(சென்ற இதழின் தொடர்ச்சி….)
ஆப்பிரிக்க ஊழியம்:
ஆப்பிரிக்காவின் வட பகுதியில் ஊழியம் செய்தார். ஆசியா மைனரில் எராப்போலி பட்டணத்தில் ஊழியம் செய்துவந்த தனது நண்பர் அப்போஸ்தலனாகிய பிலிப்புவோடு சேர்ந்து சில காலம் ஊழியம் செய்தார். பிலிப்புவோடு கூட தண்டிக்கப்பட்டாலும் அவர் கடைசி வேளையில் ஆளுநரால் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்மினியாவில் ஊழியம்:
பர்தொலொமேயு கி.பி.60இல் ஆர்மீனியாவில் தனது பணிகளைத் துவங்கினார். ஏற்கனவே அப்போஸ்தலனாகிய ததேயு கி.பி.43 முதல் ஊழியம் செய்து வந்தார். ஒரு சபையையும் நிறுவியிருந்தார். இவர்கள் இருவருமே ஆர்மினிய சபையின் பிதாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். பர்தொலொமேயு அப்பகுதியின் அரசருடைய மூளைக் கோளாறுள்ள மகளை குணமாக்கினார். அரசன் வணங்கிய சிலையிலுள்ள பிசாசை விரட்டினார். அரசரும் வேறு பல அதிகாரிகளும் ஞானஸ்நானம் பெற்றனர். அதினால் பூசாரிகள் வெகுண்டெழுந்து பர்தொலொமேயு ஆர்மினிய நாட்டு தெய்வங்களை அற்பமாக பேசி அவதூறு செய்கிறார் என்ற குற்றச்சாட்டின் காரணத்தினால் மன்னர் அஸ்தியஜெஸ் (King Astyages) முன்பாக நிறுத்தப்பட்டார். மன்னன் என் சகோதர னையே நீ உனது தவறான வழிக்கு இழுத்துவிட்டாய் என்று கத்தினான். அதற்கு பர்தொலொமேயு கொஞ்சம்கூட அஞ்சவில்லை. “கிறிஸ்துவை பிரசங்கிப்பதை விட்டு விட்டு, சிலைகளை வணங்கி, பலியிடக் கூறினான். “நான் பணியப்போவதில்லை” என்று கூறியதும், அவரை சித்திரவதை செய்து, தடியால் தாக்கி, சிலுவையில் தலைகீழாகத் தொங்கவிடுங்கள். பின்னர் உயிரோடு தோலை உரித்து கொலை செய்ய உத்தரவிட்டான். இந்தச் சூழ்நிலையிலும் நல்ல சுயநினைவுடன், “இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அவராலேயே நித்திய ஜீவனை அடைவீர்கள். மாயையைப் பின்பற்றி நித்திய அழிவை அடையாதிருங்கள்” என்று பிரசங்கித்தார். அவர் பேசுவதை அனுமதிக்காமல் போர்ச்சேவகர் கோடாரியால் தலையை வெட்டிப் பிளந்து தண்டனையை நிறைவேற்றினர். அவர் இரத்தசாட்சியாக மரித்தார். கி.பி.68ல் கொடூரமான வேதனையில் மரித்தார். ஜெரோம் என்ற சரித்திர ஆசிரியர் “பர்தொலொமேயுவின் சுவிசேஷம்” என்ற நூலை இவர் எழுதியதாக கூறுகிறார். ததேயு, பர்தொலொமேயு இவர்கள் ஆர்மினிய சபை (ஹசஅநnயைn ஊhரசஉh) அப்போஸ்தலர் களாக கருதப்படுகின்றனர். இவர்கள் கல்லறைகள் அங்குள்ளது.
அன்பு நண்பரே! தேவன் இந்தியர்களாகிய நம்மேல் வைத்த பிரியத்தினிமித்தம் தனது 12 அப்போஸ்தலரில் 2 பேரை (தோமா, பர்தொலொமேயு) இந்திய திருச்சபை பணிக்கு ஊழியம் செய்ய அனுப்பினார். 12 அப்போஸ்தலரில் இவர் ஒருவரே அரசப் பரம்பரையில் வந்தவர். தாழ்மையுடன் சீடர்களுடன் சேர்ந்து இயேசுவிடம் கற்றுக் கொண்டு, கடைசி வரை ஊழியம் செய்து இரத்த சாட்சியாக மரித்தார். நாமும் நம்மை தேவனுக்கு ஊழியம்செய்ய அர்ப்பணிப்போம்! மாரநாதா!!