கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நம்மை பிரகாசிப்பிக்கிறவர். வன்தம்முடைய ஜனங்களை உலகமக்கள்மத்தியில் சுடர்களைப்போலஎரிந்துபிரகாசிக்கவிரும்புகிறார். தேவனுடையபிள்ளைகளைமகிமையினாலும், கனத்தினாலும் அலங்கரித்து புறஜாதிகள்மத்தியில் யோசேப்பைபோல தானியேலைப்போல உயர்த்தவிரும்புகிறார். அதற்குநாம் என்ன செய்ய வேண்டுமென்றால், சங்.34:5 வசனத்தில் இவ்வாறுபார்க்கிறோம் “ அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” என்கிறார் தாவீது. தாவீது ராஜாவின் வாழ்க்கையில் கூட தலைமயிரிலும் அதிகமான சத்துருக்கள் அவருக்குஇருந்தனர். அவர் தேவனையே சார்ந்து கொண்டு, தேவனுடைய உதவிக்காக அவர் முகத்தை நோக்கி பார்த்ததால் அவர் முகம் வெட்கப்பட்டு போகவில்லை.
தேவனுடைய கிருபைகளுக்காய் நாம் அவரது முகத்தை நோக்கிப் பார்க்கவேண்டும். நம்முடைய பாதுகாப்புக்காக அவரை நோக்கிப் பார்க்க வேண்டும். நமது பிரச்சனைகள் தேவைகளுக்காக நோக்கிப் பார்க்க வேண்டும். விளக்குகள் பிரகாசமாக எரியும் போது விளக்கை நோக்கி பூச்சிகள் வருகின்றன.அது போல நமது வாழ்க்கை பிரகாசமா கஇருந்தால் மற்றவர்களை நம்மிடம் இழுத்து க்கொள்வோம். தேவனுடைய பிள்ளைகளுக்குக வர்ச்சியையும், பிரகாசத்தையும் மகிமையையும், அலங்காரத்தையும் கொடுப்பது தேவசமூகமே. அவரவர் தேவனுடைய சமூகத்தில் நேரம் செலவழிப்பதன் அளவைப் பொறுத்தே பிரகாச மடைய முடியும்.
நாம்பிரகாசமடையஎன்னசெய்யவேண்டும்?
1. தேவனோடுகூடதனித்திருப்பவர்கள்பிரகாசம்அடைவார்கள்!
யாத்.34:29,30வசனங்களில், “…சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.” ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும் போது அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரபயந்தார்கள். மோசேயின் முகம்பிரகாசமாய் இருந்தது. தேவசமுகத்தில் 40 நாட்கள்இரவும், பகலும்பு சியாமலும் குடியாமலும் இருந்து மலையிலிருந்து இறங்கிவந்த போது முகம்பிரகாசமாக இருந்தது. தேவனோடு சஞ்சரிக்கும் போது மோசே தேவனுடன் பேசினான், தேவன் மோசேயுடன் பேசினார், அவன் முகம் பிரகாசமடைந்தது.
நோவா தேவனோடு சஞ்சரித்தான், மோசே, தாவீது தேவனோடு சஞ்சரித்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். குடும்பம் இருந்தது. தேவனோடு தனித்துப்பேசநேரம் எடுத்தார்கள். தேவனோடு பேசினார்கள். தேவப்பிள்ளைகள் தேவனோடு கூட தனித்திருக்கும் அனுபவமுடையவர்களாக இருந்தால் அவர்கள் பிரகாசம் அடைவார்கள். அவர்களது பழக்கவழக்கம், பார்வை, சொல், செயல் மற்றவர்களை கவர்ச்சிக்கும் பிரகாரமாக இருக்கும்.
2. நீதிமான்களின்பாதையில்நடக்கிறவர்கள்பிரகாசமாகஇருப்பார்கள்!
நீதி.4:18 வசனத்தில், “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும்.” நீதிமான்களின் பாதை தேவன் வகுத்தபாதை, செம்மையானபாதை, தேவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதை, தேவனுடைய கற்பனைகளின் படி நடக்கும் பாதை, நமதுபாதை அல்ல, தேவ பாதையே இராஜபாதை “தேவன் வகுத்த வழி திட்டவட்டமாய் எழுதப்பட்டு நமது கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபூர்வபாதை, திட்டமும் தெளிவுமான சத்தியபாதை உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லாத தென்றும் கூறும் பாதை. இப்படிப் பட்ட பாதையில் செல்லும் நீதிமான்கள் வாழ்க்கையில் பிரகாசமடைவார்கள்”
3. ஞானவான்கள்பிரகாசமடைவார்கள்!
தானி.12:3 வசனத்தில் “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் பிரகாசமடைவார்கள். ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணுகிறவர்கள் ஞானவான்கள், அவர்கள் பிரகாசமடைவார்கள்.
1. நாம் ஆத்தும ஆதாயம் செய்யவேண்டும்,
2.போக முடியாத இடங்களுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும். இதுவே உண்மையான ஆசீர்வாதங்களுக்கு காரணங்களாகும்.
4. கண்கள்தெளிவாயிருந்தால்சரீரம்முழுவதும்பிரகாசமாகும்
லூக்.11:34-36 வசனங்களில், “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன்சரீர முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” என்கிறார் நம் ஆண்டவர், கண்பார்வை நியாயமானபார்வையாக, பரிசுத்த பார்வையாக இருக்கவேண்டும். கண்தீமையானதை பார்த்தால் தீயவனாக வாழ்வான். நன்மையானதை பார்த்தால் நல்லவனாகவும் வாழமுடியும். தேவப் பிள்ளைகள் பார்க்கும் பார்வை வேறு. உலக மனிதர்பார்க்கும் பார்வை வேறு. கண்கள் தேவ வசனத்தால் குளிப் பாட்டப்பட்டு ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு இருக்குமானால் தேவனின் மகிமையைக்காண முடியும். வாழ்க்கை நாளுக்கு நாள் பிரகாசமடையும்.
5. மரித்தோரைவிட்டுஎழுந்தால்பிரகாசமடைவாய்!
எபே.5:14 வசனத்தில், “ஆதலால், தூங்குகிறநீவிழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.” மேலும் 2கொரி.6:17,18வசனங்களில் “…பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்…” விட்டதைத் தொடாதே, அசுத்தமானதை வெறுத்துதள்ள வேண்டும். அப்பொழுது சர்வ வல்லவருக்கு குமாரரும், குமாரத்திகளுமாய் இருப்பீர்கள், ஆவிக்குரிய ஜீவியத்தில் அசட்டையாய், தூங்கிக் கொண்டிருக்கிற நிலையை விட்டு எழும்பினால்மட்டுமேபிரகாசமடையமுடியும். மரித்தோரின்மத்தியில், மரித்தோருடையபழக்கவழக்கத்தில், மாறுபாடான வழியில், தீயப் பழக்கத்தில் இருந்து எழும்ப வேண்டும். கவலையீனமான ஜீவியத்திலிருந்து, நண்பர்கள்உறவினர்கள்நடுவிலிருந்துஎழும்பு, அசட்டையான வாழ்க்கையிலிருந்து எழும்புங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களைப் பிரகாசிக்கச் செய்வார்.
6. ஞானம்முகத்தைப்பிரகாசிக்கப்பண்ணும்!
பிர.8:1 வசனத்தில், “…மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம்மாறும்.” ஞானம் பிரகாசம் அடையச் செய்யும் அறிவு மனுஷீகமானது. ஞானம் தேவனுக் குரியது, அறிவாளியாக இல்லாமல் ஞானியாகவும் இருக்கமுடியும். கர்த்தரைத் தேடத் தேட, வசனத்தைத் தியானிக்க தியானிக்க ஞானம் உண்டாகிறது. கர்த்தருக்குப் பயந்து ஜீவிப்பதும், எனக்குள் தேவன் வாசமாயிருக்கிறார் என்று அறிந்துதேவனுக்கு சாட்சியாக ஜீவிப்பதும் ஞானியாக இருக்கும்வழி, ஞானம் பிரகாச மடையச்செய்யும்.
7. நற்கிரியைகள்செய்தால்பிரகாசமடையும்!
மத்.5:16 வசனத்தில், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக ப்பிரகாசிக்கக்கடவது” என்று மலைப் பிரசங்கத்தில் இயேசு கூறினார். நற்கிரியைகள் செய்வதால் பிரகாசமடையச் செய்கிறது. உடல் உழைப்பு, தியாகம், பணச்செல்வு, ஒப்புக் கொடுத்தல் தேவை, நற்கிரியைகள் செய்வது பிரகாசமடையச் செய்கிறது. அதற்காகவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம்.
பிரகாசமாக்கப்பட்டசபைஎப்படிஇருக்கும்?
எபி.10:32-34 வசனங்களில், “முந்தினநாட்களைநினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே” பிரகாசமாக்கப்பட்டவர்கள், பிரகாசமாக்கப்பட்ட சபை எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.
1. மிகுந்த போராட்டத்தை சபைசகிக்கிறது.
2. நிந்தைகளையும், உபத்திரவங்களையும் சகிக்கிறது.
3. பாடுபடுகிறவர்களுடன் பங்காளிகளாவது,
4. கட்டப்பட்டவர்களுக்காகபரிதவிக்கிறது, (அவர்களுடன்ஐக்கியப்படுவது)
5. பரலோகத்தில் நிலையான சுதந்திரம் உண்டு என்பதை நினைவு கூர்ந்து கொள்வது.
6. தங்கள் ஆஸ்திகளைச் சந்தோஷமாய் கொள்ளையிடக் கொடுப்பது. இப்படிப்பட்டவர்களே உண்மையாக பிரகாசமாக்கப்பட்டவர்கள்.
இதைவாசிக்கும்அன்புநண்பரே!
தேவனுடைய பிள்ளைகள் எவ்வாறு பிரகாசமடைய முடியும் என்றும் பிரகாசமாக்கப்பட்ட சபை எப்படியிருக்கும்? பிரகாசமாக்கப்பட்டவர்கள் எப்படிஇருப்பார்கள்? என்றும் பார்த்தோம். இந்த ஆண்டிலும் தேவன் நம்மை பிரகாசப்படுத்தி, சத்துருக்களுக்கு முன்பாக நம்மைக் கனப்படுத்தி உயர்த்தவிரும்புகிறார். மோசே, நோவா, தாவீது போல தேவனோடு நடப்போம்! ஞானவான்களைப் போல ஆத்தும ஆதாயம் செய்வோம்! மரித்தோரைவிட்டு எழும்பி, தேவனுக்காக வைராக்கியமாக வாழுவோம்! தேவனுக்கு சாட்சியாக வாழ்ந்து நற்கிரியைகளைச் செய்வோம். தேவன் இந்த கோணலும் மாறுபாடான இந்த சந்ததியில் சுடர்களைப் போல எரிந்து பிரகாசமடையச் செய்வாராக! ஆமென்.




