கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரிய காரியங்களில் அதிக நாட்டத்துடனும் வாஞ்சையுடனும் காணப்பட வேண்டும். நமது மனது உலக காரியங்களில் பற்றுதலாக காணப்படக் கூடாது. நமது மனது மேலான காரியங்களின் மேலேயே பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மேலும் பவுல் அப்போஸ்தலன் கொலோசெயருக்கு எழுதும் நிருபத்தில் இவ்வாறு கூறுகிறார், “நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்த துண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலான வைகளைத் தேடுங்கள்” (கொலோ.3:2). நாம் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும். மேலும் 2தீமோ.2:4 வசனத்தில், “தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும் படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ளமாட்டான்” என்கிறார் பவுல்.
தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்கு ஏற்றவர்களாக வாழும்படி பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ளக்கூடாது. நலமான வேலைகளில் மாத்திரம் ஈடுபட வேண்டும் (கஞ்சா, சிகரெட், மதுபானங்கள் விற்பனை, புகையிலை, பாக்குகள்) போன்ற பாவக்காரியங்களில் சிக்கக்கூடாது. தேவனுடைய இராஜ்ஜியத்தைத் தேட நேரம் ஒதுக்க வேண்டும். பின்பு குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
நம்மை பாதிக்காத படி வாழ வேண்டும் என்ற எண்ணமே கிறிஸ்தவனுக்கு வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் தியாகம், பாடு, கஷ்டங்கள், உபத்திரவங்கள் உண்டு. மேலும் 2தீமோ.2:15 “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” என்கிறார் பவுல். கிறிஸ்துவுக்காகப்பாடுபட வேண்டும் என்ற சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேவன் இஸ்ரவேல் புத்திரர் மேல் பிரியமாயிருக்கவில்லை. 1கொரி.10:5 வசனத்தில், “அப்படியிருந்தும், அவர்களில் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. எகிப்தை விட்டுக் கானான் தேசத்துக்கு 20 வயதுக்கு மேற்பட்ட புருஷர்கள் மட்டும் 6 லட்சம் பேர் புறப்பட்டனர். தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை. பின்னோக்கியே பார்த்தனர். வனாந்திரத்தில் அவர்கள்கால்கள் காணப்பட்டாலும், அவர்கள் மனதுவிட்டு வந்த எகிப்து தேசத்திலேயே காணப்பட்டது. எகிப்தின் பழையபாவ வாழ்க்கையை விரும்பக்கூடாது.
லோத்தின் மனைவிதன் புருஷன், பிள்ளைகளுடன் சோதோமின் அழிவிலிருந்துதப்பி ஓட வேண்டியவள். ஆனால் முன்னோக்கி மலைக்கு ஓடாமல், பின்னிட்டுப் பார்த்ததால் லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆனாள்.
தேவன் ஏன் அவர்கள் மேல் பிரியமாயிருக்கவில்லை என்று பார்ப்போம்!
எண்.11:5,6வசனங்களில், “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக் காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.”
1. பின் நோக்கிப் பார்த்தல்: பழைய வாழ்க்கையைக் குறித்துப் பெருமை பாராட்டுவது பயங்கர பாவமாகும்.
2. முறுமுறுப்பு: கொடிய பாவம், குறை கூறுவது தவறு. துதி செய்தலே அவசியம். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது அவசியமாகும்.
3. கீழ்ப் படியாமை: வசனத்தின் படி நடவாமலிருப்பது பாவமாகும்.
4. மகிமையை விக்கிரகங்களுக்கு கொடுப்பது: “உங்களால் தான் நடந்தது” என்று மனிதனைப் பற்றி மேன்மை பாராட்டுவதும் பாவமாகும்.
தேவனின் திட்டம்:
இஸ்ரவேலர் கானானுக்குள் போக 2 வருஷத்தில் கானானுக்குள் பிரவேசிக்க தேவன் விரும்பினார். ஆனால் சில பாடங்களைக் கற்பிக்க விரும்பினார். 40 நாட்களில் பெலிஸ்தியர் தேசத்தின் வழியாக கானானுக்குள்போக முடியும். ஆனால் தேவன் 2 வருஷங்களில் நடத்த விரும்பினார். 10 கற்பனைகளைக் கொடுத்தார். பல பாடங்களைக் கற்பித்தார். எவ்வாறு தேவனை ஆராதிப்பது? என்றும் ஆசரிப்புக் கூடாரம் ஆராதனை முறையையும் கற்றுக் கொடுத்தார். இஸ்ரவேலர்தேவனைவிசுவாசியாமல்கீழ்ப்படியாததால் 38 வருஷங்கள் வனாந்தரத்தில் வாழ்ந்தார்கள். வனாந்தர வாழ்க்கை என்பது தோல்வியின் வாழ்க்கையாகும்.
இஸ்ரவேலர் ஏன்கானானுக்குள் பிரவேசிக்கவில்லை? இஸ்ரவேலர் கீழ்ப்படியவில்லை, முறுமுறுத்தார்கள். ஆனாலும் மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் நடத்தியது. தேவைகள் சந்திக்கப்பட்டது. கன்மலையைப் பிளந்தார். மன்னா கிடைத்தது. அன்றாடத் தேவைகள் சந்திக்கப்பட்டது. ஆனால் அலைந்து திரிவதிலிருந்து விடுதலை இல்லை. தேவன் அவர்கள் மேல் பிரியமாயிருக்கவில்லை.
எண்.1:51 வசனத்தில் “வாசஸ்தலம் புறப்படும் போது, லேவியர் அதை இறக்கி வைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும் போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக் கடவர்கள்;” என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலருக்கு ஆராதனைஸ் தலம் இருந்தது. ஆராதனைகள் பாடல்கள், பலி செலுத்துதல்இருந்தது. தேவன் அவர்களுக்கு பரிகாரியாக இருந்தார். வாக்குத்தத் தங்கள்கிடைத்தது. அற்புதங்கள்நடந்தது. ஆனால் தேவன் அவர்கள் மேல் பிரியமாக இல்லை. சங்கீதம் 105:37 வசனத்தில், “அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப் பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரவேலருக்கு ஜெயம் கிடைத்தது. ஆனாலும் தேவன் பிரியமாயிருக்கவில்லை. பரிசுத்தத்தை தேவன் எதிர் பார்க்கிறார். பரிசுத்த வாழ்க்கையே நம்மை தேவனிடம் நடத்துகிறது. பாவத்துடன் ஜீவிப்பதை தேவன் விரும்புவதில்லை.
எபி.3:17 வசனத்தில் “மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ் செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்து போயிற்றே” என்று எழுதப்பட்டுள்ளது. தேவன் பாவம் செய்தவர்களை நேசிக்கவில்லை. எனவே அவர்கள் வனாந்தரத்தில் செத்து மடிந்தார்கள். விசுவாசிகள் பரலோகம் செல்ல வேண்டுமானால் பாவத்தை வெறுத்து விட வேண்டும்.
வரங்களை அல்ல, அற்புத அடையாளங்களை அல்ல, தேவசித்தம் செய்பவர்களையே தேவன் விரும்புகிறார். மத்.7:21,22,23 வசனங்களில் பிதாவின் சித்தம் செய்யாதவர்கள் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்கிறார். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்பார்.
லூக்.2:24 ஆம் வசனத்தில் அவருடையதாய், தகப்பன்மார் “கர்த்தருடைய நியாயப் பிரமாணத்தில் சொல்லியிருக்கிற படி, ஒரு ஜோடு காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டு போனார்கள்”
இயேசு கஷ்டப்பட்ட சூழ்நிலையில் 30 ஆண்டுகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். மேலும் மாற்கு 6:3 வசனத்தில், “இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசேயூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா?” இதிலிருந்து இயேசு பெரிய குடும்பத்தில் வளர்ந்தார் என்பது தெரிகிறது.
விசுவாசிகள் தங்களுடைய சூழ்நிலையைக் குறித்து முறுமுறுக்காமல் எப்பொழுதும் ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். ஆபிரகாமுக்குப் பிள்ளையைத் தருவேன் என 75 வயதில் வாக்குத் தத்தம் கொடுத்து, அநேக பாடங்களைக் கற்றுக்கொடுத்து ஏற்ற வேளையிலே ஈசாக்கைக் கொடுத்தார்.
அன்புநண்பரே! பூமிக்குரிய ஆசீர்வாதங்களை அல்ல. மேலான பரலோகராஜ்யத்தையே தேடுங்கள், நாடுங்கள், ஆசீர்வாதத்தின் அடிப்படையிலோ, கிரியைகள், வரங்கள், தாலந்துகள், திறமைகள் அடிப்படையிலோ அல்ல – தேவன் விரும்புவது நமது கனிகளினால் நாம் அறியப்பட வேண்டும். பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்க முடியாது. உண்மை, மாயமற்ற அன்பு, சகோதர சிநேகம், சுயநல மற்றவாழ்க்கை வாழ்வதையே தேவன் விரும்புகிறார். நீதிமானுக்குப் பாடுகள், உபத்திரவம், கஷ்டம் உண்டு. அநேகபாடுகள் வழியாகத் தான் பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும். பாடுகள் இல்லாத செழுமையான உபதேசம், கள்ள உபதேசம், உலகப் பிரகாரமாக ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலர் தேவனைப் பிரியப்படுத்தவில்லை. உங்கள் வாழ்க்கை தேவனைப் பிரியப்படுத்துவதாக உள்ளதா?




