இயேசு கிறிஸ்துவின் வருகையிவே நியாயத்தீர்ப்பு
அன்றியும் மனுஷ குமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும் போது தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாக சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளை தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். மத் 25: 31-33
இயேசு கிறிஸ்து தமது மகிமை பொருந்தினவராய், தமது பரிசுத்த தூதரோடு இரண்டாம் வருகையில் வரும்போது அவர் மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருப்பார். அதாவது, இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகைக்குப் பின், அவர் ஒரு மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார். மேற் கண்ட வசனத்திலிருந்து, இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகையின் போது, சகல ஜனங்களையும் நியாயம் தீர்க்கிறவராய் மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார். அதற்குப் பின்வரும் வசனங்களை வாசித்தால், இந்த நியாயத் தீர்ப்பைக் குறித்த விளக்கம் கிடைக்கும்.
சகல ஜனங்களும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்
இரண்டாம் வருகைக்குப் சகல பின் உயிரோடு இருக்கும் சகல ஜனங்களும், இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக கொண்டு வரப்படுவார்கள். இயேசு கிறிஸ்து வரும் போது அந்திக் கிறிஸ்துவையும். கள்ளத்தீர்க்க தரிசியையும் நரகத்தில் தள்ளி, அவர்களுடைய யோசனையை அழிப்பார். உயிரோடு பலகோடிக் கணக்கான மக்கள் ஒவ்வொரு தேசத்திலும் இருப்பார்கள். அவர்கள் யாவரும் இயேசு கிறிஸ்து வின் முன்பு கொண்டுவரப்படுவார்கள். அவர்களை இரண்டாகப் பிரிப்பார்கள். வலது பக்கத்தில் ஒரு கூட்டமும், இடது பக்கத்தில் ஒரு கூட்டமாக பிரிப்பார். வலது பக்கத்திலே நிற்பவர்களை செம்மறியாடு என்றும், இடது பக்கத்திலே நிற்பவர்களை வெள்ளாடு என்றும் வேதம் கூறுகிறது.
வலது பக்கத்திள் நிற்பவர்களை பார்த்து, எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள். என்னைப் பார்க்கவந்தீர்கள், என்னை விசாரிக்க வந்தீர்கள் என்றார். அவர்கள் அதிர்ந்து போனார்கள். எப்பொழுது ஆண்டவரே, உம்மைப் பார்க்க வந்தோம். வஸ்திரம் கொடுத்தோம் என்றார்கள் அதற்கு இயேசு என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்றார். அவர் யாரைக் குறிப்பிடுகிறார். உபத்திரவ காலத்தில் மிகுந்த வேதனை அனுபவித்த யூதர்களையும் உபத்திரவங்களை அனுபவித்த விசுவாசிகளைப் பார்த்துதான் என் சகோதரன் எனக் கூறிகிறார். அவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்திருந்தால், கர்த்தர் அதை தனக்கே செய்ததாகக் கருதி, அவர்களை ஆசீர்வதிக்கிறார்.
ஆனால் இடது பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து, எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை. என்னைப் பார்க்கவில்லை. என்னை விசாரிக்கவில்லை என்கிறார். அவர்களும் எப்பொழுது ஆண்டவரே என்கின்றனர். மிகவும் சிறியவர்களாகிய இவர்களுக்கு எதைச் செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை என்றார்.
இறுதியிலே வலது பக்கத்தில் நின்றவர்களை பிதாவினால் ஆசீர்வத்திக்கப்பட்டவர்களே. உங்களுக்காக ஆயத்தப் பண்ணப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள் என்பார். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சிக்கு பங்குள்ளவர்களாய் ஆவார்கள். அது போல இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, நித்திய ஆக்கினையிலே போங்கள் என்று சபிப்பார். அவர்களின் முடிவு அந்தோ பரிதாபம் இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருடம் அரசாட்சியில் பங்கடைபவர்கள் எத்தனை பாக்கியவான்கள்.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுங்கள்
இதே காரியத்தை உவமையாக இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். களைகளைப் பற்றிய உவமை கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்கள். களைகளைக்கட்டி அக்கனியிலே போடுவார்கள். எனக் கூறியுள்ளனர் அது மட்டுமல்ல வலையிலே மீன்கள் அகப்பட்ட போது. அதைப் பிரித்து நல்வை கனளக்கூடையிலும் ஆகாத வைகளை எறிந்தும் போடுவார்கள். எனக் கூறியுள்ளார். இப்படியே உலகத்தின் முடிவிலும், இரண்டாம் வருகையின் போதும் நடக்கும் ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள். களைகளை சுட்டெறிப்பார்கள். வெள்ளாடுகளைப் போல சபிக்கப்பட்டவர்கள் நித்திய ஆக்கினைய அடைவார்கள்.
சகல ஜனங்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நியாயம் தீர்க்கப்படுவார்கள். 700 கோடி ஜனங்கள் பூமியில் எத்தனை பேர் ஆயிரம் வருட ஆட்சியில் பங்கடைவார்கள்? ஒரு சிறிய கூட்டம் தான். நீங்கள் எந்தக் கூட்டத்தில் இருப்பீர்கள். வலது பக்கத்தில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கூட்டமா? இடதுபக்கத்தில் உள்ள சபிக்கப்பட்ட கூட்டமா? சகோதரர் என அழைக்கப்பட்ட சிறியவரில் 8 ஒருவரா? அல்லது வெண்குதிரையில் இயேசுவுக்கு பின் வரும் உண்மையுள்ளோரின் கூட்டமா? நீங்கள் எங்கிருப்பீர்கள். ஆகவே சிந்தித்துப் பார்த்து இன்றே ஆயிரம் வருட ஆட்சியில் பங்கடைய, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுங்கள். ஆமென்