“கொழுந்து விட்டு எரியும் வைராக்கியம்”

Written by Reverent Selvakumar

September 21, 2022

காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் தன் நண்பரைப் பற்றி பேசிய ஒருவர் தன் நண்பர் எப்படி ஐஞளு  அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார் என்று பின்வருமாறு சொன்னார்,  ” நாங்கள் படித்துக்கொண்டிருந்த கல்லூரிக்கு ஒரு நாள் ஐஹளு அதிகாரி ஒருவர் வந்தார்.   தான் வறுமையின் கோரப்பிடியில் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த சாதாரண விவசாயக்  குடும்பத்தில் பிறந்தவர் என்றும் கடுமையாக உழைத்து ஐஹளு அதிகாரியாகத்  தேர்ச்சிப்  பெற்றதாகவும், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லையென்றுசொல்லிச்சென்றார்”.

அதுவரை, ‘பணக்காரர்களால் தான் வாழ்வில் சாதிக்க முடியும்’ என்று தனக்குள்ளேயே  உருவாக்கி வைத்திருந்த  எண்ணக்கோட்டையானது, அந்த ஐஹளு அதிகாரியின் பேச்சால் இடிந்து தரைமட்டமானதோடு  மண்ணோடு மண்ணாய் மக்கியும் போனது.    தன்னாலும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையின் வேர் இதயத்தில் ஆழமாய் பதிந்துவிட்டது.  தானும் உயர் அதிகாரியாக மாறவேண்டும் என்று தனக்குத்தானே தீர்மானம் பண்ணிக்கொண்டு வைராக்கியமாக படிக்கத்தொடங்கினார். 

அதுவரை, அரட்டைக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும் புகலிடமாய் இருந்த அவருடைய விடுதி அறை (ழடிளவநட சுடிடிஅ) மயான அமைதியாய் எப்போதும் பூட்டியேக் காணப்பட்டது.  சிலர் அவரைப்பார்த்து கேலியும் கிண்டலுமாய் நக்கல் அடித்தும், எதுவும் அவருடைய மண்டைக்கு  ஏறவில்லை. அறைக்குள்ளாகவே தன்னை முடக்கிக்கொண்டு எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாய், மொத்தத்தில் கர்ம யோகியாய் மாறிவிட்டிருந்தார்.

 தலையை மொட்டையடித்துக்கொண்டு, கண்புருவத்தின்  முடியைக் கூட சவரம் செய்து பார்ப்பதற்கே கோரமாய் காணப்படுவார்.  கேட்டால், இப்படி என்னையே அசிங்கப்படுத்திக்கொண்டால்தான் வெளியே போகவேண்டும் என்ற எண்ணமே வராது என்றும், அறையிலே இருக்க வேண்டும் என்ற எண்ணமும், படிக்க வேண்டும் என்ற வெறியும் எனக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் என்று  சொல்லிக்கொள்வார்.  அப்படியே ஐஞளு தேர்வில் தேர்ச்சிபெற்று இன்று மிகப்பெரிய அதிகாரியாக பணியாற்றி வருகின்றார் என்றார்.

ஆம்!  வாழ்க்கையில் தீர்மானமும்,  தீர்மானத்தைத் தொடர்ந்த வைராக்கியமும்,   வைராக்கியத்தைத் தொடர்ந்த முயற்சியும்,  முயற்சியோடு பயிற்சியும் சேர்ந்துவிட்டால் உன்னை வெல்ல உருவானாலும் முடியாது. தீர்மானம் எடுக்கத்  தயங்குபவன் வைராக்கியம் கொள்ளமாட்டான்.  வைராக்கியம் இல்லாதவன் முயற்சியும் பயிற்சியும் செய்ய மாட்டான். இப்படி எதையுமே செய்யாதவன் ஒருநாளும் எதையுமே சாதிக்க மாட்டான்.

நான் மேலே சொன்னது உலகத்திற்கு மட்டுமல்லாது உன்னதத்தின் காரியத்திற்கும் பொருந்தும்.  தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும், அவர் பானம் பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்த வேண்டாமென்று தனக்குத்தானே தீர்மானம் பண்ணி வைராக்கியமாய் இருந்தார்(தானியேல்:1-8).  இதனால், தேவன் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவு கிடைக்கும்படி செய்ததோடு ராஜாவுக்கு அடுத்த நிலைக்கு தானியேலை உயர்த்தினார்  என்பதை நாமறிவோம்!

எனதருமை தம்பி! தங்கையே! நீயும் உனக்குள்ளே தீர்மானம் பண்ணி வைராக்கியமாய் முயற்சியும் பயிற்சியும் செய்!  தேவன் உன்னை உயர்த்தி உன் நண்பர்களும் உறவினர்களும் அன்னாந்து பார்க்கும் படி நிச்சயம் செய்வார்.   அதன்பின் நீ சாட்சி கொடுப்பாய். அதைக்கேட்ட  என் மனதுக்குள் மத்தாப்பு மழை பெய்து,  என் தம்பி தங்கையின் உயர்வை எண்ணி கர்த்தருக்குள் சந்தோஷப்படுவேனே!

Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This