“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33)
நாத்தான்வேல் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். சுமார் 37 ஆண்டுகள் மிகுந்த தைரியமாக இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷப் பணி செய்தவர். புறஜாதி மக்களிடம் அற்புத அடையாளங்கள் மூலம் திரளான மக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவந்தார். இவர் “அற்புதங்களின் அப்போஸ்தலன்” என்றும் குறிப்பிடப்படுகிறார். அவர் குறிப்பாக தற்போதய துருக்கி, இந்தியா மற்றும் அர்மேனியா நாடுகளில் நற்செய்தி பணியாற்றினார். முடிவில் இரத்த சாட்சியாக மரித்தார். இவர் அரச பரம்பரையில் வந்தவர்.
வேதாகமத்தில் நாத்தான்வேல்:
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களிலும் நாத்தான்வேல் என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பர்தொலொமேயு என்பதற்கு “தோல்மாயின் மகன்” என்று பொருளாகும். அரச பரம்பரையில் வந்தவர். அரசியல் பின்னணியிலிருந்து வந்தவர். நாத்தானுவேல் வேத அறிவு நிறைந்தவர். எப்பொழுதும் தேவனைப் பற்றியும், மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள், தேவனுடைய ராஜ்ஜியத்தைப் பற்றிய உண்மைகளை நன்கு அறிந்து உணர்ந்தவர். இயேசு கிறிஸ்து முதன்முதலில் இவரைப் பார்த்தபோது, இவர் அத்திமரத்தின் கீழ் இருந்தார். இவரது நண்பராகிய பிலிப்பு இவரிடம் வந்து “நியாயப்பிரமாணத்தில் மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம். அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்று சாட்சி கூறியபோது, “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமா?” என்றார். நாத்தானு வேல் இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைக் கண்டவுடன், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார்.
அவர் அத்திமரத்தடியில் இருந்ததை தான் கண்டதாகக் கூறியபோது, “ரபீ, நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று கூறியவர், கிறிஸ்துவைப் பற்றிய சரியான வெளிப்பாடு உள்ளவராய் சாட்சி பகிர்ந்த முதல் சீஷர் இவர்தான்.
நாத்தான்வேலின் இந்திய மிஷனெரிப் பணி:
நாத்தான்வேல் வட இந்தியாவிற்கு கி.பி.55ல் வந்தார். அப்பொழுது பரி.தோமா இந்தியாவில் ஊழியம் செய்துவந்தார். நாத்தான்வேல் இந்துக்கள் மற்றும் பிராமணர்கள் மத்தியில் பணி செய்தார். இந்திய மொழியைக் கற்று “மத்தேயு” சுவிசேஷத்தை எபிரெயு மொழியிலிருந்து மொழியாக்கம் செய்தார்.
ஒருமுறை “அஸ்தரோத்” என்ற கோயிலுக்கு புனித யாத்திரிகர் போல நுழைந்தார். அங்கு அந்த தெய்வம் குணமாக்கும் என்று நம்பி காத்திருந்த அநேகரை குணமாக்கினார். இயேசுவே இரட்சகர். அங்குள்ள விக்கிரகத்தை கட்டி, வனாந்திரத்துக்கு அனுப்பினார். பின்பு அடுத்த பட்டணம் சென்றார். “பெரித்” (க்ஷநசiவா) என்ற விக்கிரக கோயிலுக்குச் சென்றார். அங்குள்ள பூசாரிகள் அந்த விக்கிரகத்திடம் நாத்தானுவேல் எப்படிப்பட்டவர்? தோற்றம் அடையாளம் கேட்டனர். கோயிலில் உள்ள விக்கிரகம் “பர்தொலொமேயு தேவனின் நண்பன். இவர் இந்த பட்டணத்துக்கு வந்தது எல்லா விக்கிரகங்களையும் ஒழிக்கும்படி” என்றது.
தனிப்பட்ட பரிசுத்த வாழ்க்கை பற்றிய சாட்சி:
அவர் எப்பொழுதும் வெள்ளை நிற கோட்டை அணிபவர் (றுhவைந ஊடிரசவ) அவரது 26ஆவது வருட ஊழிய காலத்தில் இந்தியா வந்தார். எப்பொழுதும் அவர் வஸ்திரம் தூய்மையாகவும் அழுக்கு இல்லாமலும் காணப்பட்டது. அவர் நல்ல அரச வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் எப்பொழுதும் முழங்காலில்தான் நின்று ஜெபிப்பார். ஒரு நாளில் பகலில் 100 தடவைகள் முழங்காலில் நின்றுதான் ஜெபிப்பார். அவர் எங்கு சென் றாலும் தேவ தூதர்கள் அவருக்கு கூட சென்றார்கள். அவருக்கு எல்லா மொழிகளிலும் பேசும் ஆற்றல் இருந்தது.
நாத்தான்வேல் இந்தியாவில் ஊழியம் செய்ததை அறிவிக்கும் சான்றுகள்:
நாத்தான்வேலின் இந்திய ஊழியத்தைப் பற்றி “ஜெசுபியஸ்” என்ற சரித்திர ஆசிரியரும், “ஜெரோம்” என்ற சரித்திர ஆசிரியரும் உறுதிபடுத்தி கூறியுள்ளனர். இவர்கள் 4ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டேனியஸ் (ஞயவேயiரேள) என்பவரும் நாத்தான்வேல் “கலிங்கம்” தற்போதைய ஒரிசா, பாம்பே, கோவா பகுதிகளில் ஊழியம் செய்தார் என்கிறார். மேலும் இந்திய மொழியை கற்று “மத்தேயு” சுவிசேஷத்தை மொழிபெயர்த்தார். அவர் பயன்படுத்திய எபிரெய புதிய ஏற்பாடும் அங்குள்ள மக்கள் (கோவா) பாதுகாப்பாக வைத்திருப்பதை பார்த்ததாக சரித்திர ஆசிரியர் கூறுகின்றனர். போர்ச்சுகீசியர் 15ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்து “கோவாவில்” கிறிஸ்தவ ஊழியங்களை ஸ்தாபிக்கும் வரை, நாத்தான்வேல் மூலம் கிறிஸ்தவரானவர்களும் கிறிஸ்துவை பின்பற்றி சாட்சியாக வாழ்ந்ததாகவும், பின்பு பிரான்சிஸ் சேவியர் போன்ற புனிதர்கள் தோற்றுவித்த சபை மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.
ஆப்பிரிக்க ஊழியம்:
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் ஊழியம் செய்தார். ஆசியா மைனரில் எராப்போலி பட்டணத்தில் ஊழியம் செய்துவந்த தனது நண்பர் அப்போஸ்தலனாகிய பிலிப்புவோடு சேர்ந்து சில காலம் ஊழியம் செய்தார். பிலிப்புவோடு கூட தண்டிக்கப்பட்டாலும் அவர் கடைசி வேளையில் ஆளுநரால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்மினியாவில் ஊழியம்:
பர்தொலொமேயு கி.பி.60இல் ஆர்மீனியாவில் தனது பணிகளைத் துவங்கினார். ஏற்கனவே அப்போஸ்தலனாகிய ததேயு கி.பி.43 முதல் ஊழியம் செய்து வந்தார். ஒரு சபையையும் நிறுவியிருந்தார். இவர்கள் இருவருமே ஆர்மினிய சபையின் பிதாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். பர்தொலொமேயு அப்பகுதியின் அரசருடைய மூளைக் கோளாறுள்ள மகளை குணமாக்கினார். அரசன் வணங்கிய சிலையிலுள்ள பிசாசை விரட்டினார். அரசரும் வேறு பல அதிகாரிகளும் ஞானஸ்நானம் பெற்றனர். அதினால் பூசாரிகள் வெகுண்டெழுந்து பர்தொலொமேயு ஆர்மினிய நாட்டு தெய்வங்களை அற்பமாக பேசி அவதூறு செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் காரணத்தினால் மன்னர் அஸ்தியஜெஸ் (முiபே ஹளவலயபநள) முன்பாக நிறுத்தப்பட்டார். மன்னன் என் சகோதர னையே நீ உனது தவறான வழிக்கு இழுத்துவிட்டாய் என்று கத்தினான். அதற்கு பர்தொலொமேயு கொஞ்சம்கூட அஞ்சவில்லை. “கிறிஸ்துவை பிரசங்கிப்பதை விட்டு விட்டு, சிலைகளை வணங்கி, பலியிடக் கூறினான். “நான் பணியப்போவதில்லை” என்று கூறியதும், அவரை சித்திரவதை செய்து, தடியால் தாக்கி, சிலுவையில் தலைகீழாகத் தொங்கவிடுங்கள். பின்னர் உயிரோடு தோலை உரித்து கொலை செய்ய உத்தரவிட்டான். இந்தச் சூழ்நிலையிலும் நல்ல சுயநினைவுடன், “இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அவராலேயே நித்திய ஜீவனை அடைவீர்கள். மாயையைப் பின்பற்றி நித்திய அழிவை அடையாதிருங்கள்” என்று பிரசங்கித்தார். அவர் பேசுவதை அனுமதிக்காமல் போர்ச்சேவகர் கோடாரியால் தலையை வெட்டிப் பிளந்து தண்டனையை நிறைவேற்றினர். அவர் இரத்தசாட்சியாக மரித்தார். கி.பி.68ல் கொடூரமான வேதனையில் மரித்தார். ஜெரோம் என்ற சரித்திர ஆசிரியர் “பர்தொலொமேயுவின் சுவிசேஷம்” என்ற நூலை இவர் எழுதியதாக கூறுகிறார். ததேயு, பர்தொலொமேயு இவர்கள் ஆர்மினிய சபை (ஹசஅநnயைn ஊhரசஉh) அப்போஸ்தலர் களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கல்லறைகள் அங்குள்ளது.
அன்பு நண்பரே! தேவன் இந்தியர்களாகிய நம்மேல் வைத்த பிரியத்தினிமித்தம் தனது 12 அப்போஸ்தலரில் 2 பேரை (தோமா, பர்தொலொமேயு) இந்திய திருச்சபை பணிக்கு ஊழியம் செய்ய அனுப்பினார். 12 அப்போஸ்தலரில் இவர் ஒருவரே அரசப் பரம்பரையில் வந்தவர். தாழ்மையுடன் சீடர்களுடன் சேர்ந்து இயேசுவிடம் கற்றுக் கொண்டு, கடைசி வரை ஊழியம் செய்து இரத்த சாட்சியாக மரித்தார். நாமும் நம்மை தேவனுக்கு ஊழியம்செய்ய அர்ப்பணிப்போம்! மாரநாதா!!