இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்

November 1, 2020

சில மாதங்களுக்கு முன்பாக, பிரபல தொழிலதிபர் ஒருவர்,நமது இயக்கத்தின், ஆலயக் கட்டுமானப் பனி நிர்வாகிகளிடம்  தானும் சில ஆலயங்கள் கட்ட உதவி செய்ய விரும்புவதாகவும், அதற்காக ஒரு பெரிய தொகையை கொடுக்க விரும்புவதாகவும், கூறினார். அதைக் கேட்ட நமது இயக்க நிர்வாகிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் அவர் நமது நிர்வாகிகளிடம், நீங்கள் சென்று ஏதாவது சிமெண்ட் கடையில், சிமெண்ட் மற்றும், இரும்பு கம்பி பெயரில் ரசீதை பெற்று என்னிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு உடனடியாக அந்த ரசீதில் உள்ள பணத்தைக் கொடுத்து விடுகிறேன் ஏற்றுக் கூறினார்.

நமது இயக்கத்திலுள்ள நிர்வாகிகள் மிகவும் உண்மையானவர்கள். எவ்வித சன்மானமுமின்றி, தங்கள் பணத்தால், ஆண்டவர் நாமத்தை, தங்கள் உலக வேலைகள் மத்தியில், உயர்த்த விரும்புகிறவர்கள்.  தொழில் செய்து, உழைத்து முன்னேறியவர்கள். அவர்களுக்கு வருமான வரி விதிகள், சட்ட நுணுக்கங்கள், விதி முறைகள் அதிகம் செய்ய வாய்ப்பில்லை. எனவே அவர்களும் மகிழ்ச்சிச்சியுடன் சம்மத்தித்து, என்னிடம் வந்து கூறினார்கள்.

எனக்கோ, என்னுடைய உலக வேலையினிமித்தம் இவ்வித “வர்த்தகப் பரிவர்த்தனையில்” ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்கள் பற்றி அறிய வாய்ப்பு பெற்றவன். எனவே நமது சகோதரர்களிடம், அந்த தொழில்,   அதிபரிடம் பணத்தைப்  பெற வேண்டாம். சில ஆலயங்கள் குறைவாக காட்டினாலும் பரவாயில்லை. முழு தைரியத்தோடு நாம் ஆண்டவருடைய சமூகத்தில் பிரவேசிக்க தகுதியாக வேண்டும் எனக் கூறிவிட்டேன். இரானுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுக்க நமதாண்டவர் கட்டளையிடுகிறர்கள். நமது அன்பர்கள் சிலர், ராயனுடையதை சற்று சுருக்கி, தேவனை உயர்த்த விரும்புகிறார்கள். தேவனுக்கு அப்படிப்பட்ட உதவிகள் தேவையில்லை. மேலும் நான், அநேக  ஆலயங்களில் ஆத்துமாக்கள் இல்லாததையும், தியாகத்தோடு  கட்டப்பட்ட சிறிய ஆலயங்களில், அநேகர் இரட்சிக்கப்பட்டு பரலோகவாசியாக மாறுவதையும் கண்டிருக்கிறேன்.

எனவே நாம், நம்மால் இயன்றதைச் செய்வோம்! உண்மையாய் செய்வோம்! உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் என நமதாண்டவர் வாக்கு பண்ணியிருக்கிறாரே. விரைந்து செயல்படுவோம். தேவன் நம்மூலம் இந்த தேசத்தை ஆசீர்வதிப்பார்.



Author

You May Also Like…

Share This