கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க மிகவும் பிரியமுள்ளவராயிருக்கிறார். சாதாரண நிலையில் உள்ளவர்களை தாம் தெரிந்தெடுத்து அசாதாரணமான நிலைக்கு அவர்களைக் கொண்டுவந்து உயர்த்தி வைக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகள் மூலம் உலகம் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். தேவன் நம்மை “நீங்கள் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்றும், இந்த உலகத் திற்கு ஒளியாக இருக்கிறீர்கள் என்றும் கூறுகிறார். தேவன் நம்மை ஆசீர்வதிப்பதின் நோக்கம் நம் வாயிலாக அநேகருக்கு ஆசீர்வாதம் அளிக்கவும் நம்மை ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக பயன்படுத்தவும் விரும்புவதே. தேவப் பிள்ளைகளின் ஜெபத்தால் அந்தப் பகுதியில் உள்ள அந்தகாரம் நீங்குகிறது. மரண இருளில் இருக்கும் ஜனங்கள் விடுவிக்கப்படுகிறார்கள். தேவனுடைய பிள்ளைகள் இல்லாவிட்டால் அந்தகார பிசாசு பெரிய இருளை உண்டாக்கிவிடுவான்.
தேவன் தம்முடைய பிள்ளைகளை கண்மணியைப்போல் காத்து வழிநடத்து கிறார். எனவே யாரும் நம்மைச் சபிக்க முடியாது. நாம் சபிக்கப்பட்டுப் போவதில்லை. அவரது ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. இஸ்ரவேலர் எகிப்தில் கசந்த வாழ்க்கையை அனுபவித்தனர். கண்ணீர், வேதனை நிறைந்த அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். தேவன் அவர்கள் கூக்குரலை கேட்டு மனமிரங்கினார்.
தேவன் இஸ்ரவேலரை பரிசுத்தத்திற்கு நேராக வழிநடத்தி அவர்களை ஆசீர்வதிக்க பிரியம் கொண்டார். எண்.24:1ஆம் வசனத்தில், “இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” என்று பிலேயாம் கண்டான். தேவ சந்ததி ஆசீர்வதிக்கப்படும், மற்ற சந்ததி அறுப்புண்டு போகும். தம்முடைய ஜனத்தை சபிக்க பிலேயாமுக்கு தேவன் இடம் கொடுக்கவில்லை. மாறாக இராஜாக்கள், தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள், பிரபுக்கள் தோன்றும்படி செய்தார்.
தேவன் தம்முடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்க எப்படிப்பட்ட பரிசுத்த பாதையில் நடத்த விரும்புகிறார் என்று ஆராய்ந்து பார்ப்போம்:
முதலாவதாக – இஸ்ரவேலை ஆயத்தப்படுத்த ஒரு ஊழியக்காரனை அனுப்புகிறார்:
யாத்.3:1-10 வசனங்களில், “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலி ருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்” மோசே பல பாடுகள் மத்தியில் பார்வோனிடம் சென்று 10 வாதைகள் மூலம் ஓங்கிய புயத்தினாலும், பலத்த கரத்தினாலும் இஸ்ர வேலரை எகிப்தைவிட்டு கொண்டுவந்தான். மக்கள் பல முறை அவனை நம்பாமல் எதிர்த்தனர், முறுமுறுத்தனர். அற்புதங்கள் செய்து தமது வல்லமையை வெளிப்படுத்தி அவர்களை நம்ப வைத்து வழிநடத்தினார். இன்றுகூட ஊழியக்காரர் மூலம் அற்புதம் செய்து பாவ வாழ்க்கை யைவிட்டு ஜனங்களை வேறுபடுத்துகிறார்.
இரண்டாவதாக – இரட்சிப்புக்காக பஸ்காவை நியமித்தார்:
யாத்.12:1-26 வசனங்களில், இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி, அவர் எகிப்தி யரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப் பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் பிற மக்க ளுக்குச் சொல்ல வேண்டும். இஸ்ரவேலர் பஸ்கா பலியைச் செலுத்தி பஸ்கா ஆசரித்த பின்புதான் சாபத்தைவிட்டு வெளியேறினார்கள். இரத்தம் பூசுதலாகிய பண்டிகையை ஆசரி. சாபம் விலகும். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொரு மனுஷனும் சாபத்திலிருந்தும், பாவத்திலிருந்தும், விடுதலையாக்கப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் நம்மை நீக்கி மீட்கிறது. ஆசீர்வதிக்கப்பட வேண்டுமானால் பாவ மன்னிப்பை பெற வேண்டும்.
மூன்றாவதாக – இஸ்ரவேலர் செங்கடலின் வழியாக நடத்தப்பட்டனர்:
ஞானஸ்நானம் தேவை, 1கொரி.10:1,2ஆம் வசனங்களில், “நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்” தேவனுடைய பிள்ளைகள் பாவங்கள் போக கழுவப்பட ஞானஸ்நானம் பெற வேண்டும். ஞானஸ்நானம் மூலம் தேவனோடு உடன்படிக்கை செய்கிறோம். ஆசீர்வாதத்துக்குச் சுதந்திரராக மாறுகிறோம்.
தேவனுடைய வார்த்தையில் ஞானஸ்நானத்துக்கும், கர்த்தருடைய பந்திக்கும் மிகவும் முக்கியத்துவம் உள்ளது. பஸ்காவை ஆசரிக்காதவன் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போவான். எனவே ராஜாக்களும், பிரபுக்களும், மதத் தலைவர்களும், போப்புகளும் இதை ஆசரிக்கின்றனர். ஆனால் (ழுநநேசயட றுடைடயைஅ க்ஷடிடிவா) ஜெனரல் வில்லியம் பூத் தன் இஷ்டம்போல் கொள்கைகளை மாற்றினார். தனது இரட்சணிய சேனை சபையில் ஞானஸ்நானம், திருவிருந்து பந்தியைப் புறக்கணித்தார். நாம் தேவனுடைய வார்த்தையை மாற்றக்கூடாது.
நான்காவதாக – தேவனுடைய சட்டத்துக்கு கீழ்ப்படிய வேண்டும்:
ஓசியா 8:12ஆம் வசனத்தில், “என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” மேலும் சங்.1:2ஆம் வசனத்தில், “கர்த் தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” தேவன் சீனாய் மலையில் இஸ்ரவேல் மக்களுக்கு மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். தேவன் தம் விரலி னாலேயே கற்பலகையில் எழுதினார். வேதத்தின் பிரமா ணத்துக்கு கீழ்ப்படியும் போது ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
ஐந்தாவது – உடன்படிக்கையின் ஜனமாக வேண்டும்:
எபி.9:19,20ஆம் வசனங்களில், “…மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள் ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயி ரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்” இரத்தத்தினால் கழுவப்படும்போது தேவனோடு உடன்படிக்கை செய்கிறோம். றுந யசந ழளை ஞநடியீடந டிக ஊடிஎநயேவே (உடன்படிக்கையின் மக்கள்).
ஆறாவதாக – தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிந்து புறப்பட்டு போங்கள்:
எண்.13:32ஆம் வசனத்தில், “நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; …என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்” விசுவாசம் இல்லை. தேவன் கானானுக்குப் புறப்பட்டுப் போகச் சொன்னார். போக மாட்டோம் பயம் என்றார்கள். தேவனுக்குக் கீழ்ப்படி, ஆலோசனை சொல்லாதே, 2 வருடங்களுக்குள் போக வேண்டியது, ஆனால் 40 வருடங்கள் ஆயிற்று. தேவ சத்தத்தைக் கேள், விசுவாசத்தோடு முன்னேறு. உலக சத்தத்தைக் கேளாதே. எண்.14:32ல் கீழ்ப்படியாதவர்களின் பிணம் எல்லாம் விழும்வரை 38 ஆண்டுகள் ஆயின. எண்.14:31ஆம் வசனத்தில், “கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும்” என்றார். தேவனுடைய கட்டளைகளுக்கு முறுமுறுக்காமல் கீழ்ப்படிந்து முன்னேறினால் ஆசீர்வதிக்கப்பட முடியும்.
ஏழாவதாக – சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்:
ஏனோக்கு பரிசுத்தவான். 365 வருடங்கள் உயிர் வாழ்ந்தான். 300 வருடங்கள் தேவனோடு சஞ்சரித்தான். தேவ அன்பினால் நிரப்பப்பட்டு வாழ்ந்தார். வர வர தேவ அன்பு நம்மில் பெருக வேண்டும். வெண் வஸ்திரம் அசுசிப்படாமல் பாதுகாக்க வேண்டும். வருகையை தினமும் எதிர்பார்த்து வாழவேண்டும். எபி.11:5ஆம் வசனத்தில், “தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத் துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்”
அன்பு நண்பரே! தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்று சாட்சியாக வாழ மனந்திரும்புங்கள். ஞானஸ்நானம் பெற்று தேவனோடு உள்ள உடன்படிக்கையை காத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த உடன்படிக்கையை காத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், வல்லமையையும் பெற்று ஆவியில் அனலாயிருங்கள். தேவனுடைய வசனத்தை காத்து நடவுங்கள். தேவனுடைய ஆலோசனைக்கு கீழ்ப்படிந்து, புறப்பட்டுச் செல்லுங்கள். சுவிசேஷ ஊழியம் செய்யுங்கள். சாட்சியாக, பரிசுத்தமாக வாழுங்கள். இஸ்ரவேலை ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
இயேசு கிறிஸ்துவின் வருகையிவே நியாயத்தீர்ப்பு அன்றியும் மனுஷ குமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த...