அறுப்புக்கு ஆளில்லை

December 23, 2010

1991ஆம் ஆண்டு, நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எனது தகப்பனாருக்கு நன்கு அறிமுகமான, கிறிஸ்தவ ஸ்தாபனம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு ஒரு சிறிய அலுவலகம் இருந்தது. அதில் ஒரு சகோதரன் பொறுப்பாக இருந்தார்.
அந்த ஸ்தாபனத்தில் ஒரு பிரச்சனை. அவர்கள் வேன், வேறு மாநில பதிவு பெற்றது. எனவே சென்னையில் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தது.
நான் செல்லும் சபையில், ஒரு போக்குவரத்து துறை அதிகாரி வந்துகொண்டிருந்தார். அவர் எனது தகப்பனாருக்கும் மிகவும் பழக்கமானவர். அவரிடம் நான் சென்று, இந்த ஸ்தாபனத்தாருக்கு உதவிசெய்யும்படி வேண்டினேன். அவரும் அதற்குரிய படிவங்களை, நிரப்பிக்கொண்டு வரும்படி என்னிடம் கேட்டார்.
அந்த நாட்களில், நான் “இரவு நேர வேலைக்கு” செல்வது வழக்கம். அந்தக் கிறிஸ்தவ ஸ்தாபனத்தின் அலுவலகம் எனது தொழிற்சாலையின் அருகே இருந்தப்படியால், நான் வேலையிலிருந்து அதிகாலையில் வீடு திரும்பும்போது, நேரடியாக இந்த அலுவலகத்திற்கு சென்று விடுவேன். இவர்களோ அலுவலகத்தை 10.00 மணிக்கு மேலாகத்தான் திறப்பார்கள்.


இவர்களுக்காக உதவிசெய்ய, நான் வலிய செல்லும்போது கூட அவர்கள் அதற்குத் தேவையான படிவங்களை நிரப்பக்கூட உதவ மாட்டார்கள்.
சில நாட்கள் கழித்து, அந்த அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்த சகோதரன், தனக்கு ஒரு உதவியாளரை நியமித்துவிட்டார். நான் செல்லும் போதெல்லாம் அந்த உதவியாளர் “இயக்குநரை இப்போது காண இயலாது” மிகவும் வேலையாக இருக்கிறார் என்பார்.
நான் உள்ளே எட்டிப் பார்த்தால், அவர் வேலை எதுவும் இல்லாமல், உட்கார்ந்துகொண்டு இருப்பார். நானும் விடாப்பிடியாக, படிவங்கள் ஒன்றின்பின் ஒன்றாக நிரப்பிக்கொண்டிருந்தேன்.சில நாட்கள் கழித்து ….இந்த உதவியாளருக்கு ஒரு உதவியாளர் வந்துவிட்டார். இவர் என்னிடம் “மேலாளர் இப்போது அலுவலாக இருக்கிறார்” அவரைக் காண இயலாது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.உண்மை நிலையென்னவென்றால், அதுவே மிகச்சிறிய அலுவலகம். அதற்கு இயக்குநர், மேலாளர் போன்ற பதவிகள் தேவையேயில்லை. இவர்களாகவே, பதவிகளை எடுத்துக்கொண்டு, வேலையே இல்லாவிட்டாலும், மிகவும் வேலை இருப்பது போன்று பாசாங்கு செய்கிறார்கள்.


உண்மை எஜமான் அறுப்புக்கு ஆளில்லை என ஏங்கிக்கொண்டிருக்கையில், சோம்பேறியான வேலைக்காரர் பலர் தங்கள் பெயர் பலகைகளில் “எஜமான்” எனத் தங்களையே அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமது ஆண்டவரே ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யும்படி வந்தார். இவர்களோ ஊழியம் செய்பவரையும் கொன்றே விடுகின்றனர். எஜமான் வரும்போது விழித்திருக்கும் வேலைக்காரராய் இருப்போம். எஜமான் நம்மை மெச்சிக் கொள்வார்.



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This