உன் ஆத்துமாவின் ஸ்திர தன்மையை காத்துக்கொள் (Maintain Your Spiritual Stability)
ஆவிக்குரிய வாழ்வில் “திசை திருப்பம்” நம் எல்லாருடைய வாழ்விலும் கவனக் குறைவால் ஏற்படுகிறது. அது நம்மை தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்தும், கடமையி லிருந்தும் திசை திருப்பும், அது ஆபத்தானது. நாம் நம் வாழ்வின் வெற்றியின் எல்லைகளை குறித்தோ, நம் கடமைகளை நிறைவேற்றுவதை பற்றியோ, நம்முடைய பெலன், வாழ்வின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை வைத்து தேவனை சார்ந்துகொள்ள வில்லை என்றால் திசை திருப்பம் ஏற்படும். ஏன் திசை திருப்பம் ஏற்படுகிறது? உலகப் பிரகாரமான காரியங்களுக்கு அதிக முக்கியத்துவமும், மதிப்பும் கொடுப்பதால் தான். வேதத்தில் லூக்.10:38-48 வசனங்களில் நம் தேவன் மார்த்தாளை குறித்து அதிக கவலைப்பட்டார். மரியாள், ஆண்டவர் பாதத்தில் தன்னை காத்துக்கொண்டார். மார்த்தாளோ வீட்டு வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நித்திய ஜீவனைப் பற்றிய கவலை கொள்ளாமல் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டாள். அதிகப்படியாக உலக வேலைகளில் முக்கியத்துவத்தை கொடுத்ததால் “அந்த நல்ல பங்கை” இழந்துபோனாள்.
திருமதி.பாலி விக்கிள்ஸ் வொர்த், ஆவிக்குரிய வாழ்வில் அழகான திடமான நிலையில் வாழ மரியாளைப் போல தன்னை பக்குவப்படுத்தி கவனமாக வாழ்ந்தார். அவள் தன் வாழ்வில் திசை திருப்பத்துக்கு இடம் கொடுக்கவில்லை. ஒரு நல்ல சாட்சியான வாழ்க்கையை தானியேலைப் போல மேற்கொண்டு வந்தார். அவளுடைய கடமைகளிலும், தெய்வீக காரியத்துக்கு அடுத்த ஊழியங்களிலும் சீராக நடந்து வந்தார். ஆனால் அவளுடைய கணவர் திரு.விக்கிள்ஸ் வொர்த், கவனக் குறைவாக இருந்ததால் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாற்றத்தை அடைந்தார்.
பிரட் போர்ட்டு நகர மக்களுக்கு 1884ஆம் ஆண்டு குளிர் மிகவும் கடுமையானதாக காணப்பட்டது. அதின் விளைவாக பிளம்பர் (plumber)களுக்கு மிகுந்த வேலை வாய்ப்பும், அதிக கிராக்கி (னுநஅயனே) இருந்தது. குளிர்காலம் முழுவதுமாக திரு.விக்கிள்ஸ் வொர்த் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதிலும் பழுதடைந்த குழாய்களை சரிசெய்வதிலும் நேரத்தை செலவழித்தார். அந்த வேலை பளுவின் காலங்களில் நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால் சபைக்கு செல்லுவதும், ஊழியம் செய்வதும், தேவனைப் பற்றிய அன்பும், அனலும் வெகுவாக குறைய ஆரம்பித்தது. ஆனால் திருமதி.பாலி விக்கிள்ஸ் வொர்த் வாழ்க்கையில் அவளுடைய ஜெப வாழ்க்கையும், தேவ வைராக்கியமும் குறைவு படாமல் நாளுக்கு நாள் பிரகாச மடைந்தது. தன் மனைவியின் உண்மை உழைப்பு, கர்த்தருடைய காரியங்களில் இருந்த வைராக்கியத்தைப் பார்த்து அவருக்கு தன் மனைவியைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும் வந்தது.
வழக்கமாக சபையிலிருந்து ஊழியத்தை முடித்து வரும் நேரத்தைவிட சற்று தாமதமாக ஒருநாள் வந்தாள். திருமதி.பாலி வீட்டிற்குள் நுழைந்ததும் திரு.விக்கிள்ஸ் வொர்த் இவ்வாறு கூறினார் “நான் தான் இந்த வீட்டின் தலைவர். நான் ஒருபோதும் நேரம் கடந்து வீட்டுக்குள் வருவதை அனுமதிக்க மாட்டேன்” என்றார். மிகவும் கோபத்துடன் திரு.ஸ்மித் வேகமாக பின் கதவை திறந்து, அவளை வெளியே தள்ளி, கதவை உள்ளே பூட்டிக்கொண்டார். திருமதி பாலி ஒன்றும் பேசவில்லை. “எனக்கு நீங்கள் தான் கணவர் என்றும், இயேசு என் எஜமான் என்றும் தெரியும்” என்றாள். ஆனால் முன் கதவை பூட்ட மறந்துவிட்டார். எனவே திருமதி.பாலி வீட்டை சுற்றி முன்புறமாக வந்து வீட்டில் நுழைந்தார். அவருக்கு அதிகம் சிரிப்பு வந்தது, சிரித்தாள். பின்பு அவரும் தன் தவற்றை உணர்ந்து தன் மனைவியுடன் சேர்ந்து சிரித்தார். அந்த சிரிப்பில் பரிசுத்த ஆவியானவர் அவர் உள்ளத்திலும், எண்ணத்திலும் ஒரு தெய்வீக வெளிப்பாட்டை தந்தார். எனவே அவர் 10 நாட்கள் உபவாசமிருந்து ஜெபத்திலும், உபவாசத்தின் மூலம் தேவனை தேட முடிவெடுத்தார். உண்மையாக தாழ்த்தி, மனந்திரும்பியதால் தேவன் அவரை பின்மாற்றத்திலிருந்து எடுத்து ஊழிய பாதையில் மீண்டும் வல்லமையாய் பயன்படுத்தினார்.
அன்பு நண்பரே! திரு.ஸ்மித் வாழ்க்கையில் ஏற்பட்ட மனமாற்றம் தேவனுடைய பரிசுத்த ஆவியால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம். கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் ஒரு சந்தோஷமான ஆவியையும், இருதயத்தையும் திருமதி.பாலிக்கு கொடுத்திருந்தார். எனவே கோபப்படாமல் மகிழ்ச்சியாக இருந்தார். அதனால் திரு.ஸ்மித் தன் தவற்றை உணர்ந்து மனந்திரும்பி தேவனிடம் தன்னை தாழ்த்தி ஐக்கியபடுத்திக் கொண்டார். அவருடைய மனைவியின் ஆவிக்குரிய நற்குணம், சந்தோஷமாக பொறுமையாக சகித்த தன்மை அவரை முற்றிலும் மனந்திரும்ப காரணமாக அமைந்தது. இது அவர்கள் பிற்காலத்தில் இருவரும் வல்லமையாய் உலகத்தையே அசைக்கும் “வல்லமையின் சுகமளிக்கும் ஊழியம்” செய்ய அனுகூலமாக இருந்தது. எனவே நாம் ஆவிக்குரிய ஸ்திர தன்மையை நாடுவோம், காத்துக்கொள்வோம்! மாரநாதா!