள் ஒன்றையொன்று மோதிக் கொள்கின்றன. ஆனால், இயேசுவை சேவித்து அவருக்காகப் பாடுபட்டால், நிச்சயமாகவே ஆளுகை செய்யலாம். தேர்தலில் நின்றால், வெற்றியோ, தோல்லியோ யாருக்குத் தெரியும்? இயேசுவை ஏற்றுக் கொண்டு மனந்திரும்பினால், எத்தனை நலமாயிருக்கும் மெய்யாகவே கர்த்தரை ஏற்றுக் கொண்டு பாடுபட்டால், நிச்சயமாக ஆளுகை செய்யலாம். பூமியின் ஜனங்கள் இதை உணர்ந்து மனம் திரும்பினால், எத்தனை நலமாயிருக்கும்! மெய்யாகவே பூமிளை ஆளுகை செய்ய இயேசு வருகிறார்.
பாடுபட்டால் ஆளுகை செய்வோம்
அவரோடு கூடப் பாடுகளை சகித்தோமானால் அவரோடே ஆளுகையும் செய்வோம்: நாம் அவரை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார் –திமோ 2:12
இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகளைப் பட்டார். நாமும் இயேசு கிறிஸ்வுக்காக பாடுகளைப் பட்டால், ஆளுகை செய்வோம். கர்த்தருக்காக உழைப்போம். பாடுகளை அனுபவிப்போம். கர்த்தரோடு ஆளுகை செய்வோம். எனவே எளிமையான வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். விசாலமான வழியை தெரிந்து கொள் வேண்டாம். இடுக்கமான வழியிலே சென்று, ஜீவனுக்குப் போகும் வழியைத் தெரிந்து கொள்வோம். அது பாடுகள் நிறைந்தது. அது நெருக்கமான வழி. எனவே கிறிஸ்து இயேசுவுக்காய்ப் பாடுகளை அனுபவித்து ஊழியம் செய்வோம். ஆம்! இயேசு கிறிஸ்து அதி சீக்கிரமாய் வருகிறார். அவரோடு கூட பரிசுத்தவான்கள் ஆளுகை செய்வார்கள். ராஜ்யமும் வல்லமையும், மகிமையும் இயேசு கிறிஸ்துவுக்கே! ஆமென்.