அவர் நாமம் அதிசயம் அவர் அதிசயங்களைச் செய்கிறவர்

Written by Pr Thomas Walker

November 21, 2007

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனிடத்தில் காணப்படும் அற்புதமான குணங்களில் ஒன்று அவர் அதிசயமானவர். ஆராய்ந்து முடியாத எண்ணி முடியாத அதிசயங்களை தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் செய்து அவர் நாமத்தை மகிமைப்படுத்துகிறார். தமது பிள்ளைகளின் வாழ்வில் ஏற்படும் நெருக்கடியோ, சோதனையோ, பணக்கஷ்டமோ, வியாதியோ, மனக்கஷ்டமோ, எந்த தேவையானாலும் தேவன் சரியானக் குறித்த நேரத்தில் அந்த காரியத்தை தீர்த்து வைக்கும்படி நம் வாழ்வில் குறுக்கிட்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். அவர் யோசனையில் பெரியவர். செயல்களில் மகத்துவமானவர். இன்றைய உலகம் பணத்தை நாடி ஓடும்போது தேவன் தம்மைச் சார்ந்து வாழும் தம்முடைய மக்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று நிரூபித்துக் காட்ட விரும்புகிறார். அவரைப் பற்றி உத்தம இருதயத்தோடு வாழ்ந்தால் தமது வல்லமையின்படி பெரிய அதிசயங்களைச் செய்வார்.


மனோவா கர்த்தருடைய தூதனிடம் “நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்” (நியா.13:17,18). மேலும் ஏசாயா தீர்க்கதரிசி எவ்வாறு கூறுகிறார் என்றால், ஏசா.9:6 வசனத்தில் “அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்”. தேவன் தமது ஜனங்களான இஸ்ரவேல் புத்திரரைப் பற்றி மோசேயிடம் கூறுகிறார். “இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்” யாத்.34:10. மேலும் மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடினபோது, “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11) என்று பாடினார்கள்.


ஆம், பிரியமானவர்களே! தாவீது அரசன் கூட தமது சங்கீதங்களில் “ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்” (சங்.136:4) என்றும் “உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” (சங்.40:5) என்று வியந்து கூறுகிறார். எரே.32:17,27 வசனங்களில் “…உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” என்றும் “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என்கிறார். தேவன் நம் வாழ்வில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து மகிமைப்பட விரும்புகிறார்.


தேவனுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தேவன் அதிசயங்களை ஏன் செய்ய முடியவில்லை. ஏன் அதிசயங்கள் நடக்கவில்லை? என்பதை நாம் இன்று ஆராய்வோம்?

முதலாவதாக
சங்.78:32ஆம் வசனத்தில் “…அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்” இஸ்ரவேலருக்கு விசுவாசம் இல்லை. தேவனை நம்பவில்லை. ரோம.4:18 வசனத்தில் ஆபிரகாமைப் பற்றி பவுல் “…தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்”. ஆபிரகாமைப் போல ஆயத்தம், அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம், நம்பிக்கை காணப்பட்டால், தேவன் தமது வல்லமையினால் அற்புதங்களைச் செய்வார்.

இரண்டாவதாக
சங்.106:7ஆம் வசனத்தில், “எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்”. எகிப்து தேசத்திலே தேவன் தனது பலத்த சத்துவத்தாலும், ஓங்கிய புயத்தினாலும் செய்த வாதைகளையும் அதிசயங்களையும் இஸ்ரவேலர் உணரவில்லை. தேவன் தங்களை மீட்கும்படி எகிப்தியரின் தேவர்கள்மேல் எவ்வாறு தமது நியாயத்தீர்ப்பை செலுத்தினார் என்று உணராமலும், நினைத்து துதியாமலும், வணங்கா கழுத்துள்ளவர்களாய் இருதயத்தை கடினப்படுத்திக்கொண்டு தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தார்கள்.


தேவனுடைய அற்புதங்களை உணர்ந்து பார்த்து, நன்றியுடன் துதிக்க வேண்டும். தேவனை ஆராதிக்கும்போது தேவன் நம்மை தமது வல்லமையினாலும், அவருடைய வேத வசனங்களினாலும் தொடுகிறார். தேவன் தொடுவதை உணர்ந்துபார்த்து, ஸ்தோத்திரம் சொல்லி மகிமைப்படுத்து. நீ விழிப்புள்ள மனதுடன் நாம் தேவனால் தான் இம்மட்டுமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று உணர்ந்து அவருடைய அதிசயங்களை எண்ணி, மக்களுக்கு விவரித்து சொல்லு. இருதய கடினத்துக்கு இடம் கொடுத்ததால் உன் வாழ்வில் அதிசயம் தடைபடும்.

மூன்றாவதாக
1நாளா.16:13ஆம் வசனத்தில் “அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்”. தேவனுடைய அதிசயங்களை நாம் நினைத்து உள்ளம் உருகி நன்றியுடன் துதிக்க வேண்டும். அவர் செய்த உபகாரங்களை நினைக்க வேண்டும். மறக்க கூடாது. எண்ணிப் பார், தேவன் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய், புறஜாதிகளுக்கு முன்பாக அவர் நாமம் தரித்த நமக்கு அவர் செய்த புண்ணியங்களை நினைத்து துதித்து ஆராதிக்க வேண்டும். நன்றியால் இதயம் பொங்க துதித்தால், மேலும் அவர் அதிசயம் செய்வார். குடிசபநவ nடிவ யடட ழளை நெநேகவைள.

நான்காவதாக
சங்கீதம் 96:3 வசனத்தில் “ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்”. எல்லா ஜாதியாருக்கும், அவர் நம் வாழ்வில் செய்த அதிசயங்களை விவரித்துச் சொல்ல வேண்டும். சங்கீதம் 105:2 வசனத்தில், “அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்”.
தேவனை அவருடைய அதிசயமான கிரியைகள் நிமித்தம் பாடி சங்கீதங்களால் மகிமைப்படுத்த வேண்டும். மாடு அசைபோடுவது போல திரும்பத் திரும்ப வாயினால் சொல்லி மகிமைப்படுத்த வேண்டும். னபைநளவ பண்ணு, தியானித்து பேசுங்கள். சங்.105:1 வசனத்தில் “கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்” என்று தாவீது கூறுகிறார். தேவன் செய்த நன்மைகளை ஜனங்கள் நடுவே பிரசித்தப்படுத்தி அவரைப் புகழ்ந்தால், மேலும் அவர் அதிசயங்களைச் செய்வார். பெற்ற நன்மைகளை மறைத்து வைத்து அவரை மகிமைப் படுத்தாவிட்டால் அதிசயம் தடைபடும்.

ஐந்தாவதாக
சங்.107:9ஆம் வசனத்தில் “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக”. சங்.107:22ஆம் வசனத்தில் ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக. தேவனே எனக்கு இதைச் செய்தார் என்று துதியுங்கள். மேலும் சங்.119:71ஆம் வசனத்தைப் பார்க்கும்போது “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்”. மாற்.11:22,23 வசனங்களின்படி “தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி…” என்பதைப் போன்று நாம் மலைகளோடு பேசவேண்டும். நம்முடைய மலைகள் கடலில் தூக்கி எறியப்படும்படி கட்டளை கொடுத்து அந்த மலைகளோடு (பிரச்சனைகளோடு) விசுவாசத்துடன் நாம் பேசவேண்டும் என்ற இயேசு கூறுகிறார். அப்பொழுது அதிசயம் நிச்சயம் நடக்கும். தடை அகலும்.

ஆறாவதாக
சங்கீதம் 119:18ஆம் வசனத்தில், “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி, என் கண்களைத் திறந்தருளும்”. நாமும், தேவனே என் வாழ்வில் உமது வேதத்தின் அதிசயங்களை காணவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். செங்கடலில் வழிதிறந்து இஸ்ரவேலரை மீட்டு பார்வோனின் கைக்குத் தப்புவித்ததுபோல என் வாழ்விலும் புதிய பாதைகளைத் திறந்தருளும். இயற்கைக்கு மேற்பட்ட அற்புதங்களை என் வாழ்க்கையில் நடத்தும் என்று ஜெபியுங்கள்.

ஏழாவதாக
யோசுவா 3:5 “யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” என்றான். நாம் நம்மைப் பரிசுத்தம் செய்யும்போது நாம் எதிர்பாராத பெரிய ஆச்சரியமான காரியங்களை நம் வாழ்வில் தேவன் செய்வார். மத்.12:19ல் “வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.” அவர் பரிசுத்தராக இருந்தபடியால் கர்த்தத்துவமும் ஆளுகையும் உடையவராக காணப்பட்டார். பரிசுத்தம் நம்மை அவரோடுகூட ஆளுகைக்குப் பங்குள்ளவர்களாக மாற்றும்.


பரிசுத்தமாகிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ நான் சீக்கிரம் வருகிறேன் என்றார். பரிசுத்தம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் வர வாஞ்சித்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மைப் பரிசுத்த ஆவியானவர் சுத்திகரிக்க விட்டுக்கொடுக்க வேண்டும். தேவன் இஸ்ரவேலரின் வாழ்க்கையில் பெரிய காரியங்களையும் அதிசயங்களையும் செய்து மகிமைப்பட்டார். இஸ்ரவேலர் விசுவாசிக்காவிட்டாலும் மோசே மூலமாய் செங்கடல் இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. பிறகு கில்காலில் உன்னைப் பரிசுத்தப்படுத்தினால்தான் அதிசயம் செய்வேன் என்கிறார். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்குள் வழிநடத்திச் செல்லும் முன்பு அவர்களைப் பரிசுத்தப்படுத்தி அழைத்துச் சென்றார். நாமும் பரம கானான் சென்றடைய பரிசுத்தம் அவசியம். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This