தேவ சாயல் உங்களில் தெரிகிறதா?

Silver smith

Written by Dr Ajantha Immanuel

October 10, 2019

நீங்கள் தாங்க முடியாத பாடுகளின் வழியாகவும் கண்ணீரின் பாதையிலும் செல்கிறீர்களா? நிந்தனைகளும் போராட்டங்களுமே உங்கள் வாழ்க்கையா? எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையிலிருக்கிறீர்களா? அக்கினியின் நடுவில் இருப்பது போன்ற சூழ்நிலையா? தொடர்ந்து ஓர் உண்மை சம்பவத்தைப் படியுங்கள்.


வேதபாட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் மல்கியா புத்தகத்தில் உள்ள வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மல்கியா மூன்றாம் அதிகாரத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது 3ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்;” என்ற வசனத்தின் அர்த்தம் புரியாமல் தவித்தார்கள்.


அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் “மல்கியா 3:3ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய தன்மையை விளங்கிக்கொள்ள வெள்ளியை உருக்கும் ஒரு தட்டானிடம் விளக்கம் கேட்கலாமே” என்றாள்.
மறுவாரம் அவர்கள் வெள்ளியை உருக்கும் ஒரு பட்டறைக்குச் சென்றார்கள். வெள்ளியை உருக்குவது எப்படி என்று தட்டான் விளக்கினார். முதலாவதாக ஒரு வெள்ளி பாளத்தை தீயில் வைத்து உருக்க ஆரம்பித்தார். ஒரு பெண் “ஏன் வெள்ளியை உருக்க வேண்டும்?” என்று தட்டானிடம் வினவினாள். அதற்கு தட்டான் “வெள்ளி உருக்கப்படும்போதுதான் அதிலுள்ள மாசுகள் நீக்கப்படும்; களிம்புகள் அகற்றப்படும்” என்றார்.
மீண்டும் அந்தப் பெண் தட்டானிடம் “வெள்ளி உருக்கப்படும்போது முழுநேரமும் தட்டான் அக்கினி முன்பு உட்கார்ந்திருப்பானா?” என்று வியப்போடு கேட்டாள். தட்டான் மறுமொழியாக, “அக்கினியில் வைக்கப்படும் வெள்ளியை சரியான நேரத்தில் அக்கினியிலிருந்து எடுக்காவிட்டால் வெள்ளி முற்றிலும் உருவழிந்து போகுமே” என்றார். அந்தப் பெண் சிறிது நேர மௌனத்திற்குப் பின்பு, வெள்ளி எப்பொழுது முற்றும் புடமிடப்படும் என்று கேட்டாள். தட்டான் சிரித்துக் கொண்டே, “என் உருவம் அந்த வெள்ளிப் பாளத்தில் தெரியும்வரை புடமிடப்படும்” என்றார்.


தேவனும் நாம் சுத்திகரிக்கப்படும்படி நம்மை உருக்குகிறார். அக்கினி போன்ற சோதனைகளில் நாம் அமிழ்ந்து உருவழிந்து போகாதபடி நம்மோடு கூடவே இருக்கிறார். தம்முடைய சாயல் நம்மில் பிரதிபலிக்கும்படியாய் அனுதினமும் நம்மை புடமிடுகிறார். அதனால் அக்கினி போன்ற சோதனைகளின் நடுவில் நீங்கள் நடக்கும்போது தேவன் உங்களோடுகூட இருக்கிறார் என்பதை மறந்துபோகாதீர்கள்.


Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This