“நான் உன்ன அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடு கிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” எரே 1:7 என்று எரேமியா தீர்க்கதரிசியை அழைத்தது போல ஆண்டவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்த கர்த்தார்சிங்கை அழைத்து பயன்படுத்தினார். பஞ்சாபில் அநேக இடங்களில் சுவிசேஷத்தை அறிவித்த இவர் திபெத் நாட்டிற்கு மிஷனெரியாக சுவிசேஷத்தை எடுத்து சென்றார். அங்கு புத்த பிட்சுகளால் சித்தரவரை செய்யப்பட்டு மரித்தார். சாதுசுந்தர்சிங் “இவரது வாழ்வால் மிகவும் தொட்டப்பட்டதாக” கூறுகிறார்.
கர்த்தார் சிங் சாது சுந்தர் சிங்கின் சொந்த ஊர்ப்பகுதியான பாட்டியாலாவைச் சேர்ந்த ஒரு சீக்கிய இளைஞர். இவரது தந்தை பெரிய செல்வந்தராக இருந்தார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே பல சிறந்த பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்து வளர்த்து வந்தனர். தன் சிறு வயதிலேயே இயேசுவை அறியும் வாய்ப்பை பெற்றார். வேதாகமத்தின் சத்தியங்களில் அதிக ஆர்வம் காட்டி அதை கடைபிடித்து வர ஆரம்பித்தார். வேதாகமத்தை கிரமமாக, தியானித்து வந்ததால் அவரது பாவ வாழ்க்கை அவரை விட்டு பறந்து ஓடியது தன்னை முழுமையாக தேவனுக்கு ஒப்புவித்து அவருடைய சீஷனாக ஊழியம் செய்ய அர்ப்பணித்தார்.
கர்த்தார் சிங் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால் அவருடைய தகப்பனாரின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தது காரணம் என்ன வேனில் அவருடைய திருமணத்திற்காக நியமித்திருந்த பெண்னை அலங்கரித்து அவர் முன் நிறுத்தி அந்த பெண்ணுக்காக கிறிஸ்துவை மறுதலிக்க கூறினர். மேலும் அந்த பெண்ணும் எவ்வளவோ கெஞ்சி பார்த்து, அவளை விட தேவனையே அதிகம் நேசிப்பதாக கூறி, அவளை விவாகம் செய்ய மறுத்தார். எனவே அவர் தகப்பன் அவர் மேல் கோபமானார். கர்த்தர் தன் மேலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டுமேன்று அவருடைய தகப்பனார் கட்டளையிட்டார். இரண்டு, மூன்று நாட்கள் அவர் சரியான உடை இல்லாமல் வெறும் உள்ளாடைகளுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. என்றாலும், கூலி வேலை செய்து தனக்கு தேவையான மேலாடையை வாங்கிக் கொண்டார்.
வீட்டை விட்டு துரத்தப்பட்ட இவர் பாட்டியாவிலுள்ள கிராமங்களிலும், பட்டணங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். ஞானஸ்நானம் பெற்ற பின் புதிபெத்திய மொழியை நன்குகற்றுக்தேறசில காலம் செலவிட்டார். பின்னர்டாஷிகாங் என்ற பட்டணத்துக்குச் சென்று தனது ஊழியத்தை ஆரம்பித்தார்.
திபெத் நாட்டிலுள்ள டாஷிகாங் என்ற பட்டணத்தில் மூன்று மாதங்கள் ஆர்வத்தோடு சத்தியத்தை கேட்பவர்களிடம் சாட்சி கூறி வந்தார். பலர் இவரை எதிர்த்தனர். புத்தபிட்சுகள் இவருடைய போதகத்தை முற்றிலும் வெறுத்தனர். ஆயினும் கிறிஸ்துவின் அன்பை தன் வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டி சிலரை கிறிஸ்து வண்டை நடத்தினார்.
ஒரு நாள் அவரை பிடித்து இழுத்து ஊரை விட்டு வெளியே தள்ளினார்கள்.ஆனால் அவர் மீண்டும் திரும்பி வந்து அந்த ஊரிலேயே பிரசங்கித்தார். “என்னை நீங்கள் அடித்துக்கொன்றுபோட்டாலும் என் ஆண்டவரைப் பற்றிய சுவிசேஷத்தை என்னால் அறிவிக்காமல் இருக்க முடியாது. நீங்கள் நித்திய இரட்சிப்பை பெற வேண்டும் என்பதற்காகவே நான் இயேசுவைப் பற்றியப் பிரசங்கிக்கிறேன் என்று தைரியத்தோடு கூறினார். இதனால் அவர் தலைமை குருவின் முன்னால் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தெருத் தெருவாக சுவிசேஷத்தை அறிவித்தாலும், அரசாங்கத்தின் உத்தரவின்றி உள்ளே வந்துள்ளான். என்ற குற்றம் சாட்டிசிங்காமின் தலைவன் இவருக்கு மரண தண்டனை விதித்தான் என்ற போதிலும் விசுவாசத்தை மறுதலியாமல் சுற்றிலும் நின்ற மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். ஓர் உயரமான குன்றுக்கு இவரை கொண்டு போய் “யாக்” என்ற எருமையின் பச்சைத் தோலில் அவரைச் சுருட்டி வைத்து தைத்து, வெயிலில் போட்டு விட்டார்கள். வெயில் ஏற ஏற இவர் எலும்புகள் உடைய ஆரம்பித்தன. சுற்றி நின்றோர் பரிகாசம் செய்த போதும் “இயேசுவே உண்மையான தெய்வம்” என்று அவர்களுக்குக் கூறிக் கொண்டே இருந்தார். மிகவும் கொடிய வேதனையின் மத்தியிலும் ஒரு முறை கூட கதறி அழவில்லை பொறுமையாகச கித்தார்.
கர்த்தார்சிங், “என் ஆண்ரவரோடு கூட இருக்கும்படி நான் பரலோகத்திற்கு எடுத்து கொள்ளப்படுவேன்” என்று அறிக்கையிட்டார்.
அவருடைய நிலைமை எப்படியிருக்கிறது? என்று அவருக்கு அருகே சென்று பார்த்த போது அவர் தேவனைத் துதித்து பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தனர்.
“மெய்யாகவே தேவனுடைய ஆவி இவனுக்குள் இருக்க வேண்டும்” என்று ஒருவன் திகைப் போடு கூறினான். வேதனை மிகுந்த இரண்டு நாட்கள் கழித்து, மூன்றாம் நாள் அவர் மரிக்கு வேளை வந்தது. “ஆண்டவரே, இவர்களை மன்னியும், என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்” என்ற ஜெபத்தோடு ஆண்டவரின் கரத்தில் தன் ஜீவனைக் கொடுத்தார்.
கர்த்தாரின் இரத்த சாட்சி மரணத்தைக் கண்ட தலைமை குருவின் செயலாளர் தன் உள்ளத்தில் தொடப்பட்டார். தலைமை குருவிடம் இருந்த கர்த்தார்சிங்கின் புதிய ஏற்பாட்டை வாங்கி வாசித்து சத்தியத்தை அறிந்து இயேசுவைத் தனது இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இதைக் குறித்து தலைமை குரு தனது செயலாளருக்கும் கடுமையான தண்டனையை விதித்தார்.
‘யாக் என்ற எருமைத் தோலில் வைத்து அவரைதைத்தது மட்டுமின்றி, பழுக்கக் காய்ச்சிய கம்பிகளால் அவரது உடலைத் துளைத்தார்கள். பின்னர் ஒரு கயிற்றில் கட்டித் தெருக்கள் வழியாக அவரை இழுத்து சென்றனர். பின்னர் குப்பக் குவியலில் எறிந்து விட்டார்கள். ஆனால் தேவன் அவரைப் பெலப்படுத்தியதால், அவர் உளர்ந்த படியே பட்டணத்துக்குள் வந்தார். படிப்படியாக அவர் குணமடைந்தார். இந்த அற்புதத்தைக் கண்ட மக்கள் அவரை எதிர்க்க துணியவில்லை. இயேசுவின் சாட்சியாக தொடர்ந்து திபெத்தில் வாழ்ந்து அநேகரை கிறிஸ்து வண்டை நடத்தினார். இவர் மூலமாகவே சாதுசுந்தர்சிங் ‘கர்த்தார்சிங்கின் இரத்த சாட்சி மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டார்.
சாது சுந்தர்சிங் இவரது வாழ்க்கையால் தொடப்பட்ட படியால், தான் பிரசங்கிக்கும் இடங்களிளெல்லாம் கர்த்தார்சிங் வாழ்க்கையைப் பற்றி கூறி வந்தார். ஒரு முறை பாட்டியாலாரயில் நிலையத்தில் அவர் பிரசங்கித்து சாட்சி கூறிய போது, “பின் வரிசையில் இருந்த ஒரு முதியவர்உரத்த குரலில் அழத் தொடங்கினார். சாது சுந்தர்சிங் அவரை விசாரித்த போது அவர் தான் கர்த்தார்சிங்கின் தகப்பன் என்று அறிந்து கொண்டார்”. பின்னர் கர்த்தார் விசுவாச வாழ்க்கையையும் வீர்மரணத்தையும் அறிந்த தகப்பன் தானும் தன்னை கிறிஸ்துவுக்கு ஒப்படைத்து அவரின் அடியவரானார். கர்த்தார் என்ற கோதுமை மணி மூலம் செத்த பின்பும் அநேக கோதுமை மணிகள் எழும்பின!
இதை வாசிக்கும் அன்பு நேயரே! கர்த்தார் சிங்கை போல ஆண்டவர் அனுப்பும் இடத்திற்கு செல்ல தயாராக உள்ளீர்களா? இன்னும் பஞ்சாபில் உள்ள நமது பணித்தளங்களில் அநேகர் கர்த்தார் சிங்கைப் போல எழும்ப ஜெபியுங்கள்! “உண்மையாகவே என்னால் முடிந்ததை செய்த போதிலும் எல்லாவற்றையும் செய்ய என்னால் முடியவில்லை” என்று கர்த்தார் சிங்க் ஏக்கத்துடன் மரித்தார். நீயும் எஜமானின் ஏக்கத்தை உணர்ந்து அநேக ஆயிரங்களை அவரண்டை அழைக்க உன்னை தேவனுக்கு அர்ப்பணிப்பாயா?
மாரநாதா! அல்லேலூயா!