2016ம் ஆண்டிலே, சென்னையிலுள்ள, கிண்டி, அண்ணா பொறியியற் பல்கலைக் கழகத்தில் எனக்கு ஞான படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் ஏற்கனவே 2001 முதல் மூன்று முறை ஞான படிப்பில் சேர நினைத்து பல்வேறு காரணங்களால், தடைபட்டுப் போனது.எனக்கு வணிக நிருவாகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற தகுதி இருந்தது. ஆனால் துகிலியல் துறையில் சேர்வதற்கான நிறைஞர் பட்டம் என்னிடம் இல்லை. மட்டுமே இருந்தது. எனக்கு உதவிசெய்ய விரும்பிய எனது வழிகாட்டியான பேராசிரியர்,முதல் வருடத்தில் மூன்று விருப்ப பாடங்களை எழுதி, துகிலியல் துறையில், முனைவர் பட்டத்திற்கான தகுதியைப் பெறும்படி ஆலோசனைக் கூறினார். மேலும் அண்ணா பொறியியற் பல்கலைக் கழகத்தின் இயக்குநரிடம் என்னை அழைத்துச் சென்று, இவர் நமது பழைய மாணவர், நல்ல நிறுவனத்தில் பணி செய்கிறார். அடிக்கடி, நமது பல்கலைக் கழகத்திற்கு வந்து “சிறப்பு வகுப்புகள்” எடுத்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார் என அறிமுகம் செய்துவைத்தார்.
இதைக் கேட்ட பல்கலை கழகத்தின் இயக்குனர், நான் அங்கு ஆராய்ச்சி மாணவராக சேர்வதைக் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எல்லா உதவிகளையும், செய்வதாகவும் கூறினார். மேலும் நான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து, அனுமதி கடிதத்தையும் படிப்பிற்கான செலவை அவர்கள் ஏற்பதற்கான உறுதிமொழியையும் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார். நான் பணியாற்றும் எனது நிறுவனத்தில், என்னுடைய உயர் அதிகாரி மிகவும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு, அனுமதி கடிதத்தையும் வழங்கினார். அவர் கனடா தேசத்தைச் சேர்ந்தவர். அவர் இந்திய பல்கலைக் கழகத்தில் படிப்பிற்கான செலவு மிகவும் குறைவாக இருப்பதைக் கண்டு, அவர் என்னிடம் இதைவிட அதிகமான செலவு செய்வதென்றாலும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். மேலும் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்காக ஆயத்தமாகி வந்தேன்.அச்சமயம் அவர்கள் என்னிடம் ரூபாய் “ஒரு லட்சம்” கேட்பு வரவோலை எனது நிறுவனத்திலிருந்து, பல்கலைக் கழகத்திற்கு, முதற்கட்ட கட்டணமாக செலுத்தக் கூறினார்கள். நான் பணியாற்றும் நிறுவனத்தாரும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏனெனில் டூபாண்ட் கம்பெனிக்கு யோடு மட்டுமே “புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது.அண்ணா பல்கலைக்கழகத்தோடு இல்லை. நான் படிக்க வாய்ப்பு கிடைத்தால் அவர்களால் கட்டணத்தைச் செலுத்த முடியும். ஆனால் “புரிந்துணர்வு ஒப்பந்தமே இல்லாத” பல்கலைக் கழகத்திற்கு பணத்தை, விரும்பினாலும் அனுப்ப முடியாத சூழ்நிலை.
இதை நான் அண்ணா பல்கலைக் கலகத்திலுள்ள பொறுப்பாளர்களிடம் கூறியபோது, அவர்கள் முதலில் டூபாண்ட் நிறுவனத்தை அண்ணா பல்கலைக் கலக்கத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்யக் கேட்டார்கள். நான் அவர்களிடம் அதற்கு வாய்ப்பு குறைவு எனக் கூறியவுடன், அவர்கள் வேறொரு ஆலோசனைக் கூறினார்கள். அதன்படி அவர்கள் பல்கலைக் கலக்கத்தோடு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள, எதோ ஒரு நிறுவனத்திடமிருந்து, அவர்கள் கேட்பு வரைவோலையைப் பெற்றுக்கொண்டு என்னைப் பல்கலைக் கழகத்தில் சேர்த்துக்கொள்வதாகவும், பின்பு நான் அந்த நிறுவனத்திற்கு எனது சொந்த பணத்தை கொடுத்து கணக்கை சரிசெய்து கொள்ளலாம் என்றார்கள்.
இதைக் கேட்க முதலில் இனிமையாக இருந்தது. ஏனெனில் “ஒரு லட்சம் ருபாய்” பணத்தை என்னால் கட்ட முடியும். நான் காடுகளில் “முனைவர் பட்டம்” கிடைக்க வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் அதில் ஒரு தவறு இருப்பதை ஆண்டவர் உணர்த்தினார்.
நான் வேலையே செய்யாத நிறுவனம் என்னை தங்களுடைய நிறுவன ஊழியர் எனப் பொய்யாக சான்றிதழ் தருவதை என் மனம் ஏற்க மறுத்தது. நான் எனது நல்மனசாட்சியைக் காத்துக்கொள்வதில் உறுதியாக இருந்தேன். எனவே நான் அவர்களிடம் “எனக்கு இந்த படிப்பு விரும்பியவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் கிறிஸ்தவ சாட்சியை காத்திக்கொண்டோம் என்ற மன சமாதானம் நிறைவாகவே இருந்தது.
“பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்
(யோனா 2:8)