“உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையா ளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்” (அப்.4:30)
பேதுருவையும், யோவானையும் பிரதான ஆசாரியரின் கூட்டம் பயமுறுத்தினார் கள். எருசலேமின் விசுவாசிகள் அதைக் கேட்டு பயந்துவிடவில்லை. மாறாக, மிகுந்த ஊக்கமாய் ஜெபம் பண்ணினார்கள். அவர்களது முதலாவது ஜெபக் குறிப்பு இயேசுவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படிச் செய்ய வேண்டும் என ஜெபித்தார்கள். பொதுவாக, எதிர்ப்பின் போது, ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம். எதிர்ப்பாளர்கள் மனந்திரும்ப ஜெபிப்போம். இவைகள் யாவும் தற்காப்பு ஜெபம். ஆனால், பேதுருவின் காலத்து விசுவாசிகள் தற்காப்பு ஜெபத்தைச் செய்யவில்லை. மாறாக எதிரிகளின் அரண்களை வீழ்த்தத்தக்கதாக தாக்குதலின் ஜெபத்தைச் செய்தார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் நடைபெற ஜெபித்தார்கள். நமது தேசத்தில் ஜனங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள அற்புதங்களும் அடையாளங்களும் தேவை. நாம் சோர்ந்துபோய் ஆவியிலே பெலன் குன்றி இருப்பதால், இத்தகைய ஜெபங்களை ஜெபிப்பதில்லை. உற்சாகமடைவோம். நமது விசுவாசத்தை புதுப்பித்துக் கொள்வோம். பெரிய காரியங்களைக் கேட்போம். இயேசுவின் நாமத்தில் அற்புதங் களும் அடையாளங்களும் நடைபெற ஜெபிப்போம். தேவன் நமது நகரத்திலே நமது தேசத்திலே, இயேசுவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் நடைபெறும்படிச் செய்வாராக.
வசனத்தை தைரியத்தோடு சொல்லும் அநுக்கிரகம்
எருசலேமின் விசுவாசிகள் வசனத்தை தைரியத்தோடு சொல்லும் அநுக்கிரகத் தைக் கேட்டார்கள். வசனமே தேவனுடைய ஆவியின் பட்டயம். சர்வாயுத வர்க்கங் களின் எதிரியாகிய பிசாசை தாக்கும் ஆயுதம். எனவே, வசனத்தை தைரியத்தோடு சொல்லக்கூடிய கிருபையைக் கேட்டார்கள். அதுமட்டுமல்ல, பிணியாளிகளை குணமாக்கும்படி தேவன் தமது கரத்தை நீட்டும்படி ஜெபித்தார்கள். எத்தனை அற்புத மான ஜெபம். இதன் விளைவு என்ன? விசுவாசிகள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். தேவ வசனத்தை தைரியமாய்ச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, தேவன் அவர்களின் ஒருமனப்பட்ட ஜெபத்தை கேட்டு, இயேசுவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் பேதுருவின் மூலம் நடைபெறும்படிச் செய்தார்.
“பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்” (அப்.5:15)
ஆம்! பிரியமானவர்களே, இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டுச் செய்யும் ஜெபம் வல்லமையுள்ளது. இது எழுப்புதலின் ஆரம்பம். தேவன் தமது விசுவாசிகளை பரிசுத்த ஆவியால் நிரப்பி, ஆவியின் வரங்களையும், வல்லமையையும் தந்து இயேசுவின் நாமத்தில் அற்புதங்களும் அடையாளங்களும் நடக்கும்படி செய்வார். விசுவாசிகள் மத்தியிலும், சபையிலும் தேவன் இயேசுவின் நாமத்தில் ஒருமனப் பாட்டைத் தருவாராக. அப்பொழுது நமது நகரம் அசைக்கப்படும்; தேசம் அசைக்கப்படும். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். ஆமென்!
இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தைக் காத்துக்கொள்
“தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத் தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்” (வெளி.14:12)
நாம் நமது விசுவாசத்தை இறுதிவரை காத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தீங்குநாளில் நமது விசுவாசத்தை காத்துக்கொள்ள வேண்டும். அஞ்ஞானிகளைப் போல கர்த்தரைக் குறை கூறக் கூடாது. கர்த்தர் நல்லவர் என்பதை உணர வேண்டும். மற்றொன்று, பூமியை நியாயந்தீர்க்க கர்த்தருக்கு அதிகாரம் உண்டு என்பதை உணர வேண்டும். எனவே கர்த்தருக்குப் பயந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும். தீங்குநாளில், உபத்திரவக்காலங்களில் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று உணர்ந்து தேவனை மகிமைப்படுத்த வேண்டும். இப்படி தீங்கு நாளிலும் உபத்திரவ காலத்திலும் நமது விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம். அப்பொழுது இயேசு வரும் நாளிலே வெட்கப்படாமல், நீதியின் கிரீடத்தைப் பெறுவோம். எனவே இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார், காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்வோம். ஆமென்.