நரி ஏறும் மதிலல்ல பன்றி கொட்டகை

கடந்த மாதத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பிரபல மிஷனரி ஸ்தாபனத்தின் இயக்குநர் நமது அலுவலகத்தில் பணியாற்றும் தம்பி ஒருவரிடம், தனக்கு அதிகமான விசுவாசம் இருப்பதாகவும் அதினால், தனக்கு அதிகமாக பணம் சேகரிக்கக் கூடிய கிருபை இருப்பதாகவும், எனவே, அவர் இதைக்கொண்டு தன்னிடம் பணம் வசூலிக்க, பணியாளராகச் சேர்ந்து மாதம் ரூ.3,00,000/- வசூலித்துக்கொடுத்தால், ரூ.30,000/- சம்பளமாகக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், நாம் கட்டி வரும் “சிற்றாலயங்கள்” குறித்து மிகவும் வெட்கப்படுவதாகவும், ஏனெனில் அவை “பன்றி கொட்டகை” போன்று இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்கும்போது நமக்கு சற்று விசனமாக இருந்தாலும், இவர் நெகேமியாவை நிந்தித்த சன்பல்லாத்தும், தொபியாவும் மிகவும் நல்லவர்கள் என நமக்கு காட்டிவிட்டார். ஏனெனில் அவர்கள், நெகேமியா கட்டிய மதில் மீது “நரி ஏறும்” என்றார்கள். இவரோ, நாம் கட்டும் ஆலயத்தை “பன்றி வாழும்” எனக் கொச்சைப்படுத்துகிறார்.


எது எப்படியோ, காலம் பதில் சொல்லும். நாம் இதுவரைக் கட்டி முடித்த 350 சிற்றாலயங்களில், புதிய, இளம் விசுவாசிகள் கூடுகின்றனர். நாளுக்கு நாள் வளர்ந்து, முழு கிராமத்தையுமே அது ஆசீர்வதிக்கிறது. பல்வேறு ஜெப விண்ணப்பங்கள் கேட்கப்பட்டு வருகிறது. மெய்யாகவே இயேசு அங்கு பிரசன்னராகி, அநேகரைத் தமது மந்தையில் சேர்த்து வருகிறார். எனவே     சிற்றாலயப் பணிக்காக….     இலவசமாக இடம் கொடுத்தவரும்
    கட்டிடத்திற்கு பணம் கொடுத்தவரும்
    40,000 செலவில் கட்டியவரும்
    தொடர்ந்து ஜெபம் செய்தவரும்
    அப்பகுதியில் அருட்பணி ஆற்றியவரும்
    ஆலயத்தில் ஊழியம் செய்பவரும்
    சிற்றாலயத்தில் விண்ணப்பம் ஏறெடுப்பவரும்
பேறுபெற்றவர்களே! இவர்களால் ஒரு சமுதாயமே ஆசீர்வதிக்கப்படுகிறது. கிராமங்கள் மறுரூபமாகின்றன.


“தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” (1 கொரி.4:20)



Author

You May Also Like…

Share This