தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவது எப்படி?

Written by Pr Thomas Walker

October 4, 2016

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவ ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட தேவ நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும். யாத்.20:24ஆம் வசனத்தில், “மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” Make a special After for me…. Do this in every place where I till you to remember me. Then I will come and bless you. நாம் தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபிக்க வேண்டும், மகிமைப்படுத்த வேண்டும்.

ஏன் தேவ நாமத்தை பிரஸ்தாபிக்க வேண்டும்? என்று ஆராய்ந்து பார்ப்போம்:

1) அதிசயமானவர்:

ஏசா.9:6 வசனத்தில், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” அவர் அதிசயமானவர், அதிசயங்களைச் செய்ய வல்லவர். வல்லமையில், ஆலோசனையில், பராக்கிரமத்தில், சமாதானம் மனிதருக்குத் தருவதில் அவருக்கு ஒப்பானவர் இந்த பூமியில் ஒருவரும் இல்லை. எனவே அவர் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும்.

2) எல்லா நாமத்துக்கும் மேலானவர்:

பிலி.2:9,10,11 வசனங்களில் “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” ஆதலால் பிரஸ்தாபப்படுத்த வேண்டும். எல்லா முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும். தேவன் எல்லா சத்துவங்களையும் ஆளுகை செய்கிறவர். ஆதலால் அவரை பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.

3) ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்:

வெளி.19:16 வசனத்தில் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.” அவர் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர். ஆதலால் அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.

4) சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அஸ்தமிக்கும் திசை மட்டும் ஆராதிக்கப்படத் தக்கவர்:

சங்.113:1,2,3; மல்.1:11; வெளி.5:8 வசனங்களில் “சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக” மல்.1:11, “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்”

உபா.28:10; வெளி.5:13 “அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்” மேலும் வெளி.5:13 “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும்…. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக…” என்று போற்றப்படுகிறபடியால் நாம் அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.

5) அவர் நாமத்துக்கு பயப்பட வேண்டும்:

மல்.4:2 “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” அவர் நீதியின் சூரியன். அவர் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். எனவே பிரஸ்தாபப்படுத்த வேண்டும்.

அன்பு நேயரே! தேவனுடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தலத்திலும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார். அவர் நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்தி, ஆராதிக்க வேண்டும். நீதிமான் கர்த்தர் நாமத்தில் ஓடி சுகமாக இருப்பான். அவர் நாமம் துருகம், அதனுள் சுகமும், ஆரோக்கியமும் உண்டு. கர்த்தர் நாமத்தை உயர்த்தி மகிமைப்படுத்தும்போது அற்புதங்களும், அதிசயங்களும் நடக்கிறது. அவர் உயர்த்தப்படும்போது அநேகரை இழுத்துக் கொள்கிறார். சர்வாங்க சுகத்தையும், அசுத்த ஆவிகள்மேல் ஜெயத்தையும் தருகிறார். எனவே நாம் கூடிவரும் நேரங்களில் எல்லாம் அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்துவோம்! – அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This