அவர் ஒரு புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர். ஒருநாளிலே அவர் வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடைக்குச் சென்றார். அங்கிருந்த மெக்கானிக் ஹார்லி (Harley) என்ற காரைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார். மெக்கானிக் டாக்டரைக் கண்டதும் “ஹேய்! டாக்டர் நான் உம்மிடம் ஒரு கேள்வி கேட்க நீண்ட நாட்களாய் நினைத்தேன், கேட்கலாமா?” என்றான்.
அந்த புகழ்பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆச்சரியத்துடன் அவன் அருகில் சென்று என்னவென்று வினவினார். அவன் கூறினான், “டாக்டர், நானும் உம்மைப் போலவே வண்டிகளின் வால்வுகளை சரிபார்க்கிறேன். வண்டியின் இருதயத்தைப் போல செயல்படும் இஞ்சினை சரிபார்த்து, தேவையானால் வேறு வால்வுகளை மாற்றுகிறேன். நீங்களும் அதுபோலவே மனித இருதய வால்வுகளை சரிபார்த்து தேவையான மாற்று இருதய அறுவை சிகிச்சை செய்கிறீர்கள். ஆனால் எனக்கு குறைவான தொகையை ஊதியமாகவும் உங்களுக்கு அதிகமான தொகையை ஊதியமாகவும் தருகிறார்களே இது எப்படி நியாயம்” என்றான்.
பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் புன்னகைத்தவாறே, “நீர் இஞ்சினை நிறுத்திவிட்டு பாகங்களைக் கழற்றி சரி செய்கிறீர், நான் எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே (மனிதன் உயிரோடிருக்கும்போதே) பாகங்களை சரிசெய்கிறேன். நீயும் வண்டி ஓடும்போது சரி செய்து பார். அப்போது விளங்கும்” என்றார்.
மெக்கானிக் மௌனமாகிவிட்டார்.
“…கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (ரோமர் 12:10)