கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நாம் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை. நாம் கனிகொடுக்க வேண்டும் என்பதே அவரின் சித்தம். மேலும் அந்தக் கனிநிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சிலரதுவாழ்வில்கனியில்லாமல், சாட்சியில்லாமல், ஜெயமில்லாமல் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் மூலம் தேவன் மகிமைப்பட முடியவில்லை. ஆனால் சிலர் கனியுள்ளவர்களாகவும், சாட்சியுள்ளவர்களாகவும், விசேஷித்த விதமாய் தேவனால் பயன்படுத்தப் படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இஸ்ரவேல் புத்திரர்கள் அநேகர் மேல் தேவன் பிரியமாயிருக்கவில்லை. ஆனால் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவனாகிய ஆரோன் விசேஷித்தவன் என்பதை தேவன் மக்களுக்குக்காட்ட விரும்பினார். ஆரோன் மேலும் மோசேயின் மேலும் மற்றக் கோத்திரத்து மூப்பர்கள் பொறாமை கொண்டார்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் ஆரோன்மேல் இருந்த அழைப்பும், அபிஷேகமும் விசேஷித்தது.
எண்.17:7,8 வசனங்களில், “அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான். மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்த போது, இதோ, லேவியின் குடும்பத் தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அதுதுளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது”.
உயிரில்லாத கோல்கள் தான் தேவச மூகத்தில் வைக்கப்பட்டது. தேவன் கலகம் பண்ணின மற்றவர்களுக்கு முன்பாக ஒரே இரவில் பெரிய அற்புதத்தைச் செய்து, ஆரோனைத் தாம் தெரிந்து கொண்டு ஏற்படுத்தியதை வெளிப்படுத்தினார்.
அ) ஆரோனின் கோல் மட்டும் துளிர்த்தது. முதல் வித்தியாசம் நாமும் முன்னே அக்கிரமத்தாலும், பாவத்தாலும் மரித்தவர்களாக, நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தோம். தேவனின் ஜீவன் மனுஷனுக்குள் பிரவேசித்ததால் இரட்சிப்பைப் பெற்றுப்பு திய மனிதனாக மாறினோம்.
ஆ) கோல் பூப்பூத்தது – துளிர்விடாமல் பூப்பூக்கமுடியாது. இது சாட்சியின் ஜீவியத்தைக் காட்டுகிறது. நாம் உதைத்தால் மேலே எழும்பும் பந்து போல நாம் இருக்கக்கூடாது. பந்தில் ஜீவன் இல்லை. ஆனால் புறாவோ, அதில் ஜீவனிருப்பதால், மேலே உயரமாய், தானாகவே பறக்கிறது. விசுவாசிகள் புறாக்களைப் போலத் தன்னில் தானே சாட்சியுள்ளவர்களாக, உயரப்பறக்கும் அனுபவத்தில் இருக்க வேண்டும். யோவான் 10:10 ஆம் வசனத்தில் “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என்றார்.
ஆரோனின் கோல் பழங்களைக் கொடுத்தது. இயேசுவோடு இணைந்து வாழும் போது கனி நம்மில் உண்டாகும்!
இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனுக்கு விரோதமாய் முறு முறுத்தார்கள். அவனோவிசேஷமானவன். வித்தியாசமானவன். அவன் அக்கினி சோதனை வழியாக நடந்தான்.
ஆரோனின் கோல் துளிர்க்க, பூப்பூக்க, கனிதரக் காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்:
1. ஆரோனின் கீழ்ப்படிதல்:-
லேவி.10:7-9 வசனத்தில், “நீங்கள் சாகாத படிக்கு ஆசரிப்புக் கூடார வாசலிலிருந்து புறப்படா திருங்கள்; கர்த்தருடைய அபிஷேக தைலம் உங்கள் மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின் படியே செய்தார்கள். கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடே கூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிற போது, திராட்ச ரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம்” என்றார். மரித்த வீட்டில் அவன்துக் கவஸ்திரம் தரிக்க வேண்டும். தன் பிள்ளைகள் மரித்திருக்கதன் வஸ்திரத்தை மாற்றவில்லை, அழவில்லை. பேசாமலிருந்தான். தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கீழ்ப்படியாவிட்டால் இருதயம் கடினப்பட்டு விடும். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாய் வாழ வேண்டும்.
2. ஆரோன் ஜெபிக்கிறவர், மோசேயின் கரங்களைத் தாங்கியவர்:-
யாத்.17:12ஆம் வசனத்தில், “மோசேயின் கைகள் அசந்து போயிற்று; …ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது” ஆரோன் மோசேயின் கைகளைத் தாங்கினான். ஜெபிக்கிறவர்களும், ஜெபிக்கிறவனைத் தாங்குகிறவர்களும் ஜெயிக்கிறவராயிருப்பார்கள்.
3. தேவனால் நடத்தப்பட்டவர்:-
யாத்.4:27ஆம் வசனத்தில், “கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர் கொண்டுபோ என்றார். அவன் போய், தேவ பர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ் செய்தான்” கீழ்ப்படிந்து தேவ ஆவியினால் நடத்தப்படுகிற மனுஷனையே தேவன் மேலான பாதைக்குக் கொண்டு செல்வார். கீழ்ப்படியாதவனை தேவன் வழிநடத்த முடியாது. தேவன், உங்களை மேலான அழைப்பைக் கொடுத்துப் பயன்படுத்த வேண்டுமானால் கீழ்ப்படியுங்கள். 40 வருடங்களுக்குப் பிறகு இரு சகோதரர்களும் சந்திக்கிறார்கள். உணர்வினால் அல்ல. தேவ ஆவியினால் நடத்தப்பட்டனர். எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்களே தேவனுடையபுத்திரர். தேவன் நமது கரத்தைப் பிடித்து வழி நடத்த விட்டுக் கொடுக்க வேண்டும். உன்னோடு பேசுகிற தேவனுடைய வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படி.
4. தெரிந்து கொள்ளப்பட்டவர்:-
யாத்.28:1ஆம் வசனத்தில், “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும் படிக்கு, நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரராகியநாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக் கொள்வாயாக”. அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஆசாரிய ஊழியத்துக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர் ஆரோன். 1பேதுரு 2:9-ல் “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வர வழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்குத்தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்றார் பேதுரு அப்போஸ்தலன். நாம் தேவனுக்காக ஆசாரியக் கூட்டமாய் வாழ பிரித்தெடுக்கப்பட்டவர்கள் நாம் சுவிசேஷ ஊழியத்தை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும்.
5. ஆரோன் ஜனங்களைச் சுமந்தார்:-
யாத்.28:12 ஆம் வசனத்தில், “ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின் மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின் மேல் அவர்களை நினைக்கும் படியான கற்களாகவைக்கக்கடவாய்” என்ற வார்த்தையின்படி ஆரோன் ஜனங்களைச் சுமந்தார். அவர் தோள்களின் மேல் இஸ்ரவேல் புத்திரரின் குடும்பங்களையும், . உங்களுக்குக் குடும்ப பாரங்கள் இருந்தாலும், தோளின் மேல் மற்றவர்களின் பாரங்களைச் சுமக்க வேண்டும். நோவா, ஏனோக்கு, ஆரோனைப்போலத்தேவனோடுசஞ்சரிக்கிறவர்களாக, ஜனங்களுக்காகப் பரிந்து பேசி ஜெபிப்பவர்களாக இருக்க வேண்டும்.
6. இருதயத்தில் பதித்து ஜெபித்தார்:-
யாத்.28:29 ஆம் வசனத்தில், “ஆரோன் பரிசுத்தஸ் தலத்திற்குள் பிரவேசிக்கும் போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத்தன் இருதயத்தின் மேலிருக்கும் நியாயவிதிமார்ப் பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக் குறியாக எப்பொழுதும் தரித்துக் கொள்ளக்கடவன்” என்ற வார்த்தையின் படி ஆரோன் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தில் பதித்து ஜெபித்தார். இங்கிலாந்து தேசத்தில் ஒரு பரிசுத்தவான் தினமும் 4000 பேருக்காக ஜெபித்தார். ஆரோன் 12 கோத்திரத்தாருக்காகவும் மறக்காமல் ஜெபித்துவந்தார்.
7. ஆரோன் பரிசுத்த வானாகக்காணப்பட்டார்:-
சங்.106:16 ஆம் வசனத்தில் “பாளயத்தில் அவர்கள் மோசேயின் மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின் மேலும் பொறாமை கொண்டார்கள்” மேலும்யாத்.19:24ஆம் வசனத்தில், “கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்புநீயும்ஆரோனும்கூடிஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாத படிக்கு, எல்லையைக்கடந்துகர்த்தரிடத்தில்வராதிருக்கக்கடவர்கள்என்றார்”. சீனாய் மலையில் ஏறத்தகுதி பரிசுத்தம். பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் பிதாவைத் தரிசிக்க முடியாது.
8. ஆரோனின் கோல் மற்றவர்களின் கோல்களை விழுங்கிற்று:-
யாத்.7:12 ஆம் வசனத்தில், “அவர்கள் ஒவ்வொரு வனாகத்தன் தன் கோலைப் போட்ட போது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று” பில்லி சூனியம் இயேசுவின் நாமத்தால் கட்டப்படும். உன்கையில் உள்ள கோல் பிசாசின் தீய சக்திகளை விழுங்கும் கோல், ஜெயிக்கும் கோல், நீ தேவனுடைய பார்வையில் விசேஷித்தவன்.
ஆரோன் தேவனால் அழைக்கப்பட்டவன் “மேலும் ஆரோனைப்போல அழைக்கப்படாவிட்டால் இந்தக்கனமான ஊழியத்தை ஒருவரும் தானாய்ச் செய்யக்கூடாது” ஆரோன் எதினால் மற்றவர்களைவிட விசேஷமானவன் என்றுபார்த்தோம். நாமும் ஆரோனைப் போல விசேஷித்தவர்களாக, தேவனுடைய அழைப்பைப் பெற்று, தேவனுக்காக வைராக்கியமாய் வாழ அர்ப்பணிப்போம்! ஆரோனைப் போல, தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும், தேவனுடைய ஊழியர்களை ஜெபத்தால் தாங்குகிறவர்களாகவும், தேவனுடைய ஆவியால் நடத்தப்படுகிறவர்களாகவும், தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாய் அவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவர்களாகவும், ஜனங்களின் பெயர்களை இருதயத்தில் சுமந்து ஜெபிக்கிறவர்களாகவும், பரிசுத்தமும், நீதியும் உள்ளவர்களாகவும் காணப்படுவோம். ஆரோனின் கோல் மற்ற மந்திரவாதிகளின் கோல்களை விழுங்கியது போல உங்களுக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்களை தேவன் பட்சித்துப்போடுவார். ஜெயக் கிறிஸ்து உங்களோடு கூட இருந்து மகிமைப்படுவார்.




