கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய விரும்புகிறார். நம் வாழ்வில் உள்ள பள்ளங்களை நிரப்பி, சமமாக்க அவரால் கூடும். மலைகள், குன்றுகள் போன்று தடையாக, எதிராக காணப்படும் தீய சக்திகள் போராட்டங்கள் தாழ்த்தப்படும் என்கிறார். தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து சரி செய்ய வேண்டிய பகுதிகளை சரி பண்ண வேண்டும். நாம் நம் வாழ்க்கையின் சீர்க்கேடுகளை சரி செய்ய வேண்டும், கோணலானவைகளை செவ்வைபடுத்த வேண்டும், கரடுமுரடான நம் வாழ்க்கையை சீர்ப்படுத்த வேண்டும். அப்பொழுது தேவன் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்வார்.
காற்றையும் மழையையும் காணாவிட்டாலும், பள்ளங்கள் ஆழப்படுத்தினால் அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் செய்வார். வாய்க்கால்கள் நாம் வெட்டினால் தண்ணீரால் அவர் நிரப்புவார். அவர் எல்லாவற்றையும், எல்லாவற்றாலும் நிரப்புவார். விதவையின் பாத்திரங்களையெல்லாம் எண்ணெயால் நிரப்பினவர். உன் வாழ்விலும், வெறுமையான பாத்திரமாக உன்னை நீ தாழ்த்தினால் தேவன் வெறுமையான காலியான பாத்திரத்தை நிரப்பி அனுப்புவார்.
நீ உலகத்தாலும், பாவ இச்சையாலும் நிரம்பி இருந்தால், அவர் நிரப்ப முடியாது. உன் பாத்திரத்தை சுத்தம் செய், மலை போல பெருமையாக, அகந்தையாக காணப்படுவாயானால் தேவன்முன் தாழ்த்து.வருகையின் நாட்களில் வாழும் நமக்கு தேவன் கொடுத்த பெரிய வேலை யோவான்ஸ்நானகன் இயேசுவின் முதலாம் வருகைக்கு அநேக பள்ளங்களை நிரப்பி, மலைகள் குன்றுகள் போல வாழ்ந்தவர்களை தேவ அன்பினாலும் பரிசுத்தத்தினாலும் அநேகரை உருவாக்கினார். இராஜாவின் இரண்டாம் வருகைக்கு முன் நாம் அநேகரை தேவனுக்காக ஆயத்தப்படுத்த வேண்டும். கோணலானவர்களையும், கரடுமுரடான வாழ்க்கை வாழ்பவர்களையும் தேவனுக்காக ஆயத்தப்படுத்த வேண்டும். கரடுமுரடான வாழ்க்கைகளை சமப்படுத்த வேண்டும். வேத வசனத்தாலும் இயேசுவின் இரக்கத்தாலும் சுத்திகரிக்க வேண்டும். நாம் சரிசெய்ய வேண்டிய கோணலான காரியங்கள் என்னவென்று ஆராய்ந்து பார்ப்போம்.
1) புதிய மனுஷனை தரித்துக்கொள்ள வேண்டும்:
கொலோ.3:10 “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள், அவரைப் போல மாற வேண்டும். ஐஅவையவந துநளரள in லடிரச டகைந. வருகைக்கு ஆயத்தமாகும் மணவாட்டி முற்றிலும் அவரைச் சார்ந்து வாழ வேண்டும், அவருக்கு ஒப்பாக மாற வேண்டும்.
இயேசு நமக்கு நல்ல மாதிரியை வைத்துச் சென்றது. 12ஆவது வயதிலிருந்து பிதாவுக்கு அடுத்த காரியங்களில் அதிக கவனம் செலுத்தினார்.
2) கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக்கொள்:
கொலோ.3:8 “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்” புதிய மனுஷனை தரிக்கும் முன், நம் வாழ்வில் உள்ள பழைய சுபாவங்களை களைந்துபோடுங்கள், மூர்க்கம் கொண்ட காயீன் வெகுண்டு தன் சகோதரனைக் கொன்றான். சாபம்தான் கிடைத்தது. நிலையற்று அலைந்து திரிந்தான்.
3) பொய்யை களைந்துவிட வேண்டும்:
கொலோ.3:9 “ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்;” பொய் பேசுகிறவர்களை தேவன் அருவருக்கிறார்.
4) துர்இச்சைகளுக்கு இடமாக உடலை பேணக் கூடாது:
ரோ.13:14, “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்” சாந்தம், மனத்தாழ்மையை தரிக்க வேண்டும். பெருந்தீனியினால் துர்இச்சை வரும் நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். கர்த்தரிடம் வாழ மறைவான அழியாத அலங்கரிப்பு தேவை.
5) வல்லமையை தரித்துக்கொள்:
ஏசாயா 5:2 வல்லமையை தரிக்க வேண்டும். ஜெபிக்க, ஜெபிக்க வல்லமை வரும். தேவ சித்தம் செய்தால் தேவனுடன் உள்ள உறவு பெலப்படும், தேவனுக்காக கிரியை செய்ய தேவ வல்லமை தேவை. அனலுமில்லாமல், குளிருமில்லாமல் ஜீவிப்பது பரிதாபம்! அப்.1:8ல் சொல்லப்பட்ட பரிசுத்தாவியின் வல்லமையை தரித்துக்கொள்ள வேண்டும்.
அன்பு நண்பரே! கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தின யோவான் ஸ்நானகனைபோல நாம் வல்லமையோடும் எலியாவின் ஆவியோடும் பெலத்தோடும் எழுந்து செயல்படுவோம். தேவன் நம் வாழ்வின் மூலம் அநேகரை வருகைக்கு ஆயத்தப்படுத்துவார். அநேக ராஜாக்கள், பிரபுக்கள் போன்ற மலைகளை தேவனுடைய பாதம் கொண்டு வருவோம். நம் வாழ்வில் உள்ள கோணலான காரியங்களையும், பழைய பாவ காரியங்களையும் விட்டு விடுவோம். தேவன் நம் வாழ்வில் மகிமைப்படுவார்! அல்லேலூயா!