விடுதலை

Written by Pr Thomas Walker

March 1, 2013

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

தேவன் தான் படைத்த மனிதன் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்புகிறார். பல விதமான காரியங்கள் மனிதனை அடிமைப்படுத்துகின்றன. உலகத்தில் பல வித அடிமைத் தனங்கள் உண்டு. அவைகளிலிருந்து விடுதலையை தேவன் தருகிறார். பெரிய விடுதலை, சிறந்த விடுதலை என்று வேதம் கூறுகிறது. தேவன் மனிதனை நித்திய வாழ்விற்காகபடைத்துள்ளார். அவன் பாவ அடிமைத்தனத்திலிருந்துவிடுபட வேண்டும் என தேவன் விரும்பிதன் சொந்தகுமாரனையே மனிதனுக்காக உலகத்திற்கு அனுப்பினார். “என்தாய் பாவத்திலே கர்ப்பந்தரித்தாள்” எனசங்கீதக்காரன்கூறுகிறான். துர்க்குணத்தில் உருவானேன் எனவும் கூறுகிறான். பாவத்தில் பிறந்து, பாவத்தில் வாழ்ந்து, பாவத்திற்கு அடிமையாகவே இருக்கும் மனிதன் சாத்தானுக்கு அடிமையாக இருக்கிறான். தேவன் அவனை விடுவிக்கிறார். ரோம.6:22 வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார் “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும்பலன், முடிவோநித்திய ஜீவன்” இந்த வசனத்தில் நான் குகாரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. பாவத்தினின்றுவிடுவித்தார்

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். பாவிகளை இரட்சித்த ஒரே ஒருவர் இயேசுமாத்திரமே. சரித்திரத்தையே இரண்டாகப் பிரித்தவர் (கி.மு., கி.பி.) இயேசுமட்டுமே, பாவங்களை மன்னிக்க முடியும். அவர் மட்டுமே அதற்கு தகுதி பெற்றவர். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது.

2. இயேசுவுக்குஅடிமையாகவேண்டும்

அடிமைக்கு தனக்கென்று எந்த உரிமையுமேகிடையாது. அவனது கண்கள் எஜமான் மேல் பதிக்கப்பட வேண்டும். “மரியாள்” தேவனுக்கு அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்ததினால் தான் இயேசு அவளது கர்ப்பத்தில் உருவாகமுடிந்தது. நமது சிந்தை நோக்கம் அவரைப் பிரியப்படுத்துவதாக இருக்கவேண்டும்.இஸ்ரவேலர் பார்வோனுக்கு அடிமையாக இருந்த போது தேவன் மோசேயைக் கொண்டு விடுவித்து அவர்களை தேவ ஜனங்களாக இருக்கும்படி செய்தார். இஸ்ரவேலரில் அநேகர் வனாந்திரத்தில் நடந்த போதிலும் கூட அவர்கள் இருதயம் எகிப்தில் இருந்தது. எனவே அவர்களால் தேவனுடைய ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க முடியாத படி இருந்தது.

விசுவாசிகளிலும் அநேகர் இப்படி இருக்கிறார்கள். இயேசுவின் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க, தேவபிள்ளைகளாக வாழமுடியாத படிபரிதாபத்திற்கு உரியவர்கள் தேவபிள்ளையாக வாழ அதிகாரம் பெற்றிருந்தும் பரிதாபமாக உலகத்தின் மேலுள்ள ஆசையால் அடிமையாக வேவாழ்கிறார்கள். வெற்றி வாழ்க்கைக்குப்பதிலாக தோல்வியையே அனுபவிக்கிறார்கள். கிறிஸ்துவுக்குஅடிமைகளாகஒப்புக்கொடுத்தால்மட்டுமேதேவன்பரிசுத்தத்தைகொடுக்கிறார்.

3. பரிசுத்தமாக்குதல்நமக்குகிடைக்கும்பலன்

பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது. பரிசுத்தம் எண்ணங்களில், சிந்தையில், எல்லாவற்றிலுமே உண்டாக வேண்டும். அடிமையாக தேவனின் கரத்திலுள்ள களிமண்ணமாக, ஒப்புக் கொடுக்கும் போது, தேவன் தமது சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார், வனைகிறார். அடிமையாக ஒப்புக் கொடுத்தால் மட்டுமே பரிசுத்தமாகுதல் நமக்குள் ஆரம்பமாகிறது. முடிவில் நித்திய ஜீவனை தேவன் தருவார், பரிசுத்தமில்லாமல் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியாது.

விடுதலைமூன்றுவிதங்களில்உண்டு

1) யோவான்8:36 வசனத்தில், “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” குமாரன் விடுதலையாக்குகிறார். இயேசுவின் இரத்தத்தால் பாவத்தினின்று விடுபடுகிறோம்.

2) யோவான் 8:32 “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்” சத்தியம் வேதத்தை குறிக்கிறது. அவரது வசனம் சமுலமும், சத்தியமா கஇருக்கிறது. அவை நம்மை விடுதலையாக்குகிறது.

3) 2கொரி.3:17 “கர்த்தரேஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையு முண்டு.” ஆவியானவர் விடுவிக்கிறார். பரிசுத்த அபிஷேகம் மூலம் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தி விடுவிக்கிறார். கண்டித்தும் உணர்த்துகிறார். ஆவியானவருக்கு கீழ்ப்படிய வேண்டும். நிலைத்து நிற்கவேண்டும்.

தேவன்யாரை விடுவிக்கிறார் என்றுபார்ப்போம்

1. நீதிமானை பாவத்திலிருந்தும் – தீமையினின்றும் விடுவிக்கிறார்

நீதி.11:8 வசனத்தில், “நீதிமான் இக்கட்டினின்றுவிடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.” நீதிமான் – இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவன். தேவன், நீதிமானை பாவத்திலிருந்தும், தீமையினின்றும் விடுவிக்கிறார். சோதோமை அழிக்கும் போது தேவன் லோத்தை கரம் பிடித்து அழைத்து வெளியே கொண்டு போய்விட்டபின்பே அழித்தார். கர்த்தரின் கண்கள் நீதிமான்களின் மேல் நோக்கமாக இருக்கிறது. நீதி.11:21 வசனத்தில், “நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்” “நீதிமானின் சந்ததியையும் தேவன் விடுவிக்கிறார். சுதந்திரநாட்டில் வாழ்பவனுக்கும் சுதந்தரம் அவனது பிறப்பு உரிமை. அது போல நீதிமானின் சுதந்தரம் என்ன வென்றால் அவன் சந்ததிவிடு விக்கப்படும்”

2. தேவனை நம்புகிறவர்களை விடுவிக்கிறார்

சங்.22:4 வசனத்தில், “எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர்விடுவித்தீர்” தேவனைச் சார்ந்து, நம்பி இருக்கிறவர்களை விடுவிக்கிறார். அவரை மட்டுமே நம்புகிறவர்களை விடுவிக்கிறார். நேபுகாத் நேச்சாரின் சிலையை வணங்க மறுத்த சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்ற மூவரு ம்தேவனையே சார்ந்து கொண்டார்கள். கொடிய ராஜாவின் முகத்தையோ, கொடிய அக்கினிச் சூளையையோ பார்க்கவில்லை. எனவே தேவனே இறங்கி வந்து அவர்களை விடுவித்தார்.

3. கர்த்தருக்குப் பயந்தவர்களைச் சூழபாளையம் இறங்கி விடுவிக்கிறார்

சங்.34:7 வசனத்தில், “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாள யமிறங்கி அவர்களைவிடு விக்கிறார்” வசனத்துக்குநடுங்குகிறவனையேதேவன்நோக்கிப்பார்க்கிறார். மனிதனுக்குபயப்பட, பயப்படகண்ணிகள்உண்டாகிறது. கர்த்தருக்குபயப்படும்பயம்நமக்குஆசீர்வாதங்களையும், பாதுகாப்பையும்தருகிறது.

4. ஜெபிக்கும் போது விடுதலை பெறுகிறோம்

சங்.50:14,15வசனத்தில், “ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னைம கிமைப்படுத்துவாய்” ஜெபிக்கும் போது விடுதலை பெறுகிறோம். தேவனிடம் பிரச்சனையைக் கூறி இருதயத்தை ஊற்றி ஜெபிக்கும் போது ஜெயம் தருகிறார். யாக்கோபுபின் தங்கி ஜெபித்து, ஜெயத்தை அனுபவித்தான். ஜெபமே ஜீவன். ஜெபம் ஜெயம் ஜெபிக்க ஜெபிக்க பெலன் உண்டு. மேலும், சங்.107:6 வசனத்தில், “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.

5. வாஞ்சையாயிருப்பவர்களைவிடுவிக்கிறார்

சங்.91:14 “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனைவிடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” தேவன் மேல் வாஞ்சையாக இருப்பவர்களை தேவன் விடுவிக்கிறார்.

6. தேவன்மேல்விசுவாசம்வைப்பவர்களைவிடுவிக்கிறார்

தானி.3:17,18 வசனங்களில், “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடையகைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்” என்று விசுவாசத்தோடு நேபுகாத் நேச்சாரிடம் கூறினார். விசுவாசம் விடுதலையைக் கொண்டுவருகிறது. விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறஜெயம். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தை வாசியுங்கள். அசாதாரணமான காரியங்களைச் செய்வது விசுவாசமே.

7. அவரைநோக்கிப்பார்க்கும்போதுவிடுவிக்கிறார்

யோபு 42:9,10வசனங்களில், “கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்” யோபுவின் விடுதலைக் குகாரணம் மற்றவர்களுக்காக அவன் செய்த வேண்டுதலாகும்.

இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவன் தம்முடைய ஜனங்களை எப்படி விடுதலை செய்கிறார் என்று பார்த்தோம். குமாரன் விடுதலை செய்கிறார். அவருடைய வசனம் விடுதலை செய்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை சகல கட்டுகளிலிருந்தும் விடுவிக்கிறார். மேலும் நாம் விடுதலையைப் பெற்று வாழ, நீதிமானாக வாழவேண்டும், தேவனை நம்புகிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவர்களாகவும், கர்த்தருக்கு பயந்தவர்களாகவும், அவர் மேல் வாஞ்சையுள்ளவர்களாகவும், விசுவாசம் உள்ளவர்களாகவும், அவரை எப்பொழுதும் நோக்கிப் பார்ப்பவர்களாகவும், மற்றவர்களுக்காக, சிநேகிதர்களுக்காக மன்றாடி ஜெபிப்பவர்களாகவும் இருந்தால் நாம் விடுதலையுடன் மகிழ்ச்சியாகவாழலாம். அநேகர் நம் மூலமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆமென்.






Author

You May Also Like…

Share This