சில நாட்கள் முன்பாக எனக்கு அறிமுகமான ஒரு தம்பதியிடம், கிறிஸ்தவ வாழ்வில் உண்மையின் அவசியம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம், நம்மில் அநேகர் காணிக்கை கொடுப்பதில் உண்மையாயிருக்கிறோம் மேலும் ஊழியம் செய்வதில் கூட உண்மையாயிருக்கிறோம் ஆனால் அநித்தியமான உலக காரியங்களில் உண்மையாய் இருக்க மறந்து விடுகிறோம் எனக்கூறி என்னுடைய வாழ்வில் சில காலம் முன் நடந்த சம்பவம் ஒன்றை அவருக்கு விளக்கினேன். அவருக்கோ மிக்க ஆச்சரியம்.
ஒரு நாள் எனது காரின், முன்பக்க கண்ணாடி சற்று உடைந்து இருந்தது. ஏதோ ஒரு கல் பட்டிருக்கும் போல எனவே நான் என்னுடைய மெக்கானிக்கை அழைத்து, கண்ணாடியை மாற்றும் படி கூறினேன். அவரும் என்னுடைய இன்சூரன்ஸ் பாலிசியைப் பார்த்துவிட்டு, இலவசமாக மாற்றிவிடாமல் எனக் கூறிச் சென்றார். எனக்கும் மிக்க சந்தோசம் ஏன்னெனில் கடந்த “20 ஆண்டுக்குகளில்” நான் ஒரு முறைக் கூட இன்சூரன்ஸ் என்பதை பயன்படுத்தியதேயில்லை.
சில மணிநேரம் கழித்து, என்னுடைய கார் மெக்கானிக் ஒரு இன்சூரன்ஸ் படிவத்தை எடுத்துக் கொண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார். அந்த படிவம் முற்றிலுமாக நிரப்பப்பட்டு இருந்தது. அவர் என்னிடம் கையொப்பம் மட்டும் போட்டால் போதுமெனக் கூறினார். நான் அந்த படிவத்தை வாங்கி முழுவதுமாகப் படித்து பார்த்தேன். அதில் நான் காரை ஓட்டும் போது, ஏதோ ஒரு கல் பறந்து வந்து, என்னுடைய காரின் கண்ணாடியில் பட்டு, கண்ணாடி உடைந்து விட்டது என எழுதப்பட்டு இருந்தது.
நான் என்னுடைய கார் மெக்கானிக்கிடம், அண்ணன், கார் கண்ணாடி உடைந்து உண்மை, ஆனால் எப்படி உடைந்தது. எப்பொழுது உடைந்தது என்பது எனக்குத் தெரியாது. நான் ஒரு கல் பறந்து வந்து என் கார் கண்ணாடியை உடைத்ததை நான் பார்க்கவில்லை பின்பு எப்படி நான் அவ்வாறாக எழுதி கையொப்பமிட முடியும் எனக் கேட்டேன். அதற்கு அவர், நிற்கும் காரில், கல்லடிபட்டு கண்ணாடி உடைந்தால், இன்சூரன்ஸ் கிடைக்காது. எனவே நாம் இப்படி தான் எழுத வேண்டும் எனக் கூறினார். நான் அவரிடம் நான் அறியாத ஒன்றை எழுதினால் அது பொய்யான தகவல் ஆகிவிடும் என்று கூறி, இன்சூரன்ஸ் படிவத்தை கிழித்து போட்டு விட்டு, என் கையிலிருந்து ரூ.12,000/- கொடுத்து கணக்கை முடித்து விட்டேன்.
நாம் பரலோகிற்கு செல்லும் பொது, நம்மைப் பார்த்து நமதாண்டவர் “நல்லது, உண்மையும், உத்தமமுள்ள ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மை யாயிருந்தாய்” என மகிழ்வுடன் வரவேற்க வேண்டும். கொடுக்கப்பட்ட கொஞ்சத்தில் உண்மையாயில்லாமல் இருந்தால் பரலோகையே இழக்கும் அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. கார் இல்லாமல் கூட பரலோகம் முடியும் ஆனால் “கார் இன்சூரன்ஸ் குளறுபடி” பிரித்து விடக் கூடும். மேலும் பூலோகில் கனிதரும் வாழ்விலிருந்து விளக்கி நம்மை அழித்து விடும்.
“திராட்சத் தோட்டங்களைக் கொடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்கு பிடியுங்கள். நம்முடைய திராட்சத் தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே” (உன்னதப்பாட்டு:2:15)