எது தேவனுடைய ஆவி என்று சோதித்தறியுங்கள்

Written by Pr Thomas Walker

October 22, 2011

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஆவிக்குரிய சபைகளிலும், கிறிஸ்தவ உலகிலும் இரண்டுவிதமான மக்கள் உள்ளனர். ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்கள், மாம்ச சிந்தையுள்ளவர்கள். மாம்ச சிந்தை மரணம். மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். மாம்சத்தின் ஆவி உடையவர்கள் மாம்சத்துக்குரியவைகளையே சிந்திப்பார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சத்தின் ஆவி தேவனுடைய வசனத்துக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படிய கூடாமலும் இருக்கும், தேவனுடைய ஆவியாகிய புத்திர சுவிகாரத்தின் ஆவி நம்மில் வாசம் செய்தால் – மாம்சத்தின் ஆவி நம்மை மேற்கொள்ளாது. பவுல் அப்போஸ்தலர் (ரோம.8:15) வசனத்தில், திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் அப்பாபிதாவே! என்று கூப்பிட பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள் என்கிறார். இந்த வசனத்தில் அடிமைத்தனத்தின் ஆவி, புத்திர சுவிகாரத்தின் ஆவி என்று கூறுகிறார்.

அடிமைத்தனத்தின் ஆவி, மனிதனை பாவத்துக்கும், சாத்தானுக்கும் அடிமைப்படுத்தும். மேலும் (கலா.4:6) வசனத்தில், நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் என்கிறார். மேலும் (எபே.1:6) வசனத்தில், நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப் புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார் என்கிறார்.
இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் பிதாவை தந்தை, அப்பா என்று கூப்பிடும் உரிமையைப் பெற்றுள்ளோம். புத்திர சுவிகாரத்தின் ஆவியை தேவன் நமக்கு கொடுத்துள்ளார், நாம் தேவனுக்கு அடிமைகளாக மாறினால் – பாவத்துக்கு அடிமைகள் அல்ல நாம் தேவனுக்கு அடிமையாக ஒப்புக்கொடுத்திருந்தாலும் நாம் தேவனுடைய பிள்ளைகளே, பவுல் எபிரெயர்கள் ரோமருக்கு அடிமைகளாக இருந்ததால் இதை விவரமாக எழுதுகிறார். அடிமை எஜமானிடம் அதிக உரிமை காட்ட முடியாது. கெஞ்ச வேண்டும், ஆனால் பிள்ளைகளுக்கு உரிமையும் சுதந்தரமும் உண்டு. ஒரு கிறிஸ்தவன் இரட்சிக்கப்பட்ட பின்பு ஆவிக்குரிய உலகில் வந்து விடுகிறான். உலகத்தில் அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல் அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1யோவான்.4:1ல் நீங்கள் சோதிக்காவிட்டால் ஏமாந்து போவீர்கள், மேலும் அப்போஸ்தலனாகிய யோவான் 1யோவான் 4:6 வசனத்தில் நாங்கள் தேவனால் உண்டானவர்கள் தேவனை அறிந்தவன் எங்களுக்கு செவி கொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை. இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிகிறோம். உங்கள் சிந்தை எப்பொழுதும் ஆண்டவரைப் பற்றியே இருக்க வேண்டும்.

ஆவிக்குரிய சபைகளின் ஆராதனைகளில் பழைய ஏற்பாடு, மற்றும் புதிய ஏற்பாட்டில் நாம் காணாத பரிசுத்தவான்கள் வருவார்கள், ஆவிக்குரிய சிந்தை இருந்தால் இதை உணரலாம். 2இராஜா.4:9ல் இதோ நம்மிடத்தில் எப்பொழுதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன் என்று சூனேமியாள் தன் புருஷனிடம் கூறினாள். பின்னர் தன்னுடைய மாடியில் ஒரு சிறிய அறை வீட்டைக் கட்டி அதில் அவனுக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்து விளக்கையும் வைத்து அவர் வரும்போது எல்லாம் தங்க வைத்து உபசரித்தாள், தரிசு நிலத்தில் விதை, விதைத்தால் பலன் பெற முடியாது. ஆனால் தேவ ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஊழியர்களுக்குக் கொடுத்தால் நிச்சயம் பலன் உண்டு. கள்ள போதகர்கள் வஞ்சக ஆவி உள்ளவர்களுக்குக் கொடுப்பது தரிசு நிலத்தில் விதைப்பதற்கு சமமாகும். வேத வசனங்களிலிருந்து எது தேவனுடைய ஆவி? எது மாம்சத்தின் ஆவி என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

 முதலாவதாகவஞ்சிக்கிற ஆவிகள்
வஞ்சிக்கின்ற ஆவிகள் மனிதர்களை தந்திரமாக வஞ்சிக்கும், நன்கு உடை அணிந்து கவர்ச்சியாக இருக்கும். தேவன் வேதத்தில் கூறிய வார்த்தைகளை மாற்றிவிடும். ஆதி.2:17ல் ஆனாலும் நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று தேவன் கட்டளையிட்டார். ஆனால் (அதி.3:3,4,5) வசனங்களில், சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி நீங்கள் சாகவே சாவதில்லை என்றது. இயேசு சங்கத்தின் கொள்கைகளில் இரண்டு (ளுடிஉநைவல டிக துநளரள) 1. சபையின் நன்மைக்குப் பொய் பேசலாம், 2. நன்மைக்காக பொய் பேசலாம், இது ஒரு வஞ்சிக்கிற ஆவியின் தந்திரமான வேலை. பொய் யவவநனேயnஉந வகுப்பில் மாணவர்களுக்குப் போடுவது தவறு. சத்தியத்துக்காக ஜீவனைக் கொடு. 2தெச.2:11,12 வசனத்தில் “ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.” கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்துக்காக திரளான மக்கள் இரத்த சாட்சிகளாக மரித்தனர். தாமஸ் கிராண்ட் (கூhடிஅயள ழுசயவே) விசுவாசத்துக்காக எரிக்கப்பட்டு மரித்தார்.

 இரண்டாவதாகபொய்யின் ஆவி
அப்.5:3 வசனத்தில் “பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?” என்றார். அனனியா, சப்பீராள் வாழ்க்கையில் வஞ்சகமும், பொய்யும் இணைந்து வந்து செயல்பட்டு அழித்தது. மேலும் 2நாளா.18:10,21 வசனங்களில் சிதேக்கியாவும், சகல கள்ள தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள். மிகாயா மட்டும் உண்மையை சொன்னபோதும், அதை நம்பவில்லை யோசபாத் இன்ன ஆவி என்று தெரிந்தும் விலகவில்லை. கர்த்தரே இப்படி ஒப்புக்கொடுக்கிறார்.

 மூன்றாவதுஎரிச்சலின் ஆவி
எண்.5:14 வசனத்தில், எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும்… அவன் ஆசாரியனிடம் தேவ சமூகத்துக்கு சென்று உடனே பலி செலுத்தி, அந்த எரிச்சலின் ஆவியை அணைக்கவேண்டும், இல்லாவிட்டால் குடும்பம் பாதிக்கப்படும். சந்தேகம், பொறாமை தான் இதற்கு காரணம். மனைவி உண்மையுள்ளவளா? என்று ஆசாரியன் நியாயப்பிரமாணத்தின்படி செய்யக்கடவன். தவறு செய்தவள் தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று ஆசாரியன் சொல்ல வேண்டும் (எண்.5:30,31) எரிச்சலின் ஆவியை ஏன் என்று சோதித்துப் பார்த்து பரிகாரம் செய்ய வேண்டும். (யாக்.1:4) “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”

 நான்காவதுஅந்தி கிறிஸ்துவின் ஆவி
1யோவான் 4:3 வசனத்தில், “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.” அந்திக் கிறிஸ்துவின் ஆவி இயேசுவை தேவக் குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாது.

 ஐந்தாவதாகபயமுள்ள ஆவி
2தீமோ.1:7 வசனத்தில், “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” அநேக விசுவாசிகள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறார்கள். பயம் வரும்போது நமது காரியங்களை ஸ்தோத்திரத்தோடு தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். நம்முடைய ஜீவன் கிறிஸ்துவின் ஜீவனுக்குள் மறைந்திருக்கிறது. நான் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் என்று தைரியமாக இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியைப் பெற்று பரிசுத்தமாக வாழும் தேவனுடைய பிள்ளைகளுக்குள் தேவன் வாசம்பண்ணுகிறார். தேவன் உங்களுடன் இருப்பதால் பயம் தேவையில்லை. உன் தேவன் உனக்குள் தங்கியிருக்கிறாரா? என்று ஆராய்ந்து பார்.

 ஆறாவதாகவேசித்தன ஆவி
வேசித்தன ஆவியில் இரண்டு வகை உண்டு.
1. மாம்சத்துக்குரியது (ஞாலளiஉயட)
2. ஆவிக்குரியது (ளுயீசைவைரயட)
ஓசியா 4:11,12 வசனத்தில் “வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்” மேலும் ஓசி.5:4 வசனத்தில் “அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்”
ஆவிக்குரிய நிலையில் மனிதனையே நம்புவது, சார்ந்திருப்பது வேசித்தனம். கர்த்தரை மட்டும் சார்ந்து வாழவேண்டும். மனிதனை சார்ந்து வாழ்வது விக்கிரக ஆராதனைக்கு சமம். உலக ஆசை, மற்றும் உலகத்தின் மீதுள்ள பற்றும் வேசித்தன ஆவிக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. யாக்.4:4ல் விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா?

 ஏழாவதாகபொல்லாத ஆவி
1சாமு.16:14 வசனத்தில், “கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது” இந்த பொல்லாத ஆவி தாறுமாறான காரியத்தை செய்ய வைக்கும். தேவனுடைய மனுஷனான சாமுவேலை விட்டுப் பிரிந்ததும் பொல்லாத ஆவி அவனுக்குள் புகுந்தது, ஆவிக்குரிய தகப்பன், தாயை விட்டுவிடாதே. உனக்காக பரிந்துபேசி ஜெபிக்கும், ஆவிக்குரிய போஜனம் அளிக்கும் சபை ஊழியக்காரனை விட்டு விலகாதே. பொல்லாத ஆவி உன்னை மேற்கொண்டு உன் வாழ்க்கையை வீணாக்கிவிடும். சவுல் குறிசொல்லும் பெண்ணிடம் போனான். உலக காரியங்களுக்கு உன் இருதயத்தில் இடம் கொடாதே, தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதே, வாழ்க்கையை சாத்தான் மோசம் போக்கி விடுவான்.


அன்பு நண்பரே! தேவன் நமக்கு கொடுத்தது பலமும், தெளிந்த புத்தியுள்ள புத்திர சுவிகாரத்தின் ஆவி, அவரின் சுவிகாரபுத்திரனாக வாழ்ந்து அப்பா, பிதாவே என்று அழைக்கும் பாக்கியத்தை தேவன் பரிசுத்தாவியின் மூலமாய் கொடுத்துள்ளார். தேவனுடைய ஆவியானவர் நம்மில் எப்பொழுதும் வாசம் செய்தால் மாம்சத்தின் ஆவி, வஞ்சக ஆவி, பொய்யின் ஆவி, வேசித்தன ஆவி, பயமுள்ள ஆவி, வஞ்சிக்கிற ஆவி போன்ற சாத்தானின் ஆவிகள் நம்மை மேற்கொள்ளாது. நீங்கள் தேவ ஆவியானவரால் எப்பொழுதும் நடத்தப்பட்டு, மாம்சத்தின் கிரியைகளை அழித்தால் ஜெயம் பெறலாம். பரலோக சுதந்தரத்தைப் பெறலாம். ஆமென்!!





Author

You May Also Like…

Share This