இடுக்கமான வாசல்

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கி றவர்கள் அநேகர்” (மத்.7:13)
இயேசுவைப் பின்பற்றும் வழி இடுக்கமான வழி. அது நம்மை பரிசுத்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வழி. அது நம்மை மனந்திரும்பச் செய்யும் வழி. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுத்த வர்கள் தான் பரலோகம் வர முடியும் அல்லது வருகையில் பங்கடைய முடியும். ஆகவே நாம் பரிசுத்தமடைய இடுக்கமான வாசல் வழி செல்வோம்.


“ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்.7:14)
ஆம் பிரியமானவர்களே, ஜீவனுக்குப் போகும் வாசல் இடுக்கமானது. வழி நெருக்கமானது. எப்படி வேண்டுமானாலும் வாழ முடியாது. அனுதினமும் இயேசு வைப் பின்பற்றி, இடுக்கமான பாதையில் செல்ல வேண்டும். ஆனால் விசாலமான வழியில் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஏமாந்து போக வேண்டாம். பரிசுத்த பாதையைக் கண்டுபிடிக்காமல், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்று பொரு ளாசையில் உங்களை பழக்கி விசாலமான வழிக்கு அழைத்துச் செல்வதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஆகவே ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசல் வழி செல்வோம். தேவ அன்பிலும், பரிசுத்தத்திலும் வளருவோம். அப்பொழுது உங்கள் வழி ஜீவனுக்குப் போகிற வழியாயிருக்கும். இன்றே நாம் இயேசுவினிடத்தில் மனந்திரும்பி, ஜீவனுக்குப் போகும் வழியைக் காண்பியும், எனக் கேட்போம். இயேசு அந்த வழியைக் காண்பிப்பார். நீங்கள் ஜீவனுக்குப் போகும் வழியில் நடந்தால், நம் ஜீவனாகிய இயேசு வெளிப்படும்போது, நாமும் மகிமையிலே, அவரோடு வெளிப்படுவோம்.


பிதாவின் சித்தம்
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. (மத்.7:21)
நாம் பிதாவின் சித்தத்தைச் செய்யவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதே உணவாகக் கொண்டிருந்தார். எஜமான் சொல்வதைக் செய்பவன்தான் உண்மையான வேலையாள். எஜமான் சொல்லாமல் தன் இஷ்டப்படி செய்பவன், எஜமானுக்கு தலைவலியை உண்டாக்கு பவன்; முடிவிலே அவன் வேலையிலிருந்து தள்ளப்படுவான். இதுதான் உலக மரபு அல்லது வழக்கம். அதுபோல, எப்படி வேண்டுமானாலும் ஊழியம் செய்வது எஜமானுக்குப் பிரியமானது அல்ல. நமது கர்த்தர் இரக்கமுள்ளவர், நாம் மனந்திரும்பி எஜமானின் சித்தத்தைச் செய்வோம் எனக் காத்திருக்கிறார்.

மனந்திரும்பாத பட்சத்தில் கைவிடப்பட்ட சூழ்நிலை உருவாகும். தேவனுடைய பாதத்தில் காத்திருந்து, நமது சுய சித்தத்தை நொறுக்கி, தேவ சித்தத்தைச் செய்ய அர்ப்பணித்து ஊழியம் செய்வதே சிறந்தது. அப்படிப்பட்ட ஊழியனே அங்கீகரிக்கப்படுவான். ஆகவே, நம்மைத் தாழ்த்தி தேவனுடைய சித்தத்தைச் செய்ய அர்ப்பணிப்போம். தன்னை அனுப்பினவரின் சித்தத்தைச் செய்கிறவன், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுபவன் உண்மை ஊழியக்காரன். உண்மையும் உத்தமமுமாய் பணி செய்து, எஜமான் இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் நிற்கப் பிரயாசப்படுவோம். அதுவே நமக்குப் பாக்கியம். இயேசு கிறிஸ்து வரும்போது, உண்மையும், உத்தமமுமான ஊழியக் காரனே எனக் கூறி நம்மை பரவசப்படுத்துவார். எத்தனை ஆனந்தம்! எனவே, பிதாவின் சித்தத்தைச் செய்ய நாடுவோம். கர்த்தருடைய வருகையிலே பங்கடைவோம்.


மனந்திரும்புங்கள்
“நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்” (வெளி.2:16)
தேவனுடைய சபையில் உள்ள விசுவாசிகளுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் எச்சரிப்புதான் இது. தேவன் சுத்தம்பண்ண விரும்புகிறார். இயேசு கிறிஸ்து திராட்சை செடி. நாம் கொடிகள். பிதா திராட்சை தோட்டக்காரர். கனி கொடாத கொடி எதுவோ அதை அறுத்துப் போடுகிறார். சபையிலே துணிகரமாய்ப் பாவம் செய்து, தேவன் எச்சரித்தும் மனந்திரும்பாதவர்களை நியாயம் விசாரிப்பார். அவர்களோடு வாயின் பட்டயத்தால் யுத்தம் பண்ணுவார். அதைக் கண்டு எச்சரிப்படைந்து மனந்திரும்பும் பரிசுத்தவான்கள் பாக்கியவான்கள். தேவனை, தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ண வேண்டாம். இன்றே மனந்திரும்புவோம். தேவனுடைய வருகையில் பங்கடைய பரிசுத்தமாக்கிக் கொள்வோம்.


“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயி ருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” (வெளி.22:11)
பரிசுத்தமாய்க் காத்துக்கொள்கிறவர்கள் பாக்கியவான்கள். மனந்திரும்பி வருகைக்கு ஆயத்தப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.


நீதியின் கிரீடம்
“இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” (2தீமோ.4:8)


இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது, விசுவாசத்தைக் காத்துக் கொண்ட பரிசுத்தவான்களுக்கு நீதியின் கிரீடத்தைத் தருவார். அதுமட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தருவார். இயேசு கிறிஸ்துவின் வருகையை நேசிக்கும் யாவருக்கும் அந்த நீதியின் கிரீடம் உண்டு. யூதா தமது நிருபத்திலே விசுவாசத்திற்காகப் போராடி, பரிசுத்தமாய் காத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார். தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசம் ஒரு பொக்கிஷம்; ஒரு ஈவு; அது பரிசுத்த மானது. அந்த விசுவாசத்தைக் காத்துக்கொண்டு, கர்த்தருடைய வருகைக்குக் காத்தி ருக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் வருகையிலே விசுவாசத்தின் பலனாகிய நீதியின் கிரீடத்தைப் பெறுவார்கள். இதற்காகவே அழைத்திருக்கிறார். எனவே இயேசு கிறிஸ்து நம்மை அழைத்த அழைப்புக்கு பாத்திரமாய் நடந்துகொள்வோம்.


“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவ னவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி.22:12)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This