சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும்…

August 23, 2012

கடந்த மாதம், நான் என்னுடைய அலுவலக பணியினிமித்தம் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். அங்கே நானும் நான் பணிபுரியும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவரும் உணவருந்தச் சென்றிருந்தோம். அவர் ஒரு பெரிய தொழிற்சாலையின் உரிமையாளர். அவர் என்னிடம், தன்னுடைய சமூக சேவைகள் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். மேலும் அவர் என்னிடம், தானும் நமது “ஏலீம் மிஷனரி இயக்கத்திற்கு” உதவ விரும்புவதாகக் குறிப்பிட்டார். நான் அவரிடம், நாங்கள் பொதுவாக, “கிறிஸ்தவர்களிடம் மட்டுமே பணம் சேகரிக்கிறோம்.” மேலும் எங்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், திருச்சபைகளோடு இணைந்து செய்யப்படுவதால், திருச்சபைகளில் அங்கத்தினராக இல்லாதவர்கள், இதில் பங்களிக்க இயலாது எனத் தெளிவாக விளக்கினேன்.


இதைக் கேட்ட அவர் மிக்க ஆச்சரியத்துடன் “ஏன் இப்படிப்பட்ட சட்டதிட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். நான் அவரிடம், இதுவே தக்கத் தருணம் என எண்ணி…
…சார், கிறிஸ்தவத்தில் இரண்டு முக்கிய நம்பிக்கைகள் உண்டு. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். ஏனென்றால் “இயேசு கிறிஸ்து” உலகத்தையே உண்டாக்கிய சர்வ வல்ல ஆண்டவர். எனவே அவர் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவர், எனவே இந்த நம்பிக்கைகள் உங்களுக்கும் தேவை…
முதலாவது நம்பிக்கை: இயேசு தன்னிடம் வருகிற எந்த பாவியையும் புறக்கணியாமல், அவர் கல்வாரி சிலுவையில் நமக்காக சிந்திய இரத்தத்தால், நம்முடைய பாவங்களைக் கழுவி, நம்மை சுத்திகரிக்கிறார். பரிசுத்த பிள்ளையாக மாற்றுகிறார். அவர் எல்லாருடைய இருதயத்தின் வாசலிலும் நின்று, தட்டிக்கொண்டே இருக்கிறார். யார் அவருக்குத் தங்கள் இருதயத்தைத் திறந்து, அவர் இலவசமாய்க் கொடுக்கும் இரட்சிப்பை (பாவ மன்னிப்பை) பெற்றுக்கொள்கிறார்களோ? அவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குச் சென்று, முடிவில்லாத, இன்ப பெருவாழ்வைப் பெற்று வாழ முடியும் என்பதை விவரித்துச் சொன்னேன். மேலும்…
இரண்டாவது நம்பிக்கையாக, நாம் பரலோகத்திற்குச் செல்கையில், நாம் இந்த உலகத்தில் இருக்கும்போது, ஆண்டவரின் விருப்பத்தின்படி செய்த, எல்லா பிரயாசங்களின் “பலனையும்” அவர் நமக்குக் கொடுப்பார். எனவே ஆண்டவர் இலவசமாக அளிக்கும் “பாவ மன்னிப்பை” பெறுவது மட்டுமல்ல, ஆண்டவரின் விருப்பத்தின்படி நடந்து, “பசியாய் இருப்போருக்கு போஜனம் கொடுத்து”, “தாகமுள்ளோரின் தாகத்தைத் தீர்த்து”, “அந்நியர்களைச் சேர்த்துக்கொண்டு”, “வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுத்து”, வியாதியாயிருந்தவர்களை விசாரித்து”, “காவலிலிருக்கிறவர்களைப் பார்த்து”, “ஏழை எளியவர்களுக்கு இரங்கியவர்களைப் பார்த்து” ஆண்டவர், அவர்களை மெச்சிக்கொண்டு, அவர்கள் ஏழைகளுக்குச் செய்த உதவி, தனக்கே செய்ததாக, நியாயத்தீர்ப்பின் நாளிலே கூறுவார். மேலும் அவர்கள் செய்த, செயல்களின் பலன்களுக்குத் தக்க பலனையும், கண்டிப்பாக அளிப்பார் எனக் கூறினேன்.


அவரும் இவைகளையெல்லாம் இரண்டு மணி நேரம் ஆர்வமுடன் கேட்டுவிட்டு “எனக்கு ஐம்பது வயதாகிறது” இதுவரை எவரும் எனக்கு “சொர்க்கத்திற்குச் செல்வது இவ்வளவு எளிது” என்பதைக் கூறியதே இல்லை என மிகவும் கவலையுடன் கூறினார். நான் அவரிடம் “பாவ அறிக்கை” செய்து, இயேசுவின் பிள்ளையாக மாறி, இவ்வாழ்க்கையின் முடிவிலே “முடிவில்லா பெருவாழ்வையும், நம்முடைய பிரயாசங்களின் பலனையும்,” கண்டு சந்தோஷமாக வாழ உற்சாகப்படுத்தினேன்.
மதுரைப் பட்டிணத்தில் பிறந்து, பெரு வணிகராக இருக்கும், இவருக்கே இவரது வாழ்நாளின் பெரும் பகுதி வரை “இரட்சிப்பைப் பற்றிய உண்மை” அறிவிக்கப்படவில்லை. கேள்விப்பட்ட போது அவரது ஆர்வம் குன்றவுமில்லை. அறிவித்த எனக்கு நன்றி சொல்ல அவர் தவறவும் இல்லை. இவரிடம் நான், ஏன் முன்னமே, “இரட்சிப்பைக் குறித்து” அறிவிக்க மறந்தோம்? என வருத்தப்பட்டேன்.


இதைத்தான் பவுலடிகளார் குறிப்பிடும் போது “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு;…” (2தீமோ.4:2)



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This