சுவிசேஷகர் சாது ஸ்டீபன் Eva. Sadhu Stephen  – 73 Years

Written by Evangeline Matthew

October 2, 2022

“எந்த அளவுக்கு ஒருவரின் அர்ப்பணிப்பு உள்ளதோ அந்த அளவுக்கு இருக்கும்”

வில்லியம் பூத் கூறிய படி அர்ப்பணிப்பும், தியாகமும் உள்ளவர்களாய் தன் வாலிப வயதில் தேவனுக்கு அர்ப்பணித்தவர் தான் சுவிஷேசகர். சாதுஸ்டீபன். தேவன் அவருக்கு சாது சுந்தர் சிங்கை காண்பித்து அவரைப் போல அழைத்த போது உலக வேலையை ராஜினாமா செய்து ஊழியத்துக்கு வந்தார். F.M.P.B யில் மிஷினரியாக தன்னை அர்ப்பணித்து Northவில் U.P, பஞ்சாப், பம்பாய், காஷ்மீர் போன்ற பல இடங்களிலும் ஊழியம் செய்தார். பின்னர் தமிழ்நாட்டில் பல இடங்களிலும், வெளிநாடுகளில் தேவனால் பயன்படுத்தப்பட்டர் 2022ம் வருடம் சில மாதங்கள் நோய் வாய்ப்பட்டார். பின்னர் செப்டம்பர் 2022 ல் கர்த்தருக்குள் மரித்தார்.

இளமைபருவம்:

சாது ஸ்டீபன் அவர்களின் பெற்றோர் தகப்பன் ஜான் சாமுவேல், தாயார் ஜாய் பெல் சுகந்தி இவர்கள் திருநெல்வேலி மாவட்டம் டோனாவோவூரை சேர்ந்தவர். தகப்பன் தாய் இருவரும் ஆசிரியர்கள் தகப்பனின் பெற்றோர் Rev. தேவகரம் – தாய் நேசமணி C.SI சபையில் போதகராக பணி செய்தவர்கள். Rev. தேவகரம் ஐயர் தேவசகாயம் உபதேசியாரின் தம்பி. இவர் பாஸ்டர்.தாமஸ் வாக்கர்(மதுரை) தகப்பன். இவர்கள் நல்ல ஊழியம் செய்த குடும்பத்தின் பின்னணியில் வந்தவர். மூதாதையர் அநேகர் தேவ ஊழியர்கள்.

சாது ஸ்டீபனுக்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜா ஸ்டீபன். சென்னையில் ஜீவமார்க்கம் சபையில் ஞானஸ்நானம் எடுத்த போது கொடுத்த பெயர் எசேக்கியா ராஜா. ஊழியத்துக்கு வந்த பின் சபையார், ஊழியர் சாது ஸ்டீபன் என்று அழைத்தனர்.

உடன்பிறந்தவர்கள்: (சகோதர, சகோதரிகள்)

சாது ஸ்டீபன் அவர்களோடு பிறந்த சகோதர, சகோதரிகள்- 2 பெரிய சகோதரிகள் 3 சிறிய சகோதரர்கள், 1 தங்கை – மொத்தம் 7 பேர்கள் தாய்க்கு பிறந்தவர்கள். அவர்கள் பெரிய சகோதரி ரோஸ்லின் ராஜ்குமார், அடுத்த அக்காள் அன்புதாமஸ். பெரிய தம்பி ரிச்சர்டுசன் ராஜா டேவிட், நடு தம்பி எட்வின் கலைச்செல்வன் ஒசன்னா, கடைசி தம்பி டேவிட் செயசிஸ். அல்லேலுயா.

தெய்வீகசுகமும்ஊழியஅர்ப்பணிப்பும்:

ராஜா ஸ்டீபன் அவர்கள் பிறந்ததும் தாயார் (ஜாய் பெல் சுகந்தி) படுத்த படுக்கையானார்கள். ராஜா ஸ்டீபனும் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் தாயாரின் அம்மா வீட்டில் ஸ்டீபன் வளர்ந்தார்கள். பாட்டியம்மா “நல்லம்மாள்”. அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். தாயார் படுத்த படுக்கையாயிருக்கும் போது ஒரு பிரகாசமான ஒளி கடந்து சென்றதை பார்த்தார். உடனே தேவகரம் அவர்களை தொட்டதால் தாயாரும் மகன் ஸ்டீபனும் சுகம் பெற்றனர். அப்பொழுதே தேவனுக்காக தன் மகனை தாயார் அர்ப்பணித்தார்கள்.

 இரட்சிப்பும் – தேவனுக்குதன்னைஅர்ப்பணித்தலும்:-:

1969 வருடம் தனது 20வது வயதில் தாம்பரத்தில் உள்ள ஊழியக்காரி( ஜீவபார்க்கம் சபை) மூலம் சந்திக்கப்பட்டார்கள். ஊழியக்காரி அம்மா (ஜாய்ஸ்) ஸ்டீபனையும், ராஜா டேவிட்டையும் சந்தித்து அழைத்ததால் சபைக்கு சென்றனர். பின்பு தேவன் அவர்களை இரட்சித்தார். அபிஷேகத்தார். ஊழியத்துக்கும் அழைத்தார். தேவனின் வல்லமையான அபிஷேகமும் கிருபைகளையும் பெற்று ,வெளிப்பாடுகளையும், அநேக பரலோக தரிசனங்களையும் பெற்றார். ஒருமுறை 6 நாட்கள் தொடர்ச்சியாக மலையில் தங்கி ஜெபித்தார்.

வெளிப்பாடும் தரிசனம் பெற்று வெள்ளை வேட்டி ஜிப்பா அணிந்து வாழ்ந்தார். 4 வருடங்களுக்கு பின் பம்பாயில் வேலை பார்த்தார். அங்கு 3 வருடங்கள் வேலை செய்த பின் தேவன் அவருடன் பேசி ஊழியத்துக்கு அழைத்தார். “சாது சுந்தர் சிங் போலகாவி உடை டர்பன் கட்டி வட இந்தியாவிலும் சாதுக்கள் மத்தியில் ஊழியம் செய்ய கூறினார். வேலையை ராஜினாமா செய்து காவி உடையில் வந்ததால் உறவினருக்கு பெரிய அதிர்ச்சி ,எனவே திருநெல்வேலிக்கு சென்று அங்கு ஊழியம் செய்தார்.

வடஇந்தியஊழியம்:

 சாது ஸ்டீபன் பின்னர் F.M.P.B (நண்பர் சுவிசேஷ குழு ஊழியத்தில் சேர்ந்து மிஷனெரியாக பல ஆண்டுகள் வட இந்தியாவில் அதிகமாக உத்திரப்பிரதேசத்தில் பணி புரிந்தார்கள். ஹிந்தி (Hindi) சரளமாக பேசுவார். Hindi தெளிவாக சத்தியத்தை போதிக்கும் கிருபை பெற்றவர். தேவன் அவரை (Cylon) (சிலோன், துபாய் குவைத், அரேபியா, நாடுகளில் பயன்படுத்தி வந்தார். ஆயர்கள், பெந்தேகோஸ்தே போதகர்கள். சபை ஊழியர்கள், திருச்சபைகளில் சுவிசேஷ பணிக்காக அழைத்த போது அழைப்பின் பேரில் பல ஊர்களுக்கு சென்று ” பரிசுத்தம் “தேவசித்தம்”, தேவனுக்காக வைராக்கியமாக வாழுதல், நரகம், பரலோக வாழ்வு,தேவ சித்தம், அர்ப்பணிப்புள்ள தியாக வாழ்வு குறித்து கண்டிப்பாகவும் எச்சரிப்பாகவும் தேவ செய்தி கொடுத்தார்.அநேகர் இவர்கள் வாழ்கையால் தொடப்பட்டனர். பரிசுத்த வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

தமிழ்நாடு மாத்திரம் அல்ல, ஆந்திரா,கேரளா, கர்நாடகம், பம்பாய், காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் வல்லமையாய் தேவனால் பயன்படுத்தபட்டார்கள். தேவ அழைப்பின் படி வருடத்தில் ஒரு மாதம் இமயமலை அடிவாரத்தில் உள்ள ரிஷகேஸ், ஹரித்துவார் போன்ற இந்து புண்ணிய தளங்கள் நிறைந்த இடங்களில் தங்கி கைப்பிரதி ஊழியமும் சாதுக்கள், ஹிந்து சாமியார்களுக்கு சுவிசேஷம் அறிவித்து வந்தார்கள்.

மதுரையில் ஏலிம்சபைக்கு அடிக்கடி வந்து ஊழியம் செய்தார்கள். 1982 ம் வருடம் முதல் மதுரையில் உள்ள பல இடங்களுக்கு ஹ.ழு திருச்சபைகளிலும், மற்ற ஆவிக்குரிய திருச்சபையிலும் ஊழியம் செய்தார்.பாஸ்டர். தாமஸ்வாக்கர்– (சாதுஸ்டீபனின் சித்தப்பா) ஞச.மார்க்கஸ் தேவ சகாயம் சேலத்தில் ஊழியம் செய்த போது (1986) வருடம் முதல் ஆரம்பகாலம் “சேலம்” ஊழியத்தில் கூடவே இருந்து ஊழியத்தை கட்ட உதவினார்கள். மேலும் Pr. மேத்யூ அவர்கள் ஊழியத்திலும் கும்பகோணம், தாராபுரம் ஊழியங்களிலும் ஆரம்பநாட்களில் வந்து உற்சாகப்படுத்தினார்கள். ஏலீம் மிஷனெரி ஊழியத்திலும் 2002 ம் வருட முதல் ஈடுபாடு கொண்டவர்கள். ஊழியர்கள் பிரதிஷ்டை, மற்றும் பொதுகூடுகை, கண்வென்ஷங்களிலும் அநேக முறை தலைமை தாங்கினார்கள். சுவிசேஷமுரசில் சபைகளை பற்றி ஆவிக்குரிய கட்டுரை எழுதினார். சகோ.இம்மானுவேல் தாயாளுக்கு ஒத்தாசையாகவும், சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்தார்கள்.

சாதுஸ்டிபனிடம் காணப்பட்ட நற்குணங்கள்;

சிறந்த ஜெபவீரர் இரவின் பெரும் பகுதி நீண்ட நேரம் ஜெபிப்பார் ஊழிய வாஞ்சை மிஷனெரி தரிசனம் உள்ள பிரசங்கள் அநேக மிஷனரிகள் வாழ்க்கை வரலாற்றை பிரசங்கங்களில் கூறி அறைகூவல்விடுப்பார். தங்கள் சகோதர. சகோதரிகளையும், பிள்ளைகளையும் நேசித்தார். ஊழிய நாட்களில் வெளியே செல்வதை தவிர தாம்பரத்தில் தன் தம்பியுடன் (ராஜாடேவிட்) வீட்டில் அவர்கள் மகன் ஞசinஉந குடும்பத்துடன் தங்கி வந்தார்கள்.

இறுதிநாட்கள்:-

சாதுஸ்டீபன் தன்னுடைய தம்பி குடும்பத்தில் ஒரு அறையில் தங்கி வந்தார். அவர்களுக்கு சொந்த வீடோ நிலமோ இல்லை எளிய உடை எளிய வாழ்க்கை ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை “சாது சுந்தர் சிங்கை நாம் பார்க்க வில்லை தென்னகத்தில் அவரைப் போல்டர்பன் கவி உடையுடன் கர்த்தர் ஊழியத்தை ப ல தரப்பட்ட மக்கள் மத்தியில் ஊழியத்தை செய்தார் நன்கு சத்தமாக அழகாகபாடுவர் கடந்த 5 வருடங்களாக நோய் வாய்பட்ட நேரத்திலும் சிரமத்துடன் மேடையில் உட்கார்ந்து செய்தி கொடுத்தார்கள் கடந்த 3 வருடமாக வெளியே செல்ல முடி

ய வில்லை. காலில் பயங்கரமான புண்கள் அதிக வேதனை சகித்தார் அநேக தேவ ஊழியர்கள் பணம் கொடுத்து உதவினர் தாமாக படுக்கவோ உட்காருவோ முடியாமல் சிரமப்பட்டார் அவர்கள் தம்பி ராஜாடேவிட்டும், மகன் பிரின்ஸ் நன்கு கவனித்து கொண்டார்கள். சரீர உபாதைகள் அதிகமாக காணப்பட்டது தேவன் செப்டம்பர் 22 தேதி காலை5.50 மணியளவில் தன்னுடைய தாசனை தன் வீட்டில் சேர்த்துக் கொண்டார் அவர் உடல் தாம்பரத்தில் கிறிஸ்துவ திருச்சபையின் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்புநண்பரே! நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாக தீங்கு அநுபவி உங்களின் நாட்டம் எப்படி உள்ளது“தன்னில் தானே அனலில்லாதவன் மற்றவர்களுக்கு அனல் உண்டாக முடியாது”என்ற வார்த்தையின் படி தன்னிலே தானே துடிப்புள்ள ஆர்வத்துடன் வைராக்கியமாக கடைசி வரை தன் ஓட்டத்தை பொறுமையாக ஓடி ஓட்டத்தை முடித்தார் முடிவு பரியந்தம் நிலைத்திருந்து ஜிவ கிரீடத்தை பெற்றுக் கொள்ள ஆயத்தப்படுங்கள்.மாரநாதா!

Author

You May Also Like…

Share This