ஜெயங்கொள்ளுகிறவன் எப்படிப்பட்டவனாயிருக்க வேண்டும்?

Written by Pr Thomas Walker

November 2, 2013

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நம்முடைய தேவன் மரித்து உயிர்த்தெழுந்தவர். மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவர். மரணத்துக்கும், பாதாளத்துக்கும் திறவு கோலை உடையவர். பிதாவின் வலது பாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டு வெற்றி வேந்தனாக வீற்றிருக்கிறார். இயேசுவின் சீஷர்களுக்கு ஜெயத்தை வாக்குப் பண்ணியுள்ளார். ஜெயக் கிறிஸ்து நம் வாழ்வின்  தடைகளை மாற்றி ஜெயத்தைக் கட்டளையிடவல்லவர். அவரால் எல்லாம் ஆகும். சகலமும் அவரைக் கொண்டும், அவருக்காகவும், சிருஷ்டிக்கப்பட்டது. அவரைத் தேடுகிறவர்களுக்கு ஜெயம் கொடுப்பார். வெளி .21:7 ஆம் வசனத்தில் “ஜெயங் கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்” என்று பார்க்கிறோம். நாம் ஜெயம் பெற்றவர்களாக வாழவேண்டும் என்று விரும்புகிறார். உலகம், மாமிசம், பிசாசை ஜெயித்து எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.

தேவனுடைய சபையில் உள்ள மக்களில் சிலர் பயப்படுகிறவர்களாக இருப்பதால் பிசாசு, மரணம், சாபக்கட்டுகளில் சிக்கி, பாவத்தில் வாழ்கிறார்கள். ஜெயமான விடுதலையின் வாழ்க்கை இல்லை. ஆனால் தேவனுடைய பிள்ளைகள் பிசாசு, உலகம், மாமிசத்துக்குப் பயப்பட மாட்டார்கள். தேவனிடத்தில் உறுதியான விசுவாசம் வைத்திருப்பதால் எதிர் காலத்தைக் குறித்தும், பலவானாகிய பிசாசின் சேனையைக் குறித்தும் பயமில்லை. ஜெப வீரர்கள் தான் இந்த விசுவாசப் பாதையில் முன்னேற முடியும். பொல்லாங்கனின்தந்திரங்களைஜெயித்தவர்கள். பரலோகத்தைச் சுதந்தரிப்பார்கள்.

ஒரு விசுவாசியின் ஆரம்ப கால வாழ்க்கையை மட்டும் பார்க்கக்கூடாது. ஆரம்பத்தில் ஆவிக்குரியவர்களாக ஓட்டத்தை ஆரம்பித்தபலர், மாம்சத்தில் தோல்வியைச் சந்தித்து, ஜெயம் பெறாமல் போய்விட்டனர். சிலர் தேவன் பேரில் வைத்த விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடி, வெற்றி சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர். மனிதர்கள் ஆரம்பத்தில் ஆவியில் ஆரம்பித்து முடிவில் நித்திய நரகத்தண்டனையை அடைகிறார்கள். நீதிமான்கள் ஜெயிக்கிறவர்களாக இருப்பார்கள்.

ஜெயத்துக்கு ஊற்றுக்காரணர் (Source) இயேசு கிறிஸ்துதான். அவரைப் பின் பற்றுகிறவர்கள் ஜெயத்தைச் சுதந்தரிப்பார்கள். தம்முடைய பிள்ளைகள் ஜெயத்தைச் சுதந்தரிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஜெயம் எப்படி வருகிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

தேவனால் பிறந்தவனுக்குஜெயம்
1) தேவனிடத்தில் விசுவாசம் வைத்தால் ஜெயம்:
1யோவான் 5:4 ஆம் வசனத்தில் “தேவனால் பிறப்ப தெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடையவிசுவாசமேஉலகத்தைஜெயிக்கிறஜெயம்” மேலும் யோவான் 3:5 ஆம் வசனத்தில் “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்...” 2தீமோத்தேயு 4:7ல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்” என்கிறார் பவுல். விசுவாசத்தைக் காத்துக் கொண்டு, நல்ல போராட்டத்தைப் போராடினால் ஜெயம் கிடைக்கும்.
நீதி .21:31 ஆம் வசனத்தில் “குதிரையுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.”

2) பரிசுத்த ஆவியைப் பெறுவதால் ஜெயம் வரும்:
அப்.1:8 “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” ஜெயங்கொள்ளுகிறவன் சாட்சியின் ஜீவியம் உடையவர்களாகவும், வீட்டிலும், ஊரிலும், செல்லுமிடங்களிலும், வெளிநாடுகளிலும் தேவனுக்குச் சாட்சியாக வல்லமையின் ஆவியால் நிறைந்து ஜெயமாக வாழுவார்கள். பரிசுத்த ஆவியானவரே ஜெயத்தைக் கொடுப்பவர்.

3) பரிசுத்த ஆவியானவர் விலகாமல் காத்துக் கொண்டால் ஜெயம்:
நியாய.16:20 “அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரை விட்டு விழித்து, கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியாமல், எப்போதும் போல உதறிப்போட்டு வெளியேபோவேன் என்றான்” சிலருடைய வாழ்க்கையின் தோல்விக்குக் காரணம் பரிசுத்த ஆவியானவர் தன்னைவிட்டு விலகுவதை அறியாமல் இருக்கிறார்கள். மீட்கப்படும் நாளுக்கென்று பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தி வாழ்கிறார்கள்.
ஆதி.6:3 ஆம் வசனத்தில் கர்த்தர், “என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.”
வெளி.12:17 ஆம் வசனத்தில், “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படிதங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை(பிசாசை) ஜெயித்தார்கள்” ஒவ்வொரு விசுவாசியும் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களாகவும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, உலகம், மாமிசம், பிசாசை ஜெயிக்கிறவர்களாகவும், வசனத்தால் போதிக்கப்பட்டு நன்றாய் வசனத்தைக்கைக் கொண்டால் ஜெயம் பெற முடியும்.

4) வாயில் நல்ல அறிக்கை இருந்தால் ஜெயம்:
எண் .13:30 ஆம் வசனத்தில், “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான்.” உன்வாயில் நற்செய்தி இருந்தால் எளிதாகச் சாத்தானின் கோட்டைகளை ஜெயிக்கலாம். மற்ற 10 பேரும் துர்ச் செய்தியைச் சொன்னார்கள். கானான் தேசத்துக் குடிகளோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்ததால் தோல்வியே அடைந்தனர். துர்ச் செய்தி பரப்பினவர்கள் அழிக்கப்பட்டனர். நீ உலக மக்களின் செல்வாக்குடன் உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே, தோல்வியடைவாய். யாக்கோபின் ஜெயபலமானவர் உன்னுடன் இருக்கிறார். உன்னிடத்தில் வைக்கப்பட்ட ஏணி வானத்தையும், பூமியையும் இணைக்கும். தேவனுடைய  ஒத்தாசையும் பரிசுத்த தூதர்களின் பாதுகாவலும் உண்டு. நல்ல அறிக் கைபண்ணினால் ஜெயம் கிடைக்கும்.

5) தேவனுடைய தரிசனமும் வெளிப்பாடும் இருந்தால் ஜெயம்:
எண் 14:9 ஆம் வசனத்தில், “கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம்ப ண்ணாதிருங்கள்; அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள்பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப் போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை என்றார்கள்.” காலேப்புக்கும், யோசுவாவுக்கும் மட்டும் கானானியரைப் பற்றிய சரியான வெளிப்பாடு இருந்தது. “அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிற்று” என்கிற அறிவு இருந்தது. மேலும் உலகத்தில் இருப்பவனிலும் நம்மோடு இருப்பவர் பெரியவர் என்ற தரிசனம் நமக்குத் தேவை. ரோமர் 7:24 ஆம் வசனத்தில் “நிர்ப்பந்தமான மனுஷன்நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்கிறார் பவுல். தேவனே ஜெயம் கொடுப்பவர் என்ற அறிவு தேவை.

6) விசுவாசத்தினாலே ஜெயம் பெற முடியும்:
விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி, காணப்படாதவைகளின் நிச்சயம். எபி.11:33 ஆம் வசனத்தில் “விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்.” தேவனிடம் உள்ளதங்கள் விசுவாசத்தால் ஜெயத்தைப் பெற்று அனுபவித்தனர். இஸ்ரவேலர், யோசுவா தலைமைத்துவத்தில் கானானியர், எமோரியர், எபூசியர் போன்ற 7 ஜாதிகளின் இராஜ்ஜியத்தை வென்றனர். தானியேலின் விசுவாசத்தால் சிங்கங்களின் வாய்கட்டப்பட்டது.

7) தீமையை நன்மையினால் வெல்லும் போது ஜெயம்:
ரோமர் 12:2 1ஆம் வசனத்தில் “நீதீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” பழிவாங்குதல் கூடாது. “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள்ப ழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்... உங்கள் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங் கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித் தழலை அவன் தலையின் மேல் குவிப்பாய்” என்கிறார். எனவே உன்னைப் போலப் பிறரையும் நேசித்து நன்மை செய்தால் ஜெயம் கிடைக்கும்.

அன்பு நேயரே! ஜெயங் கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். தேவனால் பிறந்தவர்களுக்கு ஜெயம், பரிசுத்த ஆவியைப் பெற்று சாட்சியாக வாழ்வதால் ஜெயம், பரிசுத்தாவியைதுக்கப் படுத்தாமல் பெற்றுக் கொண்ட அபிஷேகத்தைக் காத்துக் கொண்டால் ஜெயம், நல்ல செய்தியைப் பரப்புகிறவர்களாக வாழ்ந்தால் ஜெயம், தேவதரிசனமும், வெளிப்பாடும் உள்ளவர்களாக இருந்தால் ஜெயம். விசுவாசத்தினால் ஜெயம் பெறமு டியும். பிறர் நமக்குத் தீமை செய்யும் போது தீமையை நன்மையினால் வெல்லும் போது ஜெயம் கிடைக்கும். ஜெயக் கிறிஸ்து தடைகளை அகற்றும் கர்த்தராய் நம் முன் சென்று, ஜெயத்தை மேன் மேலும் தருவாராக! நாம் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்வோம்! ஜெயங்கொள்ளுகிறவர்களாய் எல்லாவற்றையும் சுதந்தரிக்க, தேவன் கிருபை செய்வாராக! ஆமென்!






Author

You May Also Like…

Share This