ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ்(Hanna Catherine Mullens) (ஜினானா-களின் அப்போஸ்தலர் மற்றும் காலணிப் பெண்மணி)

Written by Evangeline Matthew

January 26, 2022

“இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (1தீமோ.4:10)

இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு பிரதான கட்டளையை (ழுசநயவ உடிஅஅளைளiடிn) கொடுத்தார். அதை நிறைவேற்றும்படிக்கு ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ், இந்தியாவிலே ஜினானா-களில் ஊழியம் செய்து அநேக ஆத்துமாக்களை தேவனுக்கென்று ஆதாயம் செய்தார்.

ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ் அவர்கள், ஒரு ஐரோப்பிய மிஷனரி, கல்வியாளர், மொழி பெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவர். அவர் ஜினானா ஊழியங்களின் (ணநயேயே அளைளiடிளே) தலைவர், பெண்களுக்கென்று பள்ளிகளை உருவாக்கியவர், மேலும் வங்காள மொழியின் முதல் புனைகதையாக (nடிஎநட) கருதப்படும் கதையை எழுதியவர். தன் வாழ்வின் பெரும் பகுதியை கல்கத்தா நகரத்தில் வாழ்ந்தவர், வங்காள மொழியில் மிகவும் புலமை பெற்றவர். சித்திர தையல் வேலையில் (நுஅசெடினைநசல) அவருக்கிருந்த திறமை, பல உயர்குடி இந்துப் பெண்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கான வாசல்களை திறந்து கொடுத்தது.

ஆரம்ப கால வாழ்க்கை:

ஹன்னா கேத்ரீன் லாக்ராய்ஸ் கல்கத்தாவில் பிறந்தவர். அவருடைய தகப்பனார் அல்போன்ஸ் பிரான்காய்ஸ் லாக்ராய்ஸ், லண்டன் மிஷனரி சொஸைட்டி சார்பில் கிறிஸ்தவத்தை பரப்ப 1821ஆம் வருடம் மேற்கு வங்காளத்தில் உள்ள சின்சுரா பகுதிக்குச் சென்ற, ஸ்வீடன் நாட்டு மிஷனரி. அவருடைய தாயார் ஹன்னா ஹெர்க்ளாட்ஸ் ஒரு டச்சு காலனி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் தன்னுடைய ஊழியத்தில் தீவிர பற்று கொண்டவர், முக்கியமாக இந்திய பெண்களைக் குறித்து அதிகம் பாரம் கொண்டவர். அவர்களுடைய மகள் சிறு வயதிலிருந்தே பெற்றோரின் சிந்தையையே தானும் பெற்றுக்கொண்டார்.

ஹன்னா கேத்ரீன் தன்னுடைய 12 வயதிலேயே, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் வங்காள மொழியை கற்றுத்தர ஆரம்பித்தார். அவருடைய பெற்றோர்கள் அவருடைய 15 வயதில் இங்கிலாந்துக்கு செல்லும் வரை, அவர்களிடமே கல்வி கற்றார். பின்பு அவருடைய பெற்றோர்கள் லண்டனுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். லண்டனில் வசித்த நாட்கள், அவருக்கு தாய்நாட்டில் காலனி பள்ளி சூழலில் படிக்கும் வாய்ப்பைத் தந்தது. அவர் அங்கு படித்து ஆசிரியராக தேர்ச்சி பெற்று, பின்பு கல்கத்தா நகரத்திற்கு திரும்பி வந்தார்.

ஆசிரியர் பணி:

ஹன்னா கேத்ரீன் மிகவும் உற்சாகமான, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிற நபராக இருந்தார். அவர் வங்காள மொழியில் சரளமாக பேசும் புலமையுடையவர். மேலும் அவர் மிகவும் புத்திசாலியாகவும், அன்பும் இரக்கமும் உள்ளவராகவும் இருந்தார். மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பள்ளியில் வகுப்பு எடுப்பதன் மூலம் தன்னுடைய தாயாருக்கு உதவியாக இருந்தார். அந்தப் பள்ளி ஒரு தோட்டத்தில் இருந்தது, கிட்டத்தட்ட பதினைந்து பேர் அங்கு கல்வி கற்றார்கள். அவர் தன்னுடைய பதினைந்தாவது வயதில் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனுடைய பணியில் மிகவும் ஆர்வமுள்ளவராக மாறினார். அவர் வேலையாட்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தார். மேலும் சில பிள்ளைக்கும் கல்வி கற்றுக்கொடுத்தார்.

திருமணம் மற்றும் ஊழியம்:

ஹன்னா கேத்ரீன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் லண்டன் மிஷனரி சொஸைட்டி மிஷனரியான டாக்டர் ஜோசப் முல்லன்ஸ் அவர்களை திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மிகவும் உற்சாகமாக மிஷனரி பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் (ஆலிஸ் மரியா முல்லன்ஸ், இலியட் முல்லன்ஸ், கென்னத் முல்லன்ஸ், லூசி ராம்சே முல்லன்ஸ், கேட் ஹாசெல் முல்லன்ஸ்).

திருமதி.ஹன்னா முல்லன்ஸ் அவர்கள் சித்திர தையல் ஊசியை கையாள்வதில் மிகவும் திறமை பெற்றவராய், மிக அழகான சித்திர தையல் வேலைகளை செய்தார்கள். ஒருநாள் ஒரு உள்ளுர் கனவான் அவர்களுடைய வீட்டிற்கு வரும்போது திருமதி ஹன்னா ஒரு ஜோதி காலணிகளை செய்துகொண்டிருந்தார். அந்த கனவான் அந்த வேலை மிகவும் நேர்த்தியாக இருப்பதைக் கண்டு மிகவும் மெச்சிக் கொண்டார். கடைசியாக அந்த கனவான், “என்னுடைய மனைவியும் இப்படிப்பட்ட வேலைகளை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று சொன்னார். அப்படி சொன்னவுடன் மின்னல் வேகத்தில் பதிலளித்த திருமதி.ஹன்னா “நான் வந்து உங்கள் மனைவிக்கு எப்படி செய்வது என்று கற்றுத் தருகிறேன்” என்றார். இப்படித் தான் முதல் முதலாக ஜினானா-களில் நுழைய வாசல் திறந்தது.

ஜினானா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? “ஜினானா என்பது இந்திய வீடுகளில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி. அந்த பகுதியில் திருமணமான பெண்கள் மட்டும் வசிப்பார்கள். அவர்களுக்கு ஒருபோதும் அங்கிருந்து வெளியே வருவதற்கோ, வெளி உலகோடு தொடர்பு கொள்வதற்கோ அனுமதி கிடையாது.

முல்லன்ஸ் தம்பதியினருக்கு ஜினானா பெண்களைக் குறித்து எப்பொழுதும் ஒரு பாரம் உண்டு. ஜினானா-வில் இருக்கும் பெண்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்காய் வருத்தப்பட்டார்கள். எப்படி அவர்களை சந்திப்பது மற்றும் கற்றுக்கொடுப்பது? அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலையோடி ருப்பவர்கள். அந்த வீடுகளுக்குள் சென்று அந்த பெண்களை சந்திப்பது இயலாத காரியம். இப்படி இருந்த சூழ்நிலையில்தான் இந்த முதலாவது வாய்ப்பு கிடைத்தது.

அந்த முதலாவது வாய்ப்புக்கு பின்பு பல ஜினானா பெண்களை சந்திக்கும் வாய்ப்பு மிஷனரி பெண்களுக்கு கிடைத்தது, ஊழியமும் தொடர்ந்து வளர்ந்தது. திருமதி ஹன்னா முல்லன்ஸ் அவருடைய ஊழிய வாஞ்சைக்காகவும், ஜினானா மிஷன் திட்டமிடுதலுக்காகவும் நன்கு அறியப்பட்டவராய் இருந்தார். ஒரு கருத்தரங்குக்கு பின்பு ஒரு இந்து விதவை டாக்டரை, ஜினானா பெண்களை தன்னுடன் தங்க வைப்பதற்கு சம்மதிக்க வைத்தார். ஹன்னா முல்லன்ஸ் அந்த வீட்டிற்குச் சென்று கற்றுக்கொடுப்பார். அதன் பின்பு பல இடங்களில் அதேபோன்ற ஏற்பாட்டைச் செய்தார். இந்த இந்திய கிறிஸ்தவர்கள் “வேதாகமப் பெண்கள்” என்று அழைக்கப்பட்டார்கள்.

எழுத்துப் பணி:

திருமதி.ஹன்னா முல்லன்ஸ் “கிறிஸ்தவம் என்றால் என்ன?” (றுhயவ ளை ஊhசளைவயைnவைல) என்று ஒரு புத்தகத்தை ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் எழுதினார். மேலும் சார்லெட் மரியா டக்கர் அவர்களின் “பிரிட்டனில் விடியற்காலை” (னுயல செநயம in க்ஷசவையin) என்ற புத்தகத்தை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார். 1852ஆம் ஆண்டில் வங்காள மொழியின் முதல் நாவலான “புல்மணி மற்றும் கருணையின் விவரங்கள்” (ஞாரடஅயni டீ முயசரயேi க்ஷiயெசயn) -ஐ எழுதினார். 1858ஆம் ஆண்டில் அவரும், அவருடைய கணவனும் தங்களுடைய இந்திய மிஷனரி பணியைப் பற்றி பரப்ப பிரிட்டனுக்கு பயணப்பட்டார்கள். நான்கு ஜினானா-க்கள் அவருடைய பராமரிப்பில் இருந்தது. மேலும் பதினோரு ஜினானா-க்களை அவர் ஒவ்வொரு நாள் மதியமும் பார்வையிட்டு வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அநேக பெண்கள் கர்த்த ரிடத்தில் சேர்ந்து, இயேசுவை தங்களின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.

பிரியமான நண்பர்களே, கடினமான பணிச்சூழல் மற்றும் ஊழியங்களின் மத்தியிலும் திருமதி.முல்லன்ஸ் ஒரு சிறந்த பணியைச் செய்தார். அவருடைய முப்பத்தி ஐந்தாவது வயதில் 1861ஆம் ஆண்டு தேவன் அவரை தன்னுடன் ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொண்டார். சித்திர தையல் ஊசியை கையாள்வதில் அவருக்கு இருந்த திறமை அவருக்கு அநேக வாசல்களை திறந்துகொடுத்தது. இப்பொழுது நமக்கோ எல்லா இடங்களிலும் வாசல்கள் திறந்துள்ளது. நாம் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வோம். திருமதி.முல்லன்ஸ் சித்திர தையல் ஊசியை சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்திக்கொண்டார். நம்முடைய தாலந்துகளை நாம் பயன்படுத்தும்படி தேவன் நமக்கு ஞானத்தை தருவாராக!

Author

You May Also Like…

Share This