மகிமையானவைகளின் மேல் காவல் உண்டு

Written by Pr Thomas Walker

May 4, 2018

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

இந்தக் கடைசி நாட்களில் தேவன் தமது சபையையும், தேவனுடைய பிள்ளைகளையும் தேவனுடைய வல்லமையாலும் மகிமையினாலும் நிரப்பி பயன்படுத்த விரும்புகிறார். அவர் தன் சொந்த இரத்தம் சிந்தி சம்பாதித்த சபையை பாதாளத்தின் வல்லமைகள் மேற்கொள்ளாதபடி வல்லமையுள்ளதாய் மாற்ற விரும்புகிறார்.ஆனால் சாத்தானும் தனக்கு கொஞ்ச காலம்தான் உள்ளது என்று அறிந்து தீவிரமாய் செயல்படுகிறான். மாந்திரிகம், பில்லிசூனியம் பெருகி வருகிறது. பிசாசு மாம்சத்தின் ஆவிகளைப் பயன்படுத்தி ஆவிக்குரிய குடும்பங்களைத் தாக்குகிறான். ஊழியர்களும் தேவ ஆவியினால் நடத்தப்படாமல் பிசாசின் ஹபநவே-களாக மாறி பிசாசின் கிரியைகளுக்கு அநுகூலமாக வாழ்கிறார்கள். பிசாசு சகோதர சிநேகம், தன்னைப் போல பிறனை நேசிப்பது போன்ற காரியங்களில் குருட்டாட்டத்தை ஏற்படுத்தி தன்னலம், சுயநலம், ஆடம்பர பிரியர்களாக மாற்றி சபைகளுக்குள் பிரிவினை, குழப்பங்களை உண்டாக்குகிறான்.

ஏசாயா 4:5 வசனத்தில், “அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப் பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்” என்கிற தேவன் மனிதனை படைத்தபோது அவனை மகிமையினால் மூடியிருந்தார். ஏதேனில் பாவம் பிரவேசித்தபோது மனிதன் பாவம் செய்து மகிமையை இழந்தான். இன்றைக்கு மிகவும் அத்தியாவசிய தேவை நாம் தேவ மகிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் தேவ மகிமையின் பாத்திரமாக மாறினால்தான் நமக்கு தேவனுடைய பாதுகாவல் உண்டு.

தேவன் மனிதனையும், சபையையும் தன் மகிமையினால் நிரப்பி பயன்படுத்த விரும்புகிறார். உலக மகிமை வேறு, தேவ பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் மகிமை வேறு. தேவன் தம்முடைய மகிமையை தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தருகிறார்.

தேவன் யாரை மகிமைப்படுத்துகிறார் என்று ஆராய்ந்து பார்ப்போம்

1. முன்குறித்தவர்களை மகிமைப்படுத்துகிறார்:

ரோமர் 8:30 வசனத்தில், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” தேவன் ஒரு மனிதனை முன்குறிக்கிறார், அவனை அழைக்கிறார். தம் இரத்தத்தால் கழுவி நீதிமானாக்குகிறார். பின்னர் அவர்களை மகிமைப்படுத்துகிறார். நீதிமான்கள் வித்தியாசமான வாழ்க்கை வாழவேண்டும். பரிசுத்த சரீரம் பாவத்தால், மாம்சத்தின் கிரியைகளால் கறைபடக் கூடாது. பாவம் செய்தால் ஆத்துமா செத்துப்போகும். ஆத்துமா செத்திருந்தால் பயன் ஏதுமில்லை. ஆவிக்கும், ஆத்துமாவிற்கும் முதலில் காவல் தேவை.

ஊடிஅஅரnளைவ நாடுகளில் சரீரம் சித்திரவதை செய்யப்படுகிறது. கொலை செய்யப்படுகிறது. ஆத்துமா காக்கப்பட்டு ஜீவனுள்ள தேவனிடம் செல்லும்படியாய் காக்கப்படுகிறது. நமது ஆவியும், ஆத்துமாவும் குற்றமில்லாமல் பாதுகாக்கப்பட ஜெபிக்க வேண்டும். தேவ மகிமைக்குள் வந்தால் போதும், தேவனுடைய பாதுகாப்பு உண்டு. தேவனைவிட்டு வழிவிலகி வெளியே போய்விடக்கூடாது.

2. திருச்சபையை மகிமைப்படுத்துகிறார்:

சங்.27:5,6 தீங்குநாளில் அவர் என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துவார். அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளை இடுவேன், கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன். தீங்குநாளில் அவர் தன்னுடைய கூடாரத்தில் மறைத்து ஒளித்துவைத்து கன்மலையின்மேல் உயர்த்துவார்.

அவருடைய ஆலயத்தின் மகிமையினால் சத்துருவின் கைக்கு விலக்கி மீட்கப்படுகிறோம். ஏசாயா கண்ட தரிசனத்திலும், ஆலயம் தேவ மகிமையினால் நிறைந்து காணப்பட்டது. தேவதூதர்கள் தேவனை மகிமைப்படுத்தினர். சாலமோன் கட்டின தேவாலயத்திலும் ஆசாரியர்கள் நின்று ஊழியம் செய்யமுடியாதபடி தேவ மகிமை இறங்கி அங்கு தங்கியது.

தேவ திருச்சபைகளை அழிக்க அரசாங்கமும் அதிகாரிகளும் திட்டமிட்டனர். ஆனால் அழிக்கமுடியாது. பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வது இல்லை.

3. தேவனுடைய செட்டைகளில் தங்குபவனுக்கு மகிமையான பாதுகாப்பு:

சங்.57:1 “எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்”

சங்.91:1 “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” ஆபத்துக்கள் வரும்போது நீ அவருடைய செட்டைகளின் கீழே வந்து அடைக்கலம் புகுந்துகொள். சங்.46:1 வசனத்தில் “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்”. தேவன் நமக்கு அடைக்கலமும், பாதுகாப்பும் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

4. வேதப் புத்தகம் மகிமையானது:

சங்.19:7,11 “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;” அவைகளால் எச்சரிக்கப்படுகிறேன். அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் அவருடைய வார்த்தைகள் ஒழிந்துபோகாது. வசனத்தின்படி நடக்கிறவர்கள் பாக்கியவான்கள், அவர்களுக்கு சமாதானம் உண்டு, பாதுகாப்பு உண்டு.

பிரான்ஸ் தேசத்தில் வால்டேர் (ஏடிடவயசைந) என்ற நாத்திக எழுத்தாளர் இருந்தார். அவர் வேதாகமத்தையே ஒழித்துக்கட்டுவேன் என்று திட்டமிட்டு செயல்பட்டான். ஆனால் அவன் மரித்தபின் வேதாகம சங்கத்தார் அவனது வீட்டை வாங்கி ஜெனிவா வேதாகம சங்கத்தை நடத்துகிறார்கள். அவன் வீடு முழுவதும் வேதாகமத்தால் நிறைந்து காணப்படுகிறது. மகிமை காக்கிறது.

தேவ மகிமை நம்மைச் சூழ்ந்து பாதுகாக்கும். தேவ மகிமையும் கிருபையும் சூழாவிட்டால் நமக்கு பாதுகாப்பு இல்லை.

5. தேவனை நேசித்தவர்களை அவர் மகிமையினால் பாதுகாக்கிறார்:

(அ) யோசேப்பு தேவனை நேசித்தான். தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்வது எப்படி? என்று வாழ்ந்தான். தேவனுக்கு பயப்படும் பயத்தால் மரண கண்ணிகளுக்கும் பாதாள வல்லமைக்கும் தப்புவிக்கப் படுவோம். யோசேப்பின் சகோதரர்கள் வெறுத்தாலும் தேவன் அவரைப் பாதுகாத்தார்.

(ஆ) முற்பிதாக்களைப் பாதுகாத்தார். சங்.103:17,18 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

(இ) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோர் தேவனுக்குப் பயந்ததால் அவர்கள் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.

(ஈ) தாவீது தேவனை தமக்கு முன்பாக வைத்திருந்ததால் தேவ மகிமை சூழ்ந்து அவரை சகல இக்கட்டிலுமிருந்து பாதுகாக்கப்பட்டார். தேவ மகிமை நம்மைச் சூழ்ந்துகொள்வதால் நாமும் காக்கப்படுவோம்.

ஆதி.28:15 நீ போகிற இடத்திலெல்லாம் பாதுகாத்தார் – யாக்கோபை தேவன் நேசித்தார். முன்குறிக்கப்பட்டவன்.

(உ) யாத்.14:19,20 வசனங்களில், இஸ்ரவேலின் சேனைக்கு முன்னாக நடந்த தேவ தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னாக நடந்தார். அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி அவர்கள் பின்னே நின்றது. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது. எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

தேவ மகிமை பின்னால் வந்து இஸ்ரவேலரை காத்தது. இஸ்ரவேலரை மகிமையின் மேகம் வெளிச்சம் தந்து காத்தது. எகிப்தியருக்கு அந்த மகிமையின் மேகம் இருளாயிருந்தது. இஸ்ரவேலருக்கு செங்கடல் வெட்டாந்தரையாக மாறியது. அதே செங்கடல் எகிப்தியரை அழித்துப்போட்டது.

6. ஆசரிப்புக் கூடாரத்தில் மகிமை தங்கியிருந்தது:

சங்.121:4 இஸ்ரவேலைக் காக்கிற தேவன் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை. ஆசரிப்பு கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அதில் மகிமையின் பிரசன்னம் தங்கியிருந்தது. நாம் நம் இருதயத்தில் தேவ பிரசன்னம் தங்கியிருக்க இடம் கொடுத்தால் சகல ஆபத்திலிருந்தும் விடுவிக்க முடியும். தேவபெட்டி பிடிபட்டதால், மகிமை இஸ்ரவேலரை விட்டு விலகியது. தாகோன் தேவ பெட்டிக்கு முன் விழுந்து நொறுங்கியது.

எகிப்தியருக்கு வியாதி, இளைப்பு வந்தது. பெலிஸ்தியரை தேவன் மூல வியாதியினால் சோதித்தார். நம் பிள்ளைகள் மகிமையை வெளிப்படுத்தும் பாத்திரமாய் காணப்பட்டால் தேவ பாதுகாப்பு உண்டு. லூக்.12:7ல் கூறியபடி நம் தலையில் உள்ள முடியெல்லாம் தேவனால் எண்ணப்பட்டுள்ளது.

அன்பு நண்பரே! மகிமையான எல்லாவற்றின்மேலும் தேவ பாதுகாப்பு உண்டு. சங்.91:11 வசனத்தின்படி கர்த்தர் நம்மை தூதர்களை வைத்துப் பாதுகாக்கிறார். லோத்து குடும்பத்தை அழிவிலிருந்து தூதர்களை அனுப்பி பாதுகாத்தார். 2நாளா.16:9 கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவி வருகிறது. தூதர்கள் சேனையை வைத்துப் பாதுகாத்தார். 2இராஜா.6:17 “…உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” ஒரு தனி மனிதனுக்காக தேவன் பரம சேனையையே பாதுகாவலாக அனுப்பினார். ஆதி.35:5 வசனத்தில், “…பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்” வாலிபர்களுக்கு தேவன் விசேஷித்த பாதுகாப்பை தருவார். தொல்லை கொடுக்கும் கூட்டம் ஒன்றும் செய்யமுடியாது. தேவன் தமது பிரசன்னத்தால் நம்மை சகல தீங்கிலிருந்தும் விலக்கி காக்கிறார். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This