விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

Written by Susila Walker

December 5, 2022

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும், மைக்ரோ பையோலாஜிக்கல், தடுப்பு ஊசி, பாஸ்டிரைசேஷன்(pasteurization, microbial, Vaccination,fermentation )போன்ற துறைகளிலும் செய்துள்ளார்.  அவர் கடவுள் மேல் முழு நம்பிக்கையுள்ளவர். நித்திய வாழ்க்கையிலும் நம்பிக்கையுள்ளவர். அவர் வேத வசனத்தின் படி வாழ்ந்தவர். அவர் தன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் போதும் ஜெபிப்பார்.  லூயிஸ் பாஸ்டர் இவ்வாறு கூறுகிறார். “நான் எவ்வளவுக்கு அதிகமாக இயற்கையை படிக்கிறேனோ, அவ்வளவுக்கு அதிகமாக சிருஷ்டி கர்த்தரின் அற்புதமாக படைப்பை கண்டு ஆச்சரியப்படுகிறேன்.  நான் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் இடத்தில் நாம் கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாக இருக்கிறோமா?

ஒரு நாள் லூயிஸ் பாஸ்டர் ரயிலில் வேலைக்காக பல்கலைக்கழகத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார் அவர் கையில் வேதாகமம் இருந்தது, வேத வசனத்தை தியானித்து கொண்டிருந்தார். பின்பு வெகுநேரம் மௌனமாக ஜெபித்து கொண்டிருந்தார்.  இவரை ஒரு வாலிபன் கவனித்துக் கொண்டே வந்தான்.  அவனுக்கு சிரிப்பாகவும் ஏளனமாகவும் வந்தது.  அவரிடம் பேச ஆரம்பித்தான்.  இந்த நாகரீக உலகில் இப்படி ஒரு பைத்தியமா? உலகம் எவ்வாறு முன்னேறி விட்டது. அதைப்பற்றி உமக்கு தெரியாதா? நீர் இன்னும் பலங்காலத்திலேயே உள்ளவரா? ஏன் இப்பொழுது ஜெபித்துக் கொண்டும் வேதம் வாசித்துக் கொண்டும் காலத்தை வீணாக்குறீர்? என்று ஏளனமாக கேட்டான். அதற்கு லூயிஸ் பாஸ்டர் ஒன்றும் அவனிடம் பதில் கூறவில்லை.  சிறிது நேரத்திற்கு பின்பு லூயிஸ் பாஸ்டர் ரயிலில் இருந்து இறங்கும் நேரம் வந்தபோது அந்த இளைஞன் அப்பெரியவரின் பெயரையும் விசாலத்தையும் அறிய விரும்பினான். 

அந்த பெரியவரும் தனது விசிட்டிங் கார்டை (எளைவைiபே உயசன) எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து விட்டு இறங்கி சென்றார். 

அந்த கார்டில் அவர் பெயரை உற்றுப் பார்த்த போது அந்த இளைஞன் அதிர்ச்சியடைந்தான். பிரபல விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் என்று எழுதப்பட்டிருந்தது.  அன்பு நண்பரே! நாம் எவரையும் அற்பமாக எண்ணக் கூடாது உருவதைக் கண்டும் தோற்றத்தைக் கண்டும் மற்றவர்களை அற்பமாக எண்ணக் கூடாது. தாழ்மையுள்ளவர்களை தேவன் உயர்த்தி மேன்மைப்படுத்துகிறார்.  வேதத்தை பின்பற்ற விரும்புகிறவர்கள் பெருமை பாராட்டமாட்டார்கள்.  அவர்கள் தேவனை மட்டும் பிரியப்படுத்த விரும்புவார்கள்.  “தாழ்மைக்கும், கர்த்தருக்குப் பயப்படுத்தலுக்கும் வரும் பலன் ஐஸ்வரியமும, மகிமையும், ஜீவனுமாம்.” நீதிமொழிகள் 22:4 …ஆமென்

Author

You May Also Like…

Share This